மேலும் அறிய

திருவண்ணாமலை: ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவர்களுக்கு விவசாய துறையில் பயன்படுத்தும் ட்ரோன் கருவி பயிற்சி

தாட்கோ மூலம் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவர்களுக்கு விவசாய துறையில் பயன்படுத்தும் ட்ரோன் கருவி பயிற்சி அளிக்கப்பட உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தொிவித்து உள்ளார்.

திருவண்ணாமலை தாட்கோ மூலம் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவர்களுக்கு விவசாய துறையில் பயன்படுத்தும் டிரோன் கருவி பயிற்சி அளிக்கப்பட உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தொிவித்து உள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) நிறுவனமானது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை, சேர்ந்த மாணவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சியினை வழங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் டெக்னாலஜி, சென்டர் பார் ஏரோஸ்பேஸ் ரிசர்ச் மூலமாக விவசாயத்துறையில் பயன்படுத்தும் டிரோன் கருவி பயிற்சி அளிக்கப்பட உள்ளது. தற்போது வளர்ந்த நாடுகளில் டிரோன் தொழில் நுட்பம் மூலம் பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் உரங்களை விவசாய நிலங்களில் டிரோன் மூலம் தெளித்து நடைமுறைப்படுத்தும் பணி நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வருகிறது. அதன் மூலம் விவசாய நிலங்களில் உள்ள பயிர்களில் பூச்சி கொல்லி நோய் தாக்கப்பட்டால் குறைந்த நேரத்தில் அதிகமான பரப்பளவில் 25 ஏக்கர் முதல் 30 ஏக்கர் வரை மருந்துகளை தெளித்து முடிக்க முடியும்.

திருவண்ணாமலை: ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவர்களுக்கு விவசாய துறையில் பயன்படுத்தும் ட்ரோன் கருவி பயிற்சி

இதில் ஒரு நாளைக்கு ரூபாய் 10 ஆயிரம் முதல் ரூபாய்15 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம். மேலும் விவசாய பணியாளர்கள் பற்றாக்குறை உள்ள காரணத்தினால் கிராமங்களில் உள்ள மக்களுக்கு டிரோன் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது குறித்து தான் இந்த பயிற்சியின் முக்கிய நோக்கம் ஆகும். இந்த பயிற்ச்சியை  பெற 18 முதல் 45 வயது உடையவர்கள் ஆதிதிராவிடர், மற்றும் பழங்குடியின மாணவர்களும், கல்வித் தகுதியில் 10-ம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களும், பாஸ்போர்ட் உரிமை மற்றும் மருத்துவரின் உடல்தகுதி சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். இந்த பயிற்சிக்கான கால அளவு 10 நாட்கள் ஆகும். இப்பயிற்சியானது கல்வி வளாகம் மற்றும் விவசாய நிலத்தில் 10 நாட்கள் அளிக்கப்படும். பயிற்சிக்கான மொத்த தொகை ரூபாய் 61 ஆயிரத்து 100 தாட்கோவால் வழங்கப்படும்.

திருவண்ணாமலை: ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவர்களுக்கு விவசாய துறையில் பயன்படுத்தும் ட்ரோன் கருவி பயிற்சி

