மேலும் அறிய

திருச்சியில் நாட்டு வெடிகுண்டுகள் வைத்திருந்த ரவுடி குண்டர் சட்டத்தில் கைது

திருச்சியில் சட்ட விரோதமாக நாட்டு வெடிகுண்டுகள் வைத்திருந்த ரவுடி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கபட்டார்.

திருச்சி மாநகர் காவல்துறை ஆணையராக காமினி அவர்கள் பொறுப்பேற்றிலிருந்து, தொடர் குற்ற சம்பவங்களை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக பொதுமக்களை அச்சுறுத்தும் செயலில் ஈடுபடுவோர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதே சமயம் சட்டத்திற்கு புறம்பாக போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.  மேலும் திருச்சி மாநகரில் தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கண்காணித்து, அவர்கள் குற்ற செயல்களில் ஈடுபடாமல் இருப்பதற்கு நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. திருட்டு, கொலை சம்பவங்களை முற்றிலும் தடுப்பதற்காக தனிப்படைகள் அமைத்து ஒவ்வொரு பகுதிகளிலும் 24 மணி நேரமும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டால் சட்டரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்து தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி, உத்தரவின்பேரில் திருச்சி மாநகரில் சட்டம் ஒழுங்கை பேணிக்காக்கும் வகையில் வழிப்பறி செய்யும் குற்றவாளிகள் மற்றும் அபாயகரமான ஆயுதங்களை வைத்திருக்கும் குற்றவாளிகள் மீது திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள் மற்றும் சரக உதவி ஆணையர்கள் சட்டரீதியான உரிய நடவடிக்கை எடுக்க அறிவுரை வழங்கியுள்ளார்கள். அதன்படி, கடந்த 11.08.23-ந்தேதி பொன்மலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொன்மலை ரெயில்வே மைதானம் அருகில் ஒருவர் சட்டவிரோதமாக நாட்டு வெடிகுண்டுகளை வைத்துக்கொண்டு பணம் பறிக்கும் குற்றங்களில் ஈடுபடுவதாக பெறப்பட்ட தகவலின்பேரில் அரியமங்கலம், மேலஅம்பிகாபுரத்தை சேர்ந்த பாலசுப்ரமணியன் (எ) குட்டை பாலு (எ) பாலு வயது 37, த.பெ.தங்கராஜ் என்பவர் மீது நாட்டு வெடிகுண்டு வைத்தருந்த குற்றத்திற்காகவும், வழிப்பறி செய்த குற்றத்திற்காகவும், வழக்குப்பதிவு செய்து சிறையிலடைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருச்சியில்  நாட்டு வெடிகுண்டுகள் வைத்திருந்த ரவுடி  குண்டர் சட்டத்தில் கைது

மேலும், ரவுடி பாலசுப்ரமணியன் (எ) குட்டை பாலு (எ) பாலு என்பவர் மீது அரியமங்கலம் காவல்நிலையத்தில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்து சென்றதாக ஒரு வழக்கும், சட்டவிரோதமாக நாட்டு வெடிகுண்டு வைத்திருந்ததாக ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டு விசாரணையில் உள்ளதாக தெரியவந்தது. எனவே, ரவுடி பாலசுப்ரமணியன் (எ) குட்டை பாலு (எ) பாலு என்பவர் தொடர்ந்து, கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தல் மற்றும் சட்டவிரோதமாக நாட்டு வெடிகுண்டு வைத்திருக்கும் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக விசாரணையில் தெரியவந்ததால், மேற்கண்ட எதிரியின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு பொன்மலை காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி, மேற்படி எதிரியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்கள். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள எதிரி மீது பிறப்பிக்கப்பட்ட குண்டர் தடுப்பு சட்ட ஆணையினை சார்பு செய்து சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், திருச்சி மாநகரில் இதுபோன்று குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Adani TNEB: அதானி உடன் கைகோர்த்த திமுக அரசு? வெடிக்கும் லஞ்ச விவகாரம் -  அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
Adani TNEB: அதானி உடன் கைகோர்த்த திமுக அரசு? வெடிக்கும் லஞ்ச விவகாரம் - அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
Vijay vs Thirumavalavan: விஜய்க்கு வில்லனா? தளபதியா? திருமா முடிவுக்காக தி.மு.க. வெயிட்டிங்!
Vijay vs Thirumavalavan: விஜய்க்கு வில்லனா? தளபதியா? திருமா முடிவுக்காக தி.மு.க. வெயிட்டிங்!
Embed widget