வந்தவாசி: கஞ்சாவும் கத்தியும்...! விபத்தில் சிக்கிய வாலிபர்... விரைந்து வந்த போலீஸ்...!
வந்தவாசி அருகே இருச்சக்கர வாகனத்தில் வந்த வாலிபர் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். அவரிடம் வீச்சருவாள், கஞ்சா உள்ளிட்டவை இருந்ததால் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வந்தவாசி அருகே இருச்சக்கர வாகனத்தில் வந்த வாலிபர் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். அவரிடம் வீச்சருவாள், கஞ்சா உள்ளிட்டவை இருந்ததால் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வத்தவாசியில் ஆரணி நெடுஞ்சாலை விரிவாக்கப்பணிகள் நடைப்பெற்று வருகிறது. இதற்காக தெள்ளூர் கிராமத்தில் கல்வெட்டு அமைப்பதற்காக சாலை குறுக்கே தற்காலிக வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. இதனை கவனிக்காமல் வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். இந்நிலையில் இரண்டு சக்கர வாகனத்தில் வேகமாக வந்த வாலிபர் ஒருவர் நிலை தடுமாரி தவறி கீழே விழுந்தார். தலையில் படுகாயம் அடைந்த அவர் மயக்கமான நிலையில் இருந்த அவரை அக்கம்பக்கத்தில் இருந்த நபர்கள் அந்த நபருக்கு தண்ணீர் கொடுத்து காப்பாற்றியுள்ளனர். அந்த வாலிபர் வந்த இரண்டு சக்கர வாகனத்தில் வீச்சரிவாள், கஞ்சா பாக்கெட் ஆகியவை இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகம் அடைந்தவர்கள் வந்தவாசி வடக்கு காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.
தகவலறிந்த வந்தவாசி வடக்கு காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் வரதராஜ் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். படுகாயமடைந்த வாலிபரை மீட்டு வந்தவாசி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வாலிபரிடம் சட்டை பாக்கெட்டில் டிரைவிங் லைசென்சில் அவர், செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரை சேர்ந்த ராஜ கோபால் மகன் பிரபாகரன் வயது ( 26) என தெரியவந்தது. தலையில் படுகாயம் அடைந்த பிரபாகரனை மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அதனைத் தொடர்ந்து பிரபாகரனின் இரண்டு சக்கர வாகனத்தில் இருந்து பறிமுதல் செய்த பைக், வீச்சரிவாள், கஞ்சா பொட்டலம் குறித்து செங்கல்பட்டு மாவட்ட காவல்துறையினருக்கு வந்தவாசி காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர்
.
அதன் பேரில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், மேல்மருவத்தூர், செய்யூர் காவல் நிலையத்தில் பிரபாகரன் மீது கஞ்சா, வழிப்பறி போன்ற வழக்குகள் மற்றும் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து விழுப்புரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்த குற்றப்பிரிவு காவல்துறையினர் செங்கல்பட்டு அரசு மருத் துவமனையில் உள்ள பிரபாகரனுக்கு நினைவு திரும்பியதும் அவரிடம் இருந்து கஞ்சா கடத்தல் குறித்தும் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் பிரபாகரன் வேறு மற்ற குற்றச்செயலில் ஈடுபட்ட வந்தாரா என்ற கோணத்தில் விரிவாக விசாரணை நடத்த வந்தவாசி காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்