மேலும் அறிய

உலக சிலம்பு போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த திருச்சி வீரர்கள்

மலேசியாவில் நடந்த உலக சிலம்பு போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய வீரர்களுக்கு திருச்சி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு.

தமிழர்கள் ஆயுதம் ஏந்திப் போராட ஆரம்பித்த காலத்தில் முதலில் எடுத்தது கம்பு எனப்படும் ஆயுதமே ஆகும். இதுவே பின்னர் சிலம்புக் கலையாக வளர்ச்சி பெற்றது. ஆதிகாலத்தில் மனிதர்கள் சண்டை செய்ய ஈட்டி, கத்தி, வேல், வாள், கம்பு போன்ற பலவிதமான ஆயுதங்களைப் பயன்படுத்தினர். அவற்றுள் மிகவும் பழமை வாய்ந்த ஆயுதம் கம்பு எனப்படும் 'சிலம்பு' ஆகும். முற்காலத்தில் இக்கலையை வீர மறவர்கள் பயன்படுத்தினர். தற்போது இது ஒரு சில பள்ளிகளிலும், தனியார் அமைப்புகளாலும் கற்றுத் தரப்படுகிறது. விளையாட்டுப் போட்டிகளில் வீர விளையாட்டாகவும் இடம்பெறுகிறது. சிலம்பச் சுவடிகளில் குறிப்பிடப் படும் தொன்மையான சிலம்பச் சுவடு மற்றும் அடி வரிசைகள், தமிழக மூவேந்தர்களின் ஆட்சி முடிவுற்று, தமிழகம் அன்னியர்களுக்கு அடிமைப்பட்ட பின் கால மாற்றத்தால் அதன் பெயர்களும் ஆடும் முறைகளும் சிறு மாற்றமடைந்தன.

மேலும், சிலம்பம் என்பது ஒரு தடியடி தமிழர் தற்காப்புக் கலை மற்றும் தமிழர்களின் வீர விளையாட்டு ஆகும். வழக்கில் இவ்விளையாட்டைக் கம்பு சுற்றுதல் என்றும் கூறுவர். இது தடியைக் கையாளும் முறை, கால் அசைவுகள், உடல் அசைவுகள் மூலம் தம்மைப் பாதுகாத்து கொள்ளுதல் எனப் பல கூறுகளைக் கொண்ட விரிவான தற்காப்புக் கலை ஆகும்.  இப்படிபட்ட சிறப்பு மிக்க கலை கால போக்கில் மறைந்துக்கொண்டே வருகிறது.  ஆனால் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மட்டுமே இந்த கலை கற்பிக்கபடுகிறது.

உலக சிலம்பு போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று  தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த  திருச்சி வீரர்கள்

இந்நிலையில் உலக பாரம்பரிய சிலம்பம் போட்டி மற்றும் கலை சங்கம் சார்பாக மலேசியாவில் நடைபெற்ற உலக சிலம்ப போட்டி நடைபெற்றது. இதில் மலேசியா இந்தியா ஸ்ரீலங்கா, அயர்லாந்து நேபால், கத்தார் சிங்கப்பூர் பங்களாதேஷ் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த சுமார் 350 பேர் கலந்து கொண்டனர். இந்தபோட்டி கடந்த 20-ம் தேதி தொடங்கி 24 -ம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெற்றது இதில் 6 வயது முதல் 18 வயதுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  இப்போட்டியில் பங்கேற்க திருச்சியில் இருந்து மாவட்டம், மாநில அளவில் ஏற்கனவே நடந்த பல்வேறு சிலம்ப போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற அகிலேஸ்வரன், முகிலேஸ்வரன், திஷிகா ,அருனேஷ், ஆதித்யா, கோகுல், பிரியதர்ஷன் உள்ளிட்ட 13 மாணவ , மாணவிகள் கலந்து கொண்டனர்  அங்கு நடைபெற்ற அனைத்து சிலம்ப போட்டிகளிலும் பங்கேற்று ஒட்டுமொத்த  சாம்பியன் பட்டத்தை வென்றனர்.

