மேலும் அறிய

பெரம்பலூர்: மருந்துக்கடை உரிமையாளர் கொலை: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

பெரம்பலூர் மாவட்டத்தில் மருந்துகடை உரிமையாளர் அடித்து கொலை செய்த வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும், இழப்பீடு வழங்க வேண்டும் என கிராம மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர் மாவட்டம்  லாடபுரம் சிவன் கோவில் தெருவை சேர்ந்த மருந்தக உரிமையாளர் நாகராஜன் மாமூல் தர மறுத்ததால், அவரை அடித்துக்கொலை செய்த வழக்கில் 4 பேரை பெரம்பலூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த நிலையில் நாகராஜன் கொலைக்கு நீதி கேட்டு லாடபுரம் கிராம மக்கள் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தை முற்றுகையிட்டு, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அவர்கள், நாகராஜன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளான சந்தோஷ், நவீன் ஆகிய 2 பேரை கைது செய்ய வேண்டும். ஏற்கனவே கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாமூல் கேட்கும் ரவுடிகளை கைது செய்ய வேண்டும். கிராமத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்த நாகராஜன் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும். கிராம மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும். எங்கள் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்க காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். 


பெரம்பலூர்: மருந்துக்கடை உரிமையாளர் கொலை: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

மேலும் இது தொடர்பாக கலெக்டரை சந்தித்து மனு கொடுக்க வேண்டும் என்றனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களிடம், சிலர் சென்று கலெக்டரிடம் மனு கொடுக்கலாம் என்றனர். இதனால் போலீசாருக்கும், கிராம மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து  மருந்தக உரிமையாளர் நாகராஜன் கொலைக்கு நீதி கேட்டு பெரம்பலூர்-அரியலூர் மாவட்ட பா.ம.க. சார்பில் பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டானா அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். கட்சியின் அரியலூர் மாவட்ட செயலாளர் தனிவீடு காடுவெட்டி ரவி, முன்னாள் மாநில துணை பொதுச் செயலாளர் திருமாவளவன், மாவட்ட தலைவர்கள்  ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினராக கட்சியின் வழக்கறிஞர்கள் சமூக நீதி பேரவையின் தலைவர் பாலு கலந்து கொண்டு, மருந்தக உரிமையாளர் நாகராஜன் கொலைக்கு கண்டனம் தெரிவித்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பா.ம.க.வினர், நாகராஜன் கொலை வழக்கில் உண்மையான 2 குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்றனர்.


பெரம்பலூர்: மருந்துக்கடை உரிமையாளர் கொலை: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

மேலும் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கை சி.பி.ஐ.-க்கு மாற்ற வேண்டும். மாமூல் கேட்கும் ரவடிகளை கைது செய்ய வேண்டும். லாடபுரம் கிராமத்தில் சட்ட விரோத மது விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கொலை செய்யப்பட்ட நாகராஜன் குடும்பத்தினருக்கு இழப்பீடு தொகையை அரசு வழங்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கபட்டது. மேலும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யாவிட்டால் பெரிய அளவில் போராட்டம் நடைபெறும் எனவும் தெரிவித்தனர். 

தலைப்பு செய்திகள்

வாடகை பாக்கி வைத்திருந்த கடைகள்... அதிரடியாக பூட்டி சீல் வைத்த திருச்சி மாநகராட்சி
வாடகை பாக்கி வைத்திருந்த கடைகள்... அதிரடியாக பூட்டி சீல் வைத்த திருச்சி மாநகராட்சி
சென்னையிலிருந்து திருச்சிக்கு இனி 3 மணி நேரம்தான்...! இனி டோல்கேட்டில் நிற்கத் தேவையில்லை...
சென்னையிலிருந்து திருச்சிக்கு இனி 3 மணி நேரம்தான்...! இனி டோல்கேட்டில் நிற்கத் தேவையில்லை...
Trichy power cut: திருச்சியில் நாளை (01-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட பட்டியல்
Trichy power cut: திருச்சியில் நாளை (01-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட பட்டியல்
திருச்சி அரசு மருத்துவமனையில் எலி கடித்த சம்பவம்... தூய்மைப்பணிகளை தீவிரப்படுத்திய நிர்வாகம்
திருச்சி அரசு மருத்துவமனையில் எலி கடித்த சம்பவம்... தூய்மைப்பணிகளை தீவிரப்படுத்திய நிர்வாகம்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
NEET PROTEST : நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
TN GOVT Reliability Division : விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
Maruti 7 Seater: எல்லாமே இருந்தும் ஓடல..! 7 சீட்டரை அப்க்ரேட் செய்து விலையை குறைக்கும் மாருதி? 5 ஸ்டார் ரேட்டிங், 23KM மைலேஜ்
எல்லாமே இருந்தும் ஓடல..! 7 சீட்டரை அப்க்ரேட் செய்து விலையை குறைக்கும் மாருதி? 5 ஸ்டார் ரேட்டிங், 23KM மைலேஜ்
Ration Shop Fingerprint : மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய லாஸ்ட் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
Toyota Innova Hycross: இன்னோவா ஹைக்ராஸை கட்டிட்டு அழாதீங்க..! விலையிலும், வசதியிலும் டக்கரான 3 மாற்று ஆப்ஷன்கள்
இன்னோவா ஹைக்ராஸை கட்டிட்டு அழாதீங்க..! விலையிலும், வசதியிலும் டக்கரான 3 மாற்று ஆப்ஷன்கள்
MBBS Counselling: மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
Embed widget