மேலும் அறிய

ராஜஸ்தானில் திருச்சி தனிப்படை போலீசார் சிறை பிடிப்பு - காரணம் என்ன?

கொள்ளைபோன நகைகளை மீட்க சென்றபோது ராஜஸ்தானில் திருச்சி தனிப்படை போலீசார் சிறை பிடிக்கப்பட்டனர். அவர்கள் பலமணிநேர விசாரணைக்கு பிறகு விடுவிக்கப்பட்டனர்.

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ரத்தன் (வயது 38), ராம்பிரசாத் (22), சங்கர் (25), ராமா (40) ஆகியோர் தங்கள் குடும்பத்துடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழகம் வந்தனர். இவர்கள் சாலையோரங்களில் தங்கி கொண்டு பலூன் விற்பது போலவும், பெட்ஷீட் வியாபாரம் செய்வது போலவும், போக்குவரத்து சிக்னல்களில் பிச்சை எடுத்து கொண்டும் இருந்தனர். இவர்களில் ஆண்கள் ரெயில் தண்டவாளங்களையொட்டியுள்ள பூட்டிய வீடுகளில் நோட்டமிட்டு கொள்ளையில் ஈடுபட்டு வந்தனர். இவர்கள் மீது திருச்சி மாநகரம், மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் 10 வழக்குகள் உள்ளன. இந்த சம்பவங்களில் சுமார் 254 பவுன் தங்க நகைகளும், ஒரு கிலோ வெள்ளி பொருட்களும் திருட்டு போய் உள்ளது. இந்தநிலையில் கடந்த டிசம்பர் மாதம் 23-ந் தேதி ரத்தன், சங்கர், ராம்பிரசாத், ராமா உள்ளிட்ட 4 பேரையும் திருச்சி மாநகர போலீசார் கைது செய்தனர். அப்போது அவர்களிடம் நடத்திய விசாரணையில் திருடப்பட்ட நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை ஒருவாரத்துக்குள் ராஜஸ்தான் கொண்டு சென்று அங்கு திருட்டு நகைகளை வாங்குபவரிடம் விற்றது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீசார் சிறையில் அடைத்தனர். பின்னர் திருடப்பட்ட நகைகளை மீட்பதற்காக திருச்சி சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ரத்தன், சங்கர் ஆகிய 2 பேரை மட்டும் செசன்ஸ் கோர்ட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் சியாமளாதேவி காவலில் எடுத்தார். அவர்கள் 2 பேருடன், உதவி கமிஷனர் கென்னடி தலைமையில் உறையூர் இன்ஸ்பெக்டர் மோகன், சப்-இன்ஸ்பெக்டர் உமாசங்கரி உள்பட 15 பேர் கொண்ட தனிப்படை போலீசார் கடந்த 28-ந் தேதி ராஜஸ்தானுக்கு புறப்பட்டனர்.

ராஜஸ்தானில் திருச்சி தனிப்படை போலீசார் சிறை பிடிப்பு - காரணம்  என்ன?

300 கிராம் தங்கம், ரூ.2 லட்சம் மீட்பு : 

இந்த தனிப்படையினர் கடந்த 2-ந் தேதி ராஜஸ்தானை சென்று அடைந்தனர். அங்குள்ள பில்வாரா மாவட்டம் சாப்புரா என்ற இடத்தில் உள்ள புலியாகலான் போலீஸ் நிலையத்துக்கு சென்று உள்ளூர் போலீஸ் நிலைய போலீசார் உதவியுடன் புலியா பஜார் என்ற இடத்தில் திருட்டு நகைகளை பெற்று வைத்திருந்த கன்சியாம் என்பவரிடம் இருந்து 300 கிராம் தங்கத்தையும், ரூ.2 லட்சத்தையும் பறிமுதல் செய்தனர். இதேபோல் திருட்டு நகைகளை வாங்கும் மற்றொரு நபரான அஜ்மீர் மாவட்டம் ராமாலயா கிராமத்தை சேர்ந்த சானியா மற்றும் அவரது கணவர் பண்ணாலால் ஆகியோரை பினாய் போலீஸ் நிலைய போலீசார் உதவியுடன் பிடித்து விசாரித்தபோது, அவர் வழக்கு சம்பந்தப்பட்ட 100 பவுன் தங்க நகைகளை திருப்பி கொடுப்பதாக ஒத்து கொண்டார். ஆனால் சானியாவிடம் இருந்து நகைகளை பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டது. 

