மேலும் அறிய

பாஜக பிரமுகரால் ஆக்கிரமிக்கப்பட்ட இடம்: அமைச்சர் சேகர்பாபு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

தமிழ்நாடு அரசு பொறுப்பேற்று நாளில் இருந்து 4250 கோடி மதிப்பிலான இந்து சமய அறநிலையத்துறையின் இடங்கள் மீட்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் வருகின்ற மே 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் ஆண்டிற்கு ஒரு முறை வரக்கூடிய சித்ரா பௌர்ணமியன்று திருவண்ணாமலைக்கு 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் வருவார்கள் சாமி தரிசனம் செய்வார்கள் அதன் அடிப்படையில் இன்று இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நிற்பதற்கு தேவையான நிழல்பந்தல் அமைப்பது குறித்தும், கோடை வெயிலிலிருந்து பக்தர்கள் தங்களை காத்துக் கொள்ளும் வகையில் வழிநெடுகிலும் அவர்களுக்கு நீர் நீர்மோர் வழங்குவது குறித்தும், விரைவில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு உண்டான வழிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

பாஜக பிரமுகரால் ஆக்கிரமிக்கப்பட்ட இடம்: அமைச்சர் சேகர்பாபு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

முன்னதாக சாமி தரிசனம் செய்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்களுக்கு திருக்கோவில் சார்பில் மரியாதை செய்யப்பட்டது. அண்ணாமலையார் திருக்கோவிலில் பல்வேறு இடங்களில் ஆய்வுப் பணியை முடித்துக் கொண்டு வந்த அமைச்சர் நீண்ட வரிசையில் காத்திருந்த ஆன்மீக பக்தர்களுக்கு மோர் வழங்கினார்.அதனை தொடர்ந்து வடக்கு அம்மனி அம்மன் கோபுரம் அருகே பல ஆண்டுகளாக பாஜக ஆன்மீகம் மற்றும் மேம்பாட்டு பிரிவின் மாநில துணைத்தலைவர் 23800 சதுர அடியில் ஆக்கிரமிப்பில் இருந்த 100 கோடி மதிப்பிலான அம்மணி அம்மன் மடத்தை இந்து சமய அறநிலையத்துறை மீட்டதையடுத்து இன்று ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சேகர்பாபு. 

பாஜக பிரமுகரால் ஆக்கிரமிக்கப்பட்ட இடம்: அமைச்சர் சேகர்பாபு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

 செய்தியாளர்களை சந்தித இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு பேசுகையில்; 

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியத்தில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த அர்த்தனாரிஸ்வரர் திருக்கோவில் மற்றும் சங்கர வேணுகோபால சுவாமி திருக்கோவில் ஆகிய இரண்டு திருக்கோவில்களிலும் விரைவாக திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்கு நடத்த ஆலோசனை செய்யப்பட்டுள்ளதாகவும், அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவிலுக்கு சொந்தமான இரண்டு குளங்கள் விரைவில் புனரமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.தொடர்ந்து பேசிய அவர், பாஜக பிரமுகரின் பிடியில் இருந்த 100 கோடி மதிப்பிலான இடத்தை தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் தலைமையில் மீட்கபட்டுள்ளதாகவும், விரைவில் இந்த இடத்தில் 2 கோடி மதிப்பில் அம்மணி அம்மாள் கோபுரம் புதுப்பிக்கப்படும் என்றும், மீதமுள்ள இடத்தில் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு பல லட்சம் பக்தர்கள் வருகையொட்டி விரைவில் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

பாஜக பிரமுகரால் ஆக்கிரமிக்கப்பட்ட இடம்: அமைச்சர் சேகர்பாபு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

திருப்பதிக்கு நிகராக படிப்படியாக திருவண்ணாமலையிலும் சிறப்பு தரிசனத்திற்கான நேரம் விரைவில் ஆலோசித்து தெரிவிக்கப்படும் என்றும் , ஆன்மீக பக்தர்களின் வசதிக்காக அனைத்து ஏற்பாடுகளும் விரைவில் செய்து தரப்படும் அதற்கு இந்து சமய அறநிலையத்துறை முன்னெடுக்கும் என்றும் தெரிவித்த அவர், விரைவில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும், தமிழ்நாடு அரசு பொறுப்பேற்று தற்போது வரையிலும் 4250 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் மீட்கப்பட்டுள்ளதாகவும் மீட்பு வேட்டை தொடரும் என்றும் தெரிவித்தார். இந்த ஆண்டு மட்டும் திருவண்ணாமலை மற்றும் சென்னை ஆகிய இடங்களில் பாஜக பிரமுகர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தை பல்வேறு சட்டப் போராட்டங்கள் நடத்தி மீட்டுள்ளதாகவும், இதுபோன்று ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கப்படும் இடங்களில் ஆன்மீக பக்தர்களுக்கு பயன்படுத்துகின்ற வகையில், பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்ய ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும்,

பாஜக பிரமுகரால் ஆக்கிரமிக்கப்பட்ட இடம்: அமைச்சர் சேகர்பாபு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

