Trichy: ஆதார் கார்டில் 41 வயதிற்கு பதில் 122 வயது - 4 ஆண்டுகளாக பெண் மனஉளைச்சல்
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தாயனூரைச் சேர்ந்த கவிதாவின் ஆதார் கார்டில் வயது 122 வயது என குறிப்பிட்டுள்ளது என புகார் மனு அளித்தார்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் திருச்சி மாவட்டத்தில் உள்ள மக்கள் அனைத்து விதமான பிரச்சனைகளை குறித்து புகார் மனு அளித்து வருகிறார்கள். இந்நிலையில் திருச்சி மாவட்டம், தாயனூரைச் சேர்ந்த கவிதா புகார் மனு அளித்தார். அந்த மனுவில் தனது வாக்காளர் அடையாள அட்டையில் 3/5/1982 என எனது பிறந்த தேதி குறிப்பிட்டுள்ளது. ஆனால் ஆதார் கார்டில் பிறந்த தேதியில் 1900 என வருடம் பதிவாகியுள்ளது. இதனால் தனது வயது 100 தாண்டி காட்டுவதாகவும் இதற்காக 4 ஆண்டுகள் அலைவதாகவும் தெரிவித்தார். மேலும் தொடர்ந்து பேசிய அவர், இதனால் பல இன்னல்களை தொடர்ந்து நான் சந்தித்து வருவதாகவும், குறிப்பாக குடும்பத்தில் பல பிரச்சனைகள் நிலவி வருவதாகவும், வருத்தத்துடன் தெரிவித்தார்.
ஆதார் கார்டில் 41 வயதிற்கு பதிலாக 122 வயது என பதிவு செய்ததால் பெண் மன உளைச்சல்.#Trichydistrict @TnIpro @TrichyCorp @abpnadu pic.twitter.com/eqYOMISvVo
— Dheepan M R (@mrdheepan) February 27, 2023
மேலும், நாங்கள் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்கள், குழந்தைகள் படிப்பிற்காகவும் மற்ற தேவைக்காகவும் வங்கிகளில் லோன் எடுக்க வேண்டும். இல்லையென்றால் மகளிர் சுய உதவிக் குழு லோன் எடுக்க வேண்டும். ஆனால் எங்கு சென்றாலும் யாரும் எங்களுக்கு லோன் தர மறுக்கிறார்கள். என்ன செய்வது என்று தெரியாமல் கடந்த நான்கு வருடங்களாக அலைந்து கொண்டிருக்கிறேன். எனவே இந்த மனுவை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்குமாறு அந்த மனதில் குறிப்பிட்டிருந்தார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்