மேலும் அறிய

Trichy: மணிப்பூர் கலவரம்; தமிழகம் முழுவதும் அமைதி மெழுகுவர்த்தி பேரணி - தமிழக ஆயர் பேரவை அறிவிப்பு

தமிழகம் முழுவதும் மணிப்பூர் வன்முறையில் உயிரிழந்தவர்கள் மற்றும் மக்களின் துயரங்களை உணர்த்தும் வகையில் வரும் ஜூலை 2 ஆம் தேதி அமைதி மெழுகுவர்த்தி பேரணி நடைபெறும் - தமிழக ஆயர் பேரவை அறிவிப்பு

திருச்சி மேலபுதூர் பகுதியில் உள்ள தூய மேரியன்னை ஆலய மண்டபத்தில் தமிழக ஆயர் பேரவை சார்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக ஆயர் பேரவை தலைவர் பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி, மதுரை உயர் மறைமாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி, பாளையம் கோட்டை மறைமாவட்டம் ஆயர் அந்தோணிசாமி, திருச்சி மறைமாவட்டம் ஆயர் ஆரோக்கியராஜ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி பேசுகையில், “இந்தியாவில் வடகிழக்கில் அமைந்துள்ள மிகச்சிறிய மாநிலமான மணிப்பூரில் கடந்த இரண்டு மாதங்களாய் வன்முறையால் நூற்றுக்குமேல் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். வீடுகள், குடியிருப்புக்கள், உடமைகள் எரிக்கப்பட்டன. ஏறத்தாழ 300 தேவலயங்கள் திட்டமிட்டுத் தாக்கப்பட்டுள்ளன. புனிதப் பொருட்கள் சூறையாடப்பட்டன. உயிருக்கு அஞ்சி ஊர்களிலிருந்து இடம் பெயர்ந்து காடுகளிலும், முகாம்களிலும் ஏறத்தாழ 30,000 மக்கள் தஞ்சம் புகுந்துள்ளனர். கடந்த மே மாதம், பழங்குடி மாணவரமைப்பு ஊர்வலம் நடத்திய அன்று வெடித்த வன்முறை 50 நாட்கள் கடந்து இன்றும் தொடர்கிறது. மேலும் மணிப்பூரில் 53% 'மெய்தி' (Meit) இனத்தவரும், 41%, 'குதி' (Kuka) மீசோ'(Mizo) மற்றும் "நாகா' (Nagi) போன்ற பழங்குடிகளும் வாழ்கின்றனர். பெரும்பாலும் 'மெய்தி' இதைதவி சமவெளிகளிலும், பழங்குடியினர் மலைப்பகுதிகளிலும் வாழ்கின்றனர். அடிப்படையில் ’மெய்தி' சமூக, அரசியல் பொருளாதார வலிமை பெற்றுள்ளனர். ஆனால், தங்களையும் பழங்குடிப் பட்டியலில் சேர்க்க வேண்டுமென ''மெய்தி்'கள் போராடி வருகின்றனர்.

Trichy: மணிப்பூர் கலவரம்; தமிழகம் முழுவதும்  அமைதி மெழுகுவர்த்தி பேரணி - தமிழக ஆயர் பேரவை அறிவிப்பு

இந்நிலையில், மெய்தி சமூகத்தினரைப் பழங்குடிப் பட்டியலில் சேர்ப்பதற்கான அறிக்கையை ஒன்றிய அரசுக்கு அளிக்க வேண்டுமெனக் கடந்த 19.04.2023 அன்று, மணிப்பூர் உயர் நீதிமன்றம் மாநில அரசுக்கு உத்தரவிட்டது. இம்முடிவு தங்களின் நிலம் மற்றும் உரிமைகளைப் பறிக்குமென பழங்குடியினர் அஞ்சினர் அதற்காகப் பழங்குடிகள் ஊர்வலம் நடத்திய போதே கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். சிலர் கொல்லப்பட்டனர் குறிப்பாகத் தலைநகர் இம்பால் மற்றும் 'மெய்தி’ மக்கள் செறிவாக வாழும் பகுதிகளிலிருந்து 'ருகி' இனத்தவர் வேட்டையாடப்பட்டுள்ளனர். மேலும், 'குகி' இனத்தவர் செறிவாக வாழும் கிராமங்களிலிருந்தும் 'மெய்தி' இனத்தவர் உயிர் தப்பி ஓடியுள்ளனர். இருதரப்பிலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கிராமங்கள் சூறையாடப்பட்டுள்ளன. பலர் உயிருக்கு அஞ்சி, தங்கள் வீடு வாசலைத் தறந்து முகாம்களில் அடைக்கலம் புருந்துள்ளனர். தற்காலிக முகாம்களில் அடிப்படை வசதிகளின்றி, மக்கள் அலைமோதுகின்றனர். பன் மிசோராம் போன்ற அண்டை மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். குறிப்பாகக் கல்வி பயிலும் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அன்றாட வாழ்க்கைக்கான உணவு மருத்துவப் பொருட்கள் உட்பட, அனைத்திற்கும் கடும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இரு மாதங்களாய் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. ஆகையால் மத்திய, மாநில அரசு உடனடியாக மணிப்பூரில் நடக்கும் வன்முறையை முற்றிலும் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அங்கு அமைதி சூழல் உருவாக வழிவகை செய்ய தமிழக ஆயர் பேரவை வலியுறுத்துகிறது” என்றார். குறிப்பாக இனி வரும் காலங்களில் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்தார். 

