அண்ணாமலையார் கோவில் இடத்தை பல ஆண்டுகளாக ஆக்கிரமித்த பா.ஜ.க. நிர்வாகி.. கோடிக்கணக்கான சொத்துக்கள் மீட்பு
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு சொந்தமான 23800 சதுரஅடி கொண்ட அம்மணி அம்மன் மடத்தை ஆக்கிரமித்த பாஜக பிரமுகர் வீடு மற்றும் அலுவலகம் இடித்து வருகின்றனர்.
நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நிலம், கடை, வணிக வளாக கட்டிடங்களை தானமாக வழங்கியுள்ளனர். இந்த சொத்துக்கள் அனைத்தும் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வந்து நிர்வகித்து வருகிறது.
கோவில் நிலங்களில் வணிக நிறுவனங்கள் உரிய அனுமதி பெற்று மாத வாடகை, ஆண்டு வாடகை அல்லது குத்தகைக்கு எடுத்து தொகை செலுத்த வேண்டும். இந்நிலையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு சொந்தமான அம்மணி அம்மன் திருக்கோவில் அதனை சுற்றியுள்ள அம்மணி அம்மன் மடத்திற்கு சொந்தமான 23 ஆயிரத்து 800 சதுர அடி இடத்தினை பாஜக ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு மாநில துணைத்தலைவர் சங்கர், பல வருடங்களாக ஆக்கிரமிப்பு செய்து இந்த இடத்தில் இரண்டு அடுக்கு கட்டிடம் கட்டி அனுபவித்து வந்ததுடன் அம்மணி அம்மன் மண்டபத்தில் உள்ள பல்வேறு அறைகளை வாடகைக்கு விட்டு கோவிலுக்கு வாடகைகளை செலுத்தாமல் தானே அனுபவித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
வழக்கறிஞர், இந்து முன்னணி மாவட்ட தலைவர் உள்ளிட்ட போன்ற இந்து அமைப்பு பதவிகளில் இருந்ததால், அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு சொந்தமான இடத்தினை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு கோவில் இடத்தை ஆக்கிரமித்துள்ளார். இதே இடத்தில் தனது வழக்கறிஞர் அலுவலகத்தையும் செயல்படுத்தி வந்தார். இந்நிலையில் இந்த இடம் அண்ணாமலையார் கோவிலுக்கு வகித்துக் கொள்ள வேண்டும் என உயர் நீதிமன்றம் அளித்தில் பாஜக பிரமுகர் சங்கர் திருக்கோவிலுக்கு இந்த நிலத்தையும் மடத்தையும் ஒப்படைக்காமல் தானே ஆக்கிரமித்து வந்தவுடன் பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த இடத்தில் இரண்டு அடுக்கு மாடி கட்டடத்தை கட்சியும் மடத்தில் உள்ள அறைகளை மேல் வாடகைக்கு விடும் அனுபவித்து வந்தார்.
தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்த வழக்கில் நேற்று திருவண்ணாமலை நீதிமன்றம் கோவிலுக்கு சொந்தமான இடத்தினை ஆக்கிரமிப்பு அகற்றி மீட்க வேண்டும் என உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை நகர துணை காவல் கண்காணிப்பாளர் குணசேகரன் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட அதிரடி படை உள்ளிட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு இன்று காலை 7 மணி முதல் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்றது.
மேலும் கட்டடத்துக்கு அருகாமையில் இருந்த டிபன் கடை உள்ளிட்ட பல்வேறு ஆக்கிரமிப்புகளையும் தொடர்ந்து அகற்றினர். மேலும் அம்மணி அம்மன் மடத்தில் இருந்த அறைகளை இந்து சமய அறநிலையத்துறை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தவுடன் வீட்டில் இருந்தவர்களை காலி செய்து வீட்டிற்கு சீல் வைத்தனர். நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து இந்த கட்டிடம் அகற்றும் பணி முழுவதும் மாலை நேரத்தில் நிறைவடைந்தது.