இப்பயிற்சியினை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ட்ரோன் ரிமோட் பைலட் உரிமத்தினை பெறுவார்கள். மேலும் இந்த உரிமை 10 ஆண்டுகளுக்கு செல்லத்தக்கதாகும். இப்பயிற்சியினை பெற்றவர்கள் சொந்தமாகவோ அல்லது தாட்கோ நிதியுதவி மூலமாகவோ டிரோன் கருவிகளை வாங்கலாம். உழவன் செயலி மூலம் தங்கள் சேவைகளை சந்தைப்படுத்தலாம். விவசாய டிரோன்கள் வாங்குவதற்கு வேளாண்மை துறையில் உள்ள மானியம் மற்றும் கடன் திட்டங்கள் மூலமாகவும் அல்லது தாட்கோவின் ரூபாய் 2 லட்சத்து 25 ஆயிரம் மானியத்துடன் வங்கி கடன் வழங்க வழி வகை செய்யப்படும். இத்திட்டத்தில் தகுதியுள்ள ஆதிதிராடர், பழங்குடியினர் மற்றும் திருநங்கைகள் தாட்கோ இணையதளமான www.tahdco.com விண்ணப்பிக்கலாம். தங்குமிடம், உணவும் இத்துறையால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Saindhavi: 24 வருடங்கள்; இனியும் அப்படிதான்: முன்னாள் கணவர் ஜிவிக்காக குரல் கொடுத்த சைந்தவி!
24 வருடங்கள்; இனியும் அப்படிதான்: முன்னாள் கணவர் ஜிவிக்காக குரல் கொடுத்த சைந்தவி!
Anita Goyal: ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை செதுக்கிய நரேஷ் கோயலின் மனைவி மரணம்!
Anita Goyal: ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை செதுக்கிய நரேஷ் கோயலின் மனைவி மரணம்!
செந்தில் பாலாஜியை மேற்கோள் காட்டிய வழக்கறிஞர்! சவுக்கின் போலீஸ் கஸ்டடிக்கு ஓகே சொன்ன நீதிமன்றம்!
செந்தில் பாலாஜியை மேற்கோள் காட்டிய வழக்கறிஞர்! சவுக்கின் போலீஸ் கஸ்டடிக்கு ஓகே சொன்ன நீதிமன்றம்!
ICC T20WC: இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே! ஸ்காட்லாந்துக்கு ஸ்பான்சர் செய்யும் கர்நாடக அரசின் பால் நிறுவனம் “நந்தினி”
ICC T20WC: இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே! ஸ்காட்லாந்துக்கு ஸ்பான்சர் செய்யும் கர்நாடக அரசின் பால் நிறுவனம் “நந்தினி”
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Elephant Video : உறங்கிய குட்டி யானை காவலுக்கு நின்ற யானைகள் இது எங்கள் குடும்பம்Nirmala Sitharaman  : 2 நிமிட கேள்வி..பங்கம்  செய்த இளைஞர்!ஆடிப்போன நிர்மலா!Karthik kumar  : ”நான் அவன் இல்லை”கண்ணீர் மல்க வீடியோ கார்த்திக் உருக்கம்Savukku Shankar : ”மூக்கு நல்லா தான இருக்கு” நாடகமாடிய சவுக்கு? MEDICAL ரிப்போர்ட்டில் அதிர்ச்சி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Saindhavi: 24 வருடங்கள்; இனியும் அப்படிதான்: முன்னாள் கணவர் ஜிவிக்காக குரல் கொடுத்த சைந்தவி!
24 வருடங்கள்; இனியும் அப்படிதான்: முன்னாள் கணவர் ஜிவிக்காக குரல் கொடுத்த சைந்தவி!
Anita Goyal: ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை செதுக்கிய நரேஷ் கோயலின் மனைவி மரணம்!
Anita Goyal: ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை செதுக்கிய நரேஷ் கோயலின் மனைவி மரணம்!
செந்தில் பாலாஜியை மேற்கோள் காட்டிய வழக்கறிஞர்! சவுக்கின் போலீஸ் கஸ்டடிக்கு ஓகே சொன்ன நீதிமன்றம்!
செந்தில் பாலாஜியை மேற்கோள் காட்டிய வழக்கறிஞர்! சவுக்கின் போலீஸ் கஸ்டடிக்கு ஓகே சொன்ன நீதிமன்றம்!
ICC T20WC: இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே! ஸ்காட்லாந்துக்கு ஸ்பான்சர் செய்யும் கர்நாடக அரசின் பால் நிறுவனம் “நந்தினி”
ICC T20WC: இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே! ஸ்காட்லாந்துக்கு ஸ்பான்சர் செய்யும் கர்நாடக அரசின் பால் நிறுவனம் “நந்தினி”
திமுக நிர்வாகி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ராதிகா சரத்குமார் புகார்! என்ன மேட்டர்?
திமுக நிர்வாகி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ராதிகா சரத்குமார் புகார்! என்ன மேட்டர்?
நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
10th 12th Results 2024: குறைந்த தேர்ச்சி பெற்ற 10, பிளஸ் 2 பள்ளி தலைமை ஆசிரியர்கள் சென்னைக்கு அழைப்பு; கல்வித்துறை அதிரடி
10th 12th Results 2024: குறைந்த தேர்ச்சி பெற்ற 10, பிளஸ் 2 பள்ளி தலைமை ஆசிரியர்கள் சென்னைக்கு அழைப்பு; கல்வித்துறை அதிரடி
Breaking News LIVE: யூடியூபர் சவுக்கு சங்கருக்கு ஒருநாள் போலீஸ் காவல்
Breaking News LIVE: யூடியூபர் சவுக்கு சங்கருக்கு ஒருநாள் போலீஸ் காவல்
Embed widget