திருச்சியில் குடிநீர் கலங்களாக வருவதாக மக்கள் குற்றச்சாட்டு - நேரில் ஆய்வு செய்த மேயர்
திருச்சியில் குடிநீர் கலங்கலாக வருவதாக புகார் எழுந்த நிலையில், மேயர் அன்பழகன் நேரில் சென்று குடிநீரை ஆய்வு செய்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
திருச்சி மாவட்டத்தை சென்னைக்கு நிகராக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு பல்வேறு திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக சிறந்த மாநகராட்சி திருச்சி என்று தேர்வு செய்யப்பட்ட பிறகு அந்த இடத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று பல்வேறு புதிய திட்டங்களை வகுத்து மாநகராட்சி அதிகாரிகள் செயல்படுத்தி வருகின்றனர்.
ஆகையால் திருச்சி மாநகராட்சி பகுதியில் பல்வேறு திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக சாலைகள் சீரமைப்பது, குடிநீர் வடிகால் அமைப்பது, பாதாள சாக்கடை சுத்தம் செய்வது, கூட்டுக் குடிநீர் திட்டம், குடிநீர் குழாய்கள் பழுது நீர் தீர்ப்பது, மின்சார கம்பிகள் பழுது பார்ப்பது, உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உறையூர் பகுதிகளில் குடிநீரில் அசுத்தம் கலந்து வருவதாகவும், அந்த நீரை பருகிய பலருக்கு மஞ்சக்கால் மாலை நோய் தொற்று ஏற்பட்டதாக புகார் எழுந்தது. குறிப்பாக பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு அதிகளவில் பாதிப்பு ஏற்பட்டதாகவும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.
குடிநீர் கலங்கலாக வருகிறது இதனால் நோய் தொற்று அதிகரித்து வருகிறது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சி அதிகாரியிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் பலரும் இப்பகுதியில் பாதிக்கப்பட்டுள்ளோம் என பொதுமக்கள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.
திருச்சி மாநகராட்சியில் குடிநீர் காலங்களாக வருவதால் நோய் தொற்று பரவும் அபாயம்
குறிப்பாக நோய் தொற்று அதிகரித்ததால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம், மாநகராட்சி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து மாநகராட்சி மேயர் அன்பழகன் உரையூர் பகுதி முழுவதும் ஆய்வு மேற்கொண்டார். அப்போது குடிநீர் கலங்கலாக வருவது உறுதி செய்யப்பட்டது. பொதுமக்கள் புகார் தெரிவித்தும் அதிகாரிகள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என மாநகராட்சி மேயர் அன்பழகன் அதிகாரிகளிடையே கோபமாக பேசினார்.
மேலும் உடனடியாக நடவடிக்கை எடுத்து குடிநீரை சுத்தம் செய்ய வேண்டும், மீண்டும் இது போன்ற புகார்கள் வரக்கூடாது என அதிகாரிகளுக்கு மேயர் அன்பழகன் உத்தரவிட்டார. இதனைத் தொடர்ந்து அப்பகுதி முழுவதும் குடிநீர் குழாய்கள் சுத்தம் செய்து நீரில் கலப்படம் கலக்காமல் அதிகாரிகள் நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இந்நிலையில் திருச்சி மாநகராட்சி மண்டலம் எண் - 2 மற்றும் 3 வார்டு எண் -16 மற்றும் 17 வடக்கு தாராநல்லூர் பகுதி, கலைஞர் நகர் பகுதி குடிநீர் கலங்கலாக வருவதாக பொதுமக்கள் புகார் அளித்தனர். இது குறித்து மேயர் அன்பர்களிடம் ஏபிபி நாடு செய்தி நிறுவனம் சார்பாக கேள்விகள் எழுப்பப்பட்டது.
இதனை தொடர்ந்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் அன்பழகன் தெரிவித்தார். பின்பு பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மேயர் அன்பழகன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் மக்களின் வீடுகளுக்கு சென்று குடிநீரை ஆய்வு செய்தார். உடனடியாக இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டுமென அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் .மேலும் காலதாமதம் படுத்தாமல் உடனடியாக மக்கள் பிரச்சனைக்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லாவிட்டால் அதிகாரிகள் மீது மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என எச்சரிக்கையும் எடுத்தார்.