மேலும் அறிய

பருவமழை தொடங்குவதற்கு முன் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் - அதிகாரிகளுக்கு திருவண்ணாமலை ஆட்சியர் அறிவுறுத்தல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள், நீர்வரத்து கால்வாய்களை உள்ள ஆக்கிரமிப்புகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக அகற்ற வேண்டும் - மாவட்ட ஆட்சியர் முருகேஷ்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கி மாவட்ட ஆட்சியர் பா. முருகேஷ் பேசிய போது;  திருவண்ணாமலை மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ளும் விதமாக 12 தாலுகாக்களுக்கும் துணை துணை ஆட்சியர்கள், 12 நியமன அலுவலர்கள் நியமிக்கப்பட்டு அவர்களின் தலைமையில் முன்னெச்சரிக்கை அறிவிப்பு குழு, தேடுதல் மற்றும் மீட்பு குழு, வெளியேற்றக் குழு மற்றும் நிவாரண மையம், தங்குமிடம் மேலாண்மை குழு ஆகிய 4 குழுக்கள் மற்றும் 4 நகராட்சிகளுக்கும் நகராட்சி ஆணையர்களை நியமன அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

பருவமழை தொடங்குவதற்கு முன் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் -  அதிகாரிகளுக்கு திருவண்ணாமலை ஆட்சியர் அறிவுறுத்தல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் இயல்பை விட அதிகமாக பருவமழை பெய்து வருகிறது. மழை வெள்ளம் தொடர்பாக பொது மக்கள் தங்கள் சந்தேகங்களுக்கு தொடர்பு கொள்ளும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணிநேரமும் செயல்படும் வகையில் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்கள் வடகிழக்கு பருவமழை தொடர்பான தங்களின் சந்தேகங்களை, மழை வெள்ளகாலங்களில் அத்தியாவசிய தேவைகளுக்கு கட்டணமில்லா தொலைபேசிஎண் - 1077, மற்றும் 04175-232377 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என்றும், திருவண்ணாமலை தாலுகாவை தவிர மற்ற தாலுகாக்களில் வசிப்பவர்கள் தொலைபேசி எண். 04175-1077 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம் என்றும், மேலும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள், பழைய பழுதடைந்த வீடுகளில் வசிக்கும் மக்களை தொடர் மழையின் போது பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு தற்காலிக நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

பருவமழை தொடங்குவதற்கு முன் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் -  அதிகாரிகளுக்கு திருவண்ணாமலை ஆட்சியர் அறிவுறுத்தல்

கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு நிவாரண மையத்தில் தங்குவது குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவித்தால் உடனடியாக அவர்களை நிவாரண மையங்களுக்கு கொண்டு சென்று தங்க வைத்து அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது என்றும் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து பொது மக்கள் மழை வெள்ள காலத்தில் சுவர் இடிந்து விழுந்து ஏற்படும் மனித உயிரிழப்புகளை தவிர்க்க மழைக்காலத்தில் பாதுகாப்பான இடத்தில் தங்க வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் மாவட்டத்தில் 96 நீர்நிலைகள் முழுவதும் நிரம்பிய நிலையில் நீர் தேக்கம் மற்றும் அணைகளை கனமழை பெய்யும் காலங்களில் அவ்வப்போது நீர்தேக்க அளவினை கண்காணிக்க வேண்டும் என்றும் கூறினார்.

பருவமழை தொடங்குவதற்கு முன் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் -  அதிகாரிகளுக்கு திருவண்ணாமலை ஆட்சியர் அறிவுறுத்தல்

மேலும் பொதுமக்கள் பாதுகாப்பற்ற முறையில் அங்கு சென்று புகைப்படம் எடுப்பது, குளிப்பது மற்றும் சிறுவர்கள் அப்பகுதிகளில் சென்று விளையாடுவது போன்ற செயல்பாடுகளின் போது கவனக்குறைவால் நீரில் மூழ்கி மனித உயிரிழப்பு ஏற்படும் அபாய நிலையும் உள்ளது. எனவே பொதுமக்கள் அப்பகுதிகளுக்கு செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். நீர்நிலைகளில் மற்றும் நீர்வரத்து கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்பை சம்பந்தப்பட்ட துறையின் மூலமாக உடனடியாக அகற்றப்பட வேண்டும் என்று இவ்வாறு பேசினார். இந்த கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, வேளாண்மை இணை இயக்குனர் பாலா, ஆட்சியர் நேர்முக உதவியாளர்கள் கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

முஸ்லிம் வாக்குகளை குறிவைக்கும் விஜய்.. செயற்குழு கூட்டத்தில் கச்சிதமாக வேலையை முடித்த தவெக!
முஸ்லிம் வாக்குகளை குறிவைக்கும் விஜய்.. செயற்குழு கூட்டத்தில் கச்சிதமாக வேலையை முடித்த தவெக!
EPS Slams DMK:
EPS Slams DMK: "2026 வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக அமையும்" - எடப்பாடி பழனிசாமி
"திருவள்ளுவருக்கு வர்ணம் பூசுறாங்க" பாஜகவுக்கு எதிரான ஸ்கெட்ச்.. அடித்து ஆடும் தவெக விஜய்!
பாலக்காடு அருகே எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 4 பேர் உயிரிப்பு
பாலக்காடு அருகே எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 4 பேர் உயிரிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

IND vs NZ  Highlights | கோலியின் மோசமான பேட்டிங்வாஷ் அவுட் ஆன இந்திய அணி வரலாறு படைத்த நியூசிலாந்துDhanush Aishwarya | ரஜினி வீட்டில் நடந்த மீட்டிங்?இணையும் தனுஷ் ஐஸ்வர்யா குஷியில் சூப்பர் ஸ்டார்!TVK VCK Flag issue | அகற்றப்பட்ட தவெக கொடி   மறியலில் இறங்கிய மக்கள்   களத்துக்கு வந்த போலீசார்Vijay Thiruma meeting :”ஒரே மேடையில் திருமா, விஜய்”ஆதவ் அர்ஜுனா SKETCH!திமுகவை அதிரவைத்த உளவுத்துறை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முஸ்லிம் வாக்குகளை குறிவைக்கும் விஜய்.. செயற்குழு கூட்டத்தில் கச்சிதமாக வேலையை முடித்த தவெக!
முஸ்லிம் வாக்குகளை குறிவைக்கும் விஜய்.. செயற்குழு கூட்டத்தில் கச்சிதமாக வேலையை முடித்த தவெக!
EPS Slams DMK:
EPS Slams DMK: "2026 வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக அமையும்" - எடப்பாடி பழனிசாமி
"திருவள்ளுவருக்கு வர்ணம் பூசுறாங்க" பாஜகவுக்கு எதிரான ஸ்கெட்ச்.. அடித்து ஆடும் தவெக விஜய்!
பாலக்காடு அருகே எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 4 பேர் உயிரிப்பு
பாலக்காடு அருகே எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 4 பேர் உயிரிப்பு
TVK Resolution: 2026க்கு அச்சாரம் போடும் தவெகவின்  26 தீர்மானங்கள்: அக்ரசிவ் மோடில் திமுக - பாஜகவை தாக்கிய விஜய்.!
TVK Resolution: 2026க்கு அச்சாரம் போடும் தவெகவின் 26 தீர்மானங்கள்: அக்ரசிவ் மோடில் திமுக - பாஜகவை தாக்கிய விஜய்.!
"தமிழக மக்களை ஏமாற்றும் திமுக அரசு" இறங்கி அடித்த விஜய்.. 2026ஐ குறிவைக்கும் தவெக!
IND Vs NZ:  வரலாற்றில் மோசமான தோல்வி - நியூசிலாந்திடம் 3-0 என டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி
IND Vs NZ: வரலாற்றில் மோசமான தோல்வி - நியூசிலாந்திடம் 3-0 என டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி
WTC Points Table: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல் - இந்தியாவிற்கு பேரிடி, ஃபைனல் வாய்ப்பு இருக்கா?
WTC Points Table: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல் - இந்தியாவிற்கு பேரிடி, ஃபைனல் வாய்ப்பு இருக்கா?
Embed widget