(Source: ECI/ABP News/ABP Majha)
திருவண்ணாமலை : இன்று புதிதாக 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று புதியதாக 28 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது . மாவட்ட முழுவதும் தடுப்பூசி 100 நபர்களுக்கு போடப்பட்டுள்ளது
திருவண்ணாமலை மாவட்டத்தில், கொரோனா தொற்றின் முதல் பாதிப்பு கடந்த 2020 மார்ச் மாதம் கண்டறியப்பட்டது.அதைத்தொடர்ந்து, கடந்த 21 மாதங்களில் முதல் அலை மற்றும் இரண்டாவது அலை உட்பட மொத்தம் 55,454 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், இரண்டாவது அலையின் தீவிரம் படிப்படியாக குறைந்திருந்த நிலையில், ஒமிக்ரான் தொற்று மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியது. மேலும், கொரோனா தொற்று பரவல் கடந்த ஒரு வாரமாக தீவிரமடைந்திருக்கிறது. கடந்த 1-ஆம் தேதி நிலவரப்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் தினசரி பாதிப்பு 6 பேர் என்ற அளவில் இருந்தது. ஆனால், நேற்று தொற்றினால் பாதிக்கப்படவில்லை
இதுவரை மாவட்டத்தில் 67 ஆயிரத்து 265 பேர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு, 66 ஆயிரத்து 395 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மேலும் இன்று கொரோனா தொற்றால் 28 நபர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது, இன்று கொரோனா தொற்றால் இன்று உயிரிழப்பு இல்லை . இதுவரையில் கொரோனா தொற்றால் இறந்தவர்கள் 685-ஆக உயர்ந்துள்ளது.மேலும் கொரோனா வைரஸ் தொற்று க்காக திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை பழைய மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, செய்யார் மருத்துவமனையில் போன்ற இடங்களில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் தற்போது 184 நபர்கள் சிகிச்சையில் உள்ளனர். மாவட்டத்தில் கொரோனா பரவல் மேலும் அதிகரித்தும் , பாதிப்பு வெகுவாக அதிகாரிக்க வாய்ப்புள்ளது. இந்த புள்ளி விவரங்கள் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகள் ஆரம்ப சுகாதார நிலையங்கள் போன்ற இடங்களில் நேரடியாக கொடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகள் அடிப்படையில் வெளியானவையாகும். வெளி மாவட்டங்களில் பரிசோதனை செய்து பாதிப்பு உறுதி செய்யப்பட்ட திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை இந்த புள்ளிவிவரத்தில் சேர்க்கப்படவில்லை என சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் இன்றைய கொரோனா தடுப்பூசி நிலவரம்
அதனைத் தொடர்ந்து, அரசு வழிகாட்டுதலின்படி கொரோனா இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி ஒன்பது மாதங்களுக்குப் பின்பு இந்த பூஸ்டர் தடுப்பூசியை எடுத்துக்கொள்ளலாம் என்றும் வழிகாட்டு நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டது. தொடங்கப்பட்ட கொரோனா பூஸ்டர் தடுப்பு ஊசியை அரசு ஊழியர்கள், முன்கள பணியாளர்கள் இன்று நபர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி உள்ளனர். இதில் மாவட்ட முழுவதும் முதல் தவணை, இரண்டாம் தவணை மற்றும் பூஸ்டர் தடுப்பு ஊசியை 100 நபர்கள் செலுத்திக்கொண்டனர். மேலும் தடுப்பூசி செலுத்தும் அனைத்து மையங்களிலும் பூஸ்டர் தடுப்பு ஊசிக்கு தகுதியானவர்கள் செலுத்திக் கொள்ளலாம் என்றும் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி எந்த நிறுவனம் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது அதே தடுப்பு ஊசி செலுத்தப்படும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )