மேலும் அறிய

புதுக்கோட்டை மாவட்டத்தில் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரம்

கார்த்திகை பண்டிகையை முன்னிட்டு அகல் விளக்குகள் தயாரிக்கும் பணியில் கறம்பக்குடி பகுதி தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திர நாளில் இவ்விழா நடை பெறுவது வழக்கம். முருகபெருமானை சிறு வயதில் வளர்த்த கார்த்திகை பெண்களின் சிறப்பை போற்றும் வகையில் திருக்கார்த்திகை தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் வீடுகளில் இரவு நேரத்தில் அகல் விளக்குகள் ஏற்றப்படும். ஒவ்வொருவரும் தங்கள் வசதிக்கு ஏற்ப 11 விளக்குகள் முதல் 501 விளக்குகள் வரை ஏற்றி வைப்பர். சில பகுதிகளில் தொடர்ந்து 3 தினங்கள் அகல் விளக்குகள் ஏற்றப்படும். இந்த ஆண்டு திருக்கார்த்திகை விழா வருகிற 6-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கறம்பக்குடி பகுதியில் மண்பாண்டங்களுக்கு பிரசித்திபெற்ற மழையூர், நரங்கியப்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் மண் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். சிறிய அகல் விளக்குகள் மட்டுமல்லாமல், அடுக்கு விளக்குகள், அம்மன் உருவ விளக்குகள் என பல விதமான டிசைன்களில் விளக்குகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. வெளியூர்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் கறம்பக்குடி பகுதிக்கு வந்து அகல் விளக்குகளை வாங்கி செல்கின்றனர். தற்போது கறம்பக்குடி பகுதியில் மழை இல்லாததால், விளக்குகளை தயாரிப்பது, காயவைப்பது, சூளையில் இடுவது போன்ற பணிகள் தொய்வின்றி நடைபெற்று வருகின்றன.


புதுக்கோட்டை மாவட்டத்தில் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரம்

இதுகுறித்து கறம்பக்குடி பகுதியில் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் கூறுகையில், "அகல் விளக்குகள் தயாரிப்பில் எங்களுக்கு உழைப்புக்கு ஏற்ற வருவாய் கிடைப்பது இல்லை. இருப்பினும் ஆன்மிகம், வழிபாடு சார்ந்தது என்பதால் தொடர்ந்து இப்பணியில் ஈடுபட்டு வருகிறோம். கொரோனா பெரும் தொற்று, மழை வெள்ளம் போன்ற காரணங்களால் கடந்த 3 ஆண்டுகள் தொழில் பாதிக்கப்பட்டது. இந்த ஆண்டு அகல் விளக்குகள் நல்ல விற்பனை ஆகும் என்ற நம்பிக்கை உள்ளது. 


புதுக்கோட்டை மாவட்டத்தில் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரம்

மேலும் ஒருசிலர் கடந்த ஆண்டுகளில் பயன்படுத்திய பழைய விளக்குகளை பயன்படுத்தி வருகின்றனர். இதுபோன்று மக்கள் பயன்படுத்தினால் எங்களை போன்ற சிறு,குறு தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். பொங்கல் நாளில் புது பானையில் பொங்கல் இடுவது போல் திருக்கார்த்திகை நாளில் புதிய மண் அகல் விளக்குகளில் தீபம் ஏற்றுவதே சாலசிறந்தது. எனவே திருக்கார்த்திகை விழா கொண்டாடும் பொதுமக்கள் புதிய அகல் விளக்குகளில் தீபம் ஏற்றி வீடுகளில் ஒளிர செய்து, மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்விலும் ஒளிஏற்ற வேண்டும்” என்று கூறியுள்ளனர். மேலும் மண் விளக்குகளை ஆண்டுதோறும் புதிதாக வாங்கி பயன்படுத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

தலைப்பு செய்திகள்

விளையாட்டு வீரர்களின் கனவுக்கு பூட்டு... அரசின் கோடிக்கணக்கான முதலீடு வீணாகும் அபாயம்: எங்கு தெரியுங்களா?
விளையாட்டு வீரர்களின் கனவுக்கு பூட்டு... அரசின் கோடிக்கணக்கான முதலீடு வீணாகும் அபாயம்: எங்கு தெரியுங்களா?
தமிழகத்துக்கே முன்மாதிரி... திருடர்களுக்கு ‘செக்’:  ரூ.40 லட்சம் சொந்த நிதியில் 200 சிசிடிவி கேமராக்கள் பொறுத்திய மக்கள்
தமிழகத்துக்கே முன்மாதிரி... திருடர்களுக்கு ‘செக்’:  ரூ.40 லட்சம் சொந்த நிதியில் 200 சிசிடிவி கேமராக்கள் பொறுத்திய மக்கள்
திருச்சி விமான நிலையத்தில் ரூ. 9.21 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் துரிதம்
திருச்சி விமான நிலையத்தில் ரூ. 9.21 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் துரிதம்
3,575 சதுர மீட்டர்...10 ஆயிரம் மரக்கன்றுகள் திருச்சியில் உருவாகிறது அடர்ந்த ‘மியாவாக்கி’ குறுங்காடு!
3,575 சதுர மீட்டர்...10 ஆயிரம் மரக்கன்றுகள் திருச்சியில் உருவாகிறது அடர்ந்த ‘மியாவாக்கி’ குறுங்காடு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - குழந்தை உட்பட 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - குழந்தை உட்பட 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி சாத்தியம்?
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Maruti Baleno: ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Embed widget