வருகின்ற சித்ரா பௌர்ணமி நாட்களில் அண்ணாமலையார் திருக்கோவிலில் இடைத்தரகர்கள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு ஆன்மீக பக்தர்கள் தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் தெரிவித்தார். அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு யானை வருவது குறித்த கேள்விக்கு பதில் அளித்தவர், யானையை வாங்கு வாங்குவதற்கு சட்டத்தில் இடம் இல்லை என்றும், உரிய அனுமதி பெற்று யானையை வளர்த்து வருபவர்கள் திருக்கோவிலுக்கு தானமாக அளித்தால் அதனை தாங்கள் ஏற்றுக் கொள்வோம் என்றும், யானை வாங்குவது குறித்து நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு மேல்முறையீடு தமிழ்நாடு அரசாங்கம் செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.சித்ரா பௌர்ணமி தினத்தன்று திருவண்ணாமலைக்கு வருகை தரும் பக்தர்களுக்கு நிழற்பந்தல் அமைப்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர் தேவை என்றால் நிச்சயமாக பக்தர்களின் வசதிக்காக எதுவாக இருந்தாலும் செய்வதற்கு முயற்சிப்போம் என்று தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone LIVE:  இன்று மாலை கரையை கடக்கிறது ஃபெஞ்சல் புயல் - வானிலை ஆய்வு மையம்
Fengal Cyclone LIVE: இன்று மாலை கரையை கடக்கிறது ஃபெஞ்சல் புயல் - வானிலை ஆய்வு மையம்
Red Alert: மக்களே அலர்ட்.! இன்று மாலைவரை 8 மாவட்டங்களில் அதிகனமழை இருக்கு.!
Red Alert: மக்களே அலர்ட்.! இன்று மாலைவரை 8 மாவட்டங்களில் அதிகனமழை இருக்கு.!
Fengal Cyclone: கொட்டும் மழை; பயணிகளே இதை உடனடியா செய்ங்க- சென்னை மெட்ரோ எச்சரிக்கை!
Fengal Cyclone: கொட்டும் மழை; பயணிகளே இதை உடனடியா செய்ங்க- சென்னை மெட்ரோ எச்சரிக்கை!
கனமழை எதிரொலி: அம்மா உணவகங்களில் இலவச உணவு: எப்போது? எவ்வளவு நாட்கள்? - முதலமைச்சரின் அறிவிப்பு
கனமழை எதிரொலி: அம்மா உணவகங்களில் இலவச உணவு: எப்போது? எவ்வளவு நாட்கள்? - முதலமைச்சரின் அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஒரே குடும்பம், 3 கொலைகள்! நள்ளிரவில் நடந்த பயங்கரம்! வெளியான திடுக் தகவல்Kallakurichi School Issue : பாத்திரம் கழுவிய மாணவிகள்! அரசுப் பள்ளியில் அவலம்! பகீர் வீடியோBus Accident : எமன் ஆன U TURN..! நேருக்கு நேர் மோதிய வாகனங்கள் பதறவைக்கும் CCTV காட்சிகள்Keerthi Suresh Marriage : ’’இன்னும் ஒரு மாசம் தான்..கோவா-ல கல்யாணம் !’’வெட்கப்பட்ட கீர்த்தி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone LIVE:  இன்று மாலை கரையை கடக்கிறது ஃபெஞ்சல் புயல் - வானிலை ஆய்வு மையம்
Fengal Cyclone LIVE: இன்று மாலை கரையை கடக்கிறது ஃபெஞ்சல் புயல் - வானிலை ஆய்வு மையம்
Red Alert: மக்களே அலர்ட்.! இன்று மாலைவரை 8 மாவட்டங்களில் அதிகனமழை இருக்கு.!
Red Alert: மக்களே அலர்ட்.! இன்று மாலைவரை 8 மாவட்டங்களில் அதிகனமழை இருக்கு.!
Fengal Cyclone: கொட்டும் மழை; பயணிகளே இதை உடனடியா செய்ங்க- சென்னை மெட்ரோ எச்சரிக்கை!
Fengal Cyclone: கொட்டும் மழை; பயணிகளே இதை உடனடியா செய்ங்க- சென்னை மெட்ரோ எச்சரிக்கை!
கனமழை எதிரொலி: அம்மா உணவகங்களில் இலவச உணவு: எப்போது? எவ்வளவு நாட்கள்? - முதலமைச்சரின் அறிவிப்பு
கனமழை எதிரொலி: அம்மா உணவகங்களில் இலவச உணவு: எப்போது? எவ்வளவு நாட்கள்? - முதலமைச்சரின் அறிவிப்பு
ஃபெஞ்சல் புயல் : சுளுக்கு எடுக்கும் சூறாவளி காற்று... சாலையில் விழும் மரங்கள்; ஸ்தம்பிக்கும் ECR
ஃபெஞ்சல் புயல் : சுளுக்கு எடுக்கும் சூறாவளி காற்று... சாலையில் விழும் மரங்கள்; ஸ்தம்பிக்கும் ECR
Fengal Cyclone: ரெட் அலர்ட்டில் சென்னை; வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம், தவிக்கும் மக்கள் - ஸ்தம்பித்த தலைநகர்
Fengal Cyclone: ரெட் அலர்ட்டில் சென்னை; வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம், தவிக்கும் மக்கள் - ஸ்தம்பித்த தலைநகர்
UP Wedding: விடிந்தால் திருமணம் - இளைஞரை கம்பத்தில் கட்டி அடித்து உதைத்த கிராம மக்கள், நடந்தது என்ன?
UP Wedding: விடிந்தால் திருமணம் - இளைஞரை கம்பத்தில் கட்டி அடித்து உதைத்த கிராம மக்கள், நடந்தது என்ன?
Fengal Cyclone: வெள்ளக் காடாய் மாறிய சாலைகள்! புயலில் சாய்ந்த மரங்கள் - சென்னையை திணறடித்த ஃபெஞ்சல்
Fengal Cyclone: வெள்ளக் காடாய் மாறிய சாலைகள்! புயலில் சாய்ந்த மரங்கள் - சென்னையை திணறடித்த ஃபெஞ்சல்
Embed widget