மேலும் அறிய

நுகர்வோருக்கான விழிப்புணர்வு குறித்த கூட்டத்தில் காலாவதியான குடிநீர் பாட்டில் விநியோகம்- மாணவர்கள் அதிர்ச்சி

திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் மாணவர்களுக்கு நுகர்வோருக்கான உரிமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தெரிவித்தார்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தலைமை தாங்கினார். உதவி ஆட்சியர் (பயிற்சி) கட்டாரவிதேஜா முன்னிலை வகித்தார். மாவட்ட வழங்கல் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். 

 மாவட்ட ஆட்சியர் முருகேஷ் பேசியபோது; நாம் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும் என்பதற்காகவும்,நுகர்வோர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அனைவருக்கும் தேவை என்றும் இந்த தினத்தின் முக்கிய நோக்கமே மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது தான். ஆனால் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டு உள்ளதா என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகிறது.

நுகர்வோருக்கான விழிப்புணர்வு குறித்த கூட்டத்தில் காலாவதியான குடிநீர் பாட்டில் விநியோகம்- மாணவர்கள் அதிர்ச்சி

வெளிநாட்டவர்களுக்கு விழிப்புணர்வு உள்ளது. ஆனால் திருவண்ணாமலையை சேர்ந்த மக்களுக்கு விழிப்புணர்வு இல்லை. ஏனென்றால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களை விட திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிக அளவு கிராமப்புற மக்கள் உள்ளனர். வாடிக்கையாளர்கள் தங்களுக்கு உரிமை என்ன உள்ளது என்பது குறித்து தெரிந்திருக்க வேண்டும்.

வாடிக்கையாளர்கள் இது போன்ற விழிப்புணர்வு இல்லாததால் கடந்த சில தினங்களுக்கு முன்பு நமது மாவட்டத்தில் பிரியாணி சாப்பிட்டு ஒரு சிறு குழந்தை இறந்துள்ளது மற்றும் தார் சாலையில் காலாவதியான சாக்லெட்டுகளை கீழே இருந்துள்ளது அதனை அப்பகுதியில் உள்ள குழந்தைகள் எடுத்து சாப்பிட்டனர். இதனால் அவர்களுக்கு வாந்தி அல்லது மயக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. 

நுகர்வோருக்கான விழிப்புணர்வு குறித்த கூட்டத்தில் காலாவதியான குடிநீர் பாட்டில் விநியோகம்- மாணவர்கள் அதிர்ச்சி

வாடிக்கையாளர்கள் நாம் அன்றாடம் வாங்கும் பொருட்களை வாங்கும்போது அவை காலாவதியாகி விட்டதா, தரமாக உள்ளதா என்பதை கண்டறிந்து வாங்க வேண்டும். நுகர்வோர்களிடம் கேள்வி கேட்கும் உரிமை அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் உள்ளது. ஏன், எதற்கு என்ற கேள்வி மக்கள் கேட்க வேண்டும். அவ்வாறு கேட்பதே முதல் விழிப்புணர்வு ஆகும். பள்ளி, கல்லூரி மாணவ -மாணவிகள் மற்றும் சுய உதவிக் குழுக்களை சேர்ந்தவர்கள் நுகர்வோருக்கான உரிமைகள் குறித்து பொதுமக்களுக்கும் முக்கியமாக கிராமப்புற பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென இவ்வாறு பேசினார்.மாவட்ட ஆட்சியர் விழிப்புணர்வு குறித்து பேசிக்கொண்டிருந்தபோது இதனை கேட்டிருந்த பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் சுய உதவிக் குழுவினருக்கு அங்கு தண்ணீர் பாட்டில் மற்றும் இனிப்பு வகைகள் வழங்கப்பட்டது.