இதனால் தனிப்படை போலீசார் மீண்டும் திருச்சிக்கு செல்ல முடிவெடுத்து ஜெய்ப்பூர் விமானநிலையத்துக்கு புறப்பட்டு சென்றபோது, நேற்று முன்தினம் காலை 11.30 மணிக்கு சானியாவின் சகோதரர் லட்சுமணன் தனிப்படையினரை செல்போனில் தொடர்பு கொண்டார். அவர், திருடப்பட்ட தங்க நகைகளுக்கு ஈடாக ரூ.25 லட்சம் கொடுத்து விடுவதாகவும், அந்த தொகையை அஜ்மீர் வந்து பெற்று கொள்ளும்படியும் கூறி உள்ளார். இதையடுத்து உதவி கமிஷனர் கென்னடி, இன்ஸ்பெக்டர் சியாமளாதேவி மற்றும் ஒரு போலீஸ் ஆகியோர் காவலில் எடுத்த ரத்தன், சங்கர் ஆகியோருடன் விமானம் மூலம் திருச்சிக்கு புறப்பட்டு வந்தனர். ஆனால் இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் மீதம் இருந்த தனிப்படையினர் 12 பேரும் அஜ்மீருக்கு புறப்பட்டு லட்சுமணன் கூறிய இடத்துக்கு பணத்தை பெறுவதற்காக சென்றபோது, அங்கு ராஜஸ்தான் மாநில ஊழல் தடுப்பு குழு அதிகாரிகள் திருச்சி தனிப்படை போலீசாரை சுற்றி வளைத்து பிடித்து விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

ராஜஸ்தானில் திருச்சி தனிப்படை போலீசார் சிறை பிடிப்பு - காரணம்  என்ன?

மேற்படி லட்சுமணன் திருட்டு வழக்கில் இருந்து தனது சகோதரியை விடுவிக்க வேண்டுமென்றால் ரூ.25 லட்சம் தர வேண்டும் என தமிழ்நாடு காவல்துறையினர் தங்களை மிரட்டுவதாக அங்குள்ள ராஜஸ்தான் மாநில ஊழல் தடுப்புகுழு அதிகாரிகளிடம் பொய்யான தகவலை தெரிவித்துள்ளார். அதன்பேரிலேயே தவறான புரிதல் காரணமாக திருச்சி தனிப்படை போலீசாரை ராஜஸ்தான் போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து இந்த விவகாரத்தில் உயர்அதிகாரிகள் தலையிட்டு ராஜஸ்தான் மாநில போலீசாருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின்னர் அவர்கள் வழக்கு தொடர்பான கோப்புகளை கேட்டனர். அவற்றை திருச்சி போலீசார் ராஜஸ்தான் போலீசாருக்கு அனுப்பி வைத்ததை தொடர்ந்து, பல மணிநேர விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட 12 பேர் கொண்ட தனிப்படை போலீசாரும் விடுவிக்கப்பட்டனர் என தெரிவித்தார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Girl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan : Bus Accident : போதை தலைக்கேறிய அரசு ஓட்டுநர் காவல் நிலையத்தில் புகுந்த பஸ் சென்னை அடையாறில் பரபரப்புAdani News : அச்சச்சோ..கைதாகும் அதானி?2,100 கோடி லஞ்சம் கொடுத்தாரா?அமெரிக்க நீதிமன்றம் அதிரடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Adani TNEB: அதானி உடன் கைகோர்த்த திமுக அரசு? வெடிக்கும் லஞ்ச விவகாரம் -  அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
Adani TNEB: அதானி உடன் கைகோர்த்த திமுக அரசு? வெடிக்கும் லஞ்ச விவகாரம் - அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
Vijay vs Thirumavalavan: விஜய்க்கு வில்லனா? தளபதியா? திருமா முடிவுக்காக தி.மு.க. வெயிட்டிங்!
Vijay vs Thirumavalavan: விஜய்க்கு வில்லனா? தளபதியா? திருமா முடிவுக்காக தி.மு.க. வெயிட்டிங்!
Embed widget