அதில் தங்க பதக்கம் 15, வெள்ளி பதக்கம் 10, வெண்கல பதக்கம் 12 என ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றினர். இந்நிலையில் இன்று காலை சர்வதேச திருச்சி விமான நிலையத்திற்கு வந்த சிலம்ப வீரர் வீராங்கனைகளை கீரிஸ் கோகுல் சிலம்பாட்ட பயிற்சி கழகம் மற்றும் சிலம்பக் கலை பயிற்சியாளர் கோகுல் கிருஷ்ணா, விஜயன் மற்றும் மாணவ, மாணவிகளின் பெற்றோர் மாலை அணிவித்து சால்வை போர்த்தி இனிப்பு வழங்கி உற்சாகமாக வரவேற்றனர். குறிப்பாக இந்த சிலம்பாட்ட வீராங்கனைகள் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழர்களின் பாரம்பரியமான சிலம்பம் கலையை ஊக்கபடுத்த தமிழ்நாடு அரசு உதவி செய்ய வேண்டும் என வீரர், வீராங்கனைகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்.. ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவு..!
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்.. ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவு..!
ADMK: இரண்டாவது மிகப்பெரிய கள்ளச் சாராய மரணம் இது.. திமுக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!
இரண்டாவது மிகப்பெரிய கள்ளச் சாராய மரணம் இது.. திமுக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!
Kallakurichi Hooch Tragedy: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு..FIR- இல் இருக்கும் பரபரப்பு தகவல் என்ன?
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு..FIR- இல் இருக்கும் பரபரப்பு தகவல் என்ன?
Breaking News LIVE: விஷச்சாராய மரணங்கள்: 24ம் தேதி ஆர்ப்பாட்டம் : எடப்பாடி பழனிசாமி
விஷச்சாராய மரணங்கள்: 24ம் தேதி ஆர்ப்பாட்டம் : எடப்பாடி பழனிசாமி
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

MK Stalin on Kallasarayam  : ”விஷச்சாராயம் எப்படி வந்துச்சி..களத்துக்கு போ உதய்” ஆணையிட்ட ஸ்டாலின்Vijay Vs DMK | ”திமுக அரசின் அலட்சியம்”பொங்கி எழுந்த விஜய்!கள்ளச்சாரய விவகாரம்Kallakurichi Kalla Sarayam | DGP-யை அழைத்த ஸ்டாலின் SP-க்களுக்கு பறந்த ORDER!Trichy Surya | தமிழிசையை சீண்டிய திருச்சி சூர்யா? தூக்கி வீசிய பாஜக!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்.. ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவு..!
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்.. ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவு..!
ADMK: இரண்டாவது மிகப்பெரிய கள்ளச் சாராய மரணம் இது.. திமுக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!
இரண்டாவது மிகப்பெரிய கள்ளச் சாராய மரணம் இது.. திமுக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!
Kallakurichi Hooch Tragedy: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு..FIR- இல் இருக்கும் பரபரப்பு தகவல் என்ன?
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு..FIR- இல் இருக்கும் பரபரப்பு தகவல் என்ன?
Breaking News LIVE: விஷச்சாராய மரணங்கள்: 24ம் தேதி ஆர்ப்பாட்டம் : எடப்பாடி பழனிசாமி
விஷச்சாராய மரணங்கள்: 24ம் தேதி ஆர்ப்பாட்டம் : எடப்பாடி பழனிசாமி
NEET Row : ”நீட் தேர்வு விவகாரத்தில் தவறு செய்தவர்கள் தப்ப முடியாது” - கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தது என்ன?
NEET Row : ”நீட் தேர்வு விவகாரத்தில் தவறு செய்தவர்கள் தப்ப முடியாது” - கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தது என்ன?
Kallakurichi Liquor Death: கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் நடிகர் விஜய்.. கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆறுதல்..!
கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் நடிகர் விஜய்.. கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆறுதல்..!
சட்டவிரோத மது விற்பனையை எப்படி அனுமதிக்கின்றனர் – உயர்நீதிமன்ற கிளை சரமாரி கேள்வி
சட்டவிரோத மது விற்பனையை எப்படி அனுமதிக்கின்றனர் – உயர்நீதிமன்ற கிளை சரமாரி கேள்வி
Kallakurichi Liquor Death: கள்ளச்சாராயத்தால் பலியானோர் எண்ணிக்கை 42-ஆக உயர்வு
கள்ளச்சாராயத்தால் பலியானோர் எண்ணிக்கை 42-ஆக உயர்வு
Embed widget