அப்போது மாணவ மாணவிகள் வழங்கப்பட்ட குடிநீரை எடுத்து அதில் ஒட்டியிருந்த ஸ்டிக்ரில் தண்ணீர் பாட்டில் காலாவதியாகி விட்டதா, தரமாக உள்ளதா என்பதை மாணவர்கள் பார்த்தனர்

நுகர்வோருக்கான விழிப்புணர்வு குறித்த கூட்டத்தில் காலாவதியான குடிநீர் பாட்டில் விநியோகம்- மாணவர்கள் அதிர்ச்சி

 அதில் எந்தவிதமான தேதிகளும் இல்லை இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கக்கூடிய தண்ணீர் பாட்டிலேயே அதிகாரிகள் சரியாக பார்த்து வாங்க வில்லை பின்னர் பொதுமக்களிடம் எப்படி விழிப்புணர்வு இருக்கும் என மாணவர்கள் முணுமுணுத்தனர். இதற்க முன்னதாக நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் உரிமைகள் தின விழாவையொட்டி பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு கட்டுரை, பேச்சுப்போட்டி, கவிதை போட்டிகள் நடத்தப்பட்டன.அந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.

இதில் திருவண்ணாமலை கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் நடராஜன், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ராமகிருஷ்ணன், பொதுவினியோகத் திட்ட துணைப்பதிவாளர் ஆரோக்கியராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்" பொங்கலை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் போட்ட பதிவு!
"ரூ 1,000 கோடி நிலுவைத்தொகையை விடுவிங்க" உரிமையுடன் கேட்ட முதல்வர்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
சுனாமி எச்சரிக்கை.. ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்.. வெளியான அலர்ட்!
சுனாமி எச்சரிக்கை.. ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்.. வெளியான அலர்ட்!
"அனைவரையும் சமமாக பாருங்க.. அதுதான் சமூக நீதி" திமுக அரசை மீண்டும் சீண்டும் ஆளுநர் ரவி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP state executive: மாணவிக்கு பாலியல் தொல்லை.. தலைமறைவான BJP  நிர்வாகி! தட்டித்தூக்கிய காவல் துறை!Velumani Vs Munusamy | கே.பி.முனுசாமி Vs எஸ்.பி.வேலுமணி.. பிரிந்து நிற்கும் MLA-க்கள்! தலைவலியில் EPSVijay Vs Ajith : அஜித்தை கண்டுக்காத விஜய் TN BJP New Leader : சென்னை வரும் கிஷன் ரெட்டி தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்? பரபரக்கும் சீனியர்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்" பொங்கலை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் போட்ட பதிவு!
"ரூ 1,000 கோடி நிலுவைத்தொகையை விடுவிங்க" உரிமையுடன் கேட்ட முதல்வர்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
சுனாமி எச்சரிக்கை.. ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்.. வெளியான அலர்ட்!
சுனாமி எச்சரிக்கை.. ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்.. வெளியான அலர்ட்!
"அனைவரையும் சமமாக பாருங்க.. அதுதான் சமூக நீதி" திமுக அரசை மீண்டும் சீண்டும் ஆளுநர் ரவி!
Metro Time Table for Pongal; பொங்கல் விடுமுறை நாட்களில் மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... வெளியான முக்கிய அறிவிப்பு
பொங்கல் விடுமுறை நாட்களில் மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... வெளியான முக்கிய அறிவிப்பு
பிராமண தம்பதிகள் 4 குழந்தைகள் பெற்றால்... - பம்பர் பரிசை அறிவித்த அமைச்சர்! ம.பியில் சலுகை!
பிராமண தம்பதிகள் 4 குழந்தைகள் பெற்றால்... - பம்பர் பரிசை அறிவித்த அமைச்சர்! ம.பியில் சலுகை!
TN Rain: மக்களே உசார்.! சென்னை முதல் குமரி வரை;  இன்று இரவு 27 மாவட்டங்களில் மழை இருக்கு
TN Rain: மக்களே உசார்.! சென்னை முதல் குமரி வரை; இன்று இரவு 27 மாவட்டங்களில் மழை இருக்கு
பெரியாருக்கு நன்றி செலுத்தும் பெருநாளாக கொண்டாடுவோம் - வாழ்த்து செய்தியிலும் சீமானுக்கு திருமா பதிலடி!
பெரியாருக்கு நன்றி செலுத்தும் பெருநாளாக கொண்டாடுவோம் - வாழ்த்து செய்தியிலும் சீமானுக்கு திருமா பதிலடி!
Embed widget