பசு பாதுகாப்பு பிரிவு என்று கூறி எருமை மாடுகள் ஏற்றி வந்த லாரியை மறித்து வசூல் வேட்டை : 2 பேர் கைது
இந்து பசு பாதுகாப்பு பிரிவு என்று கூறி எருமை மாடுகள் ஏற்றிச் சென்ற வாகனத்தை வழிமறித்து பணத்தை பறித்த இருவர் கைது.
திருச்சியில், ஹிந்து அமைப்பு நிர்வாகிகள் எனக் கூறி, லாரியில் மாடு ஏற்றிச் சென்றவர்களிடம் வசூல் வேட்டையில் ஈடுபட்ட இருவரை, துறையூர் போலீசார் கைது செய்தனர்.
ஆந்திர மாநிலம், நெல்லாரில் இருந்து, கேரள பதிவு எண் கொண்ட கண்டெய்னர் லாரியில், கோயம்புத்துார் மாவட்டம், பொள்ளாச்சிக்கு மாடுகளை ஏற்றிச் சென்றனர். காலையில், திருச்சி மாவட்டம், துறையூர் அருகே வந்த போது, கிழக்குவாடி என்ற இடத்தில், காரில் வந்த இருவர், லாரியை வழி மறித்து நிறுத்தி உள்ளனர். Jallikattu 2022: ஊரடங்கு அறிவிப்பு - ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுமா..? - அரசின் திட்டம் என்ன..?
ஹிந்து அமைப்பின் பசு பாதுகாதுப்பு இயக்க நிர்வாகிகள் என்று கூறிய அவர்கள், லாரியில் இருந்தவர்களிடம் பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். பணம் தராததால், லாரியில் வந்த லோடு மேன் மணிகண்டன், ரவி ஆகியோரை கம்பால் தாக்கி உள்ளனர். Tamil Nadu Covid-19 Data Tracker: தமிழ்நாட்டில் ஒரே நாளில் 2,000-க்கும் மேல் அதிகரித்த கொரோனா பாதிப்பு
இது பற்றி தகவல் அறிந்த துறையூர் இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று, லாரியில் மாடு ஏற்றி வந்தவர்களையும், அவர்களை வழி மறித்து தாக்கியவர்களையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், காரில் வந்தவர்கள், ஹிந்து அமைப்பின் பெயரில், பல இடங்களில் வசூல் வேட்டையில் ஈடுபட்டது தெரிய வந்தது. லோடு மேன் மணிகண்டன் கொடுத்த புகார்படி, துறையூர் போலீசார் திருச்சி மாவட்டம், வாத்தலையை சேர்ந்த சிரஞ்சீவி 29, கண்ணன் 33, ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். TN Lockdown: மீண்டும் ஊரடங்கு... கொந்தளிக்கும் மக்கள்... கொட்டும் கருத்துக்கள்... இது தமிழ்நாட்டின் குரல்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்