மேலும் அறிய
Trichy: பராமரிப்பு பணியால் திருச்சி ரயில் நிலையத்திற்கு வரும் 16 ரயில்கள் ரத்து
ரயில் வழித்தடங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்சி ரயில் நிலையத்திற்கு வரும் 16 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
![Trichy: பராமரிப்பு பணியால் திருச்சி ரயில் நிலையத்திற்கு வரும் 16 ரயில்கள் ரத்து Trichy news 16 trains arriving at Trichy railway station canceled due to track maintenance works TNN Trichy: பராமரிப்பு பணியால் திருச்சி ரயில் நிலையத்திற்கு வரும் 16 ரயில்கள் ரத்து](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/26/d22c4d5642aeffb4a03fed0d2619a8891690345402028184_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
திருச்சி ரயில் நிலையத்திற்கு வரும் 16 ரெயில்கள் ரத்து
தெற்கு ரயில்வே மண்டலத்தில் முக்கிய வழித்தடங்களை இணைக்கும் மின்னணு இண்டர்லாக்கிங் வசதி கொண்ட முக்கிய ரயில் நிலையமாக திருச்சி ஜங்ஷன் உள்ளது. தொலை தூர ரெயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டதால் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திலும், சுற்று வட்டாரப் பகுதியிலும் முக்கியமான ரயில்கள் வந்து செல்லும் போது ரயில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கிறது. எனவே, ரயில்களை சீராக இயக்குவதற்கு ஏதுவாக, திருச்சி சந்திப்பில் புதிய வழித்தட எண் 10 மற்றும் புதிய நடைமேடை எண் 8 ஆகியவற்றை இயக்குவதற்கு கடந்த 20-ந்தேதி முதல் இண்டர்லாக்கிங் (பராமரிப்பு) பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் தற்போது பொன்மலை அருகே திருச்சி-சென்னை வழிதடத்தில் துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் வருகிற 1-ந்தேதி வரை நடைபெறுகிறது. தொடர்ந்து திண்டுக்கல் வழிதடங்களில் பணிகள் விரைவில் தொடங்கப்படும். இந்த பணிகளில் 300-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் திருச்சி கோட்டத்தில் வருகிற 1-ந்தேதி வரை ரயில்களை ரத்து செய்தல், பகுதியாக ரத்து செய்தல், மற்றும் ரயில் வழித்தடங்களை மாற்றியமைத்தல் போன்ற ரயில் சேவைகளின் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளது.
![Trichy: பராமரிப்பு பணியால் திருச்சி ரயில் நிலையத்திற்கு வரும் 16 ரயில்கள் ரத்து](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/26/4a865850956fbae3c9055a67d68b69e21690345470461184_original.jpeg)
ரத்து செய்யபட்ட வண்டிகள் :
வண்டி எண் 16233-16234 மயிலாடுதுறை - திருச்சி ரயில் இன்று (புதன்கிழமை), மற்றும் 31-ந்தேதி, ஆகஸ்டு 1-ந் தேதி. வண்டி எண் 06498-06499 திண்டுக்கல்- திருச்சி ரயில் 27, 30, 31-ந் தேதி மற்றும் 1-ந் தேதி, வண்டி எண் 06729- தஞ்சை - திருச்சி ரயில் 29,30, 31-ந் தேதி மற்றும் 1-ந் தேதி. வண்டி எண் 06683 தஞ்சை - திருச்சி ரயில் 30, 31, மற்றும் 1-ந் தேதி, வண்டி எண் 06871 தஞ்சை - திருச்சி ரயில் 30, 31, 1-ந்தேதி. வண்டி எண் 06876 திருச்சி- தஞ்சை ரயில் 30, 31, 1-ந் தேதி. வண்டி எண் 06829-06830 திருச்சி- மானாமதுரை 30, 31, 1-ந்தேதி. வண்டி எண் 12084-12083 கோவை - மயிலாடுதுறை 30, 31-ந்தேதி. வண்டி எண் 06869 தஞ்சை - திருச்சி ரயில் 1-ந்தேதி. வண்டி எண் 12636 மதுரை - சென்னை அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் 1-ந் தேதி. வண்டி எண் 12605 சென்னை - காரைக்குடி அதிவிரைவு ரயில் உள்பட 16 ரெயில்கள் 1-ந் தேதி உள்ளிட்ட தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இதுதவிர திருச்சி கல்லுக்குழி காலனி பகுதியில் ரூ.4 கோடி செலவில் ரெயில்வே ஜங்ஷனுக்கு 2-வது நுழைவுவாயில் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதன் மூலம் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் சுற்றி வந்து ரயில் நிலையத்தை அடைவதற்கு பதிலாக இந்த 2-வது நுழைவு வாயிலை பயன்