Trichy: மணிப்பூர் கலவரம்; தமிழகம் முழுவதும்  அமைதி மெழுகுவர்த்தி பேரணி - தமிழக ஆயர் பேரவை அறிவிப்பு

இதனை தொடர்ந்து அடுத்த மாதம் ஜூலை 2 ஆம் தேதி,  ஞாயிறு அன்று தமிழக முழுவதும் அமைதிப் பேரணி (Silent Pricessioni) மெழுகுதிரிப் பேரணி (Candic Processiபோன்ற சமூகச் செயல்பாடுகள் மூலம் மணிப்பூர் மக்களின் துயரங்களை நாம் உணர்த்திடவும். பிறருக்கு உணர்த்திடவும் முயல்வோம் அது அமைதி மற்றும் சமூக நல்லிணக்கத்தின் செய்தியாக அமையும், மேலும் மணிப்பூர் மக்களுக்கும், குறிப்பாக கல்வி பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கும் நமது நிறுவனங்களின் மூலம் இயன்ற வழிகளில் நாம் உதவிட முயல்வோம். மணிப்பூர் மக்களின் உடனடித் துயர் துடைக்க தமிழக ஆயர்களின் சமூகப்பணி நிறுவனத்தின் மூலம் நம்மாலான பொருளாதார உதவிகளைச் செய்ய முயல்வோம்” என்றார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
Tanush Kotian: அஸ்வினுக்கு பதிலாக இந்திய அணியில் களமிறங்கும் ஆல்-ரவுண்டர்! - யார் இந்த தனுஷ் கோடியன்? 
Tanush Kotian: அஸ்வினுக்கு பதிலாக இந்திய அணியில் களமிறங்கும் ஆல்-ரவுண்டர்! - யார் இந்த தனுஷ் கோடியன்? 
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | BussyRahul Gandhi | ’’ wow..பூரி சூப்பர்!’’அம்மா, பிரியங்காவுடன் DINNER சென்ற ராகுல் | Priyanka GandhiTVK Christmas Celebration | ’’ஐயோ..ஐயோ..கதறும் பெண்கள்’’தவெக விழாவில் பரபரப்பு | Vijay | Bussy AnandTN Local Body Election | உள்ளாட்சி தேர்தல் கேம் ஓவர்! ஸ்டாலினின் பழைய ப்ளான் குமுறலில் கவுன்சிலர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
Tanush Kotian: அஸ்வினுக்கு பதிலாக இந்திய அணியில் களமிறங்கும் ஆல்-ரவுண்டர்! - யார் இந்த தனுஷ் கோடியன்? 
Tanush Kotian: அஸ்வினுக்கு பதிலாக இந்திய அணியில் களமிறங்கும் ஆல்-ரவுண்டர்! - யார் இந்த தனுஷ் கோடியன்? 
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
"மூளையில் ரத்தக்கசிவு" ஐசியூவில் வினோத் காம்ப்ளி.. உயிருக்கு போராடும் சச்சினின் நண்பர்!
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
Minister MRK Pannerselvam:  கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
All Pass Cancelled: 5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஷாக்! ஃபெயில் ஆனால் அதே வகுப்புதான்! மத்திய அரசின் புது உத்தரவு!
All Pass Cancelled: 5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஷாக்! ஃபெயில் ஆனால் அதே வகுப்புதான்! மத்திய அரசின் புது உத்தரவு!
Embed widget