Trichy: வாரிசு சான்றிதழ் வாங்கி தருவதாக ஏமாற்றிய சமூக ஆர்வலர் - திருச்சியில் பெண் தீக்குளிக்க முயற்சி
வாரிசு சான்றிதழ் வாங்கி தருவதாக சமூக ஆர்வலர் மற்றும் வழக்கறிஞர் இணைந்து 8 லட்சம் ரூபாயை ஏமாற்றியதால் விரக்தியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சி செய்த பெண்ணால் பரபரப்பு.
இந்நிலையில் இவர்கள் இருவர் மீதும் ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக அமலா சாந்தினி மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார். பையில் வைத்திருந்த வாட்டர் பாட்டிலில் இருந்த மண்ணெண்ணெயை வேகமாக எடுத்து அவர், ‘என் பணத்தை மீட்டு தாருங்கள்” என்று அழுதபடி மேலே ஊற்றிக் கொண்டார். இதனை அடுத்து உடனடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக கூடியிருந்த காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தினர். தனது மனைவியின் பெரியம்மாவுடைய சம்மதத்தோடு கொஞ்சம் சொத்தை எழுதி வாங்க வாரிசு சான்றிதழுக்கு சென்று தற்போது கையில் இருந்த மொத்த பணம், நகையை விட்டுவிட்டு நிற்பதாக அவரது கணவர் வேதனை தெரிவித்தார். வாரிசு சான்றிதழ் வாங்கி தருவதாக சமூக ஆர்வலர் மற்றும் வழக்கறிஞர் இணைந்து 8 லட்சம் ரூபாயை ஏமாற்றியதால் விரக்தியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சி செய்த பெண் , காவல்துறையில் பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என்று வேதனை அளிப்பதாக தெரிவித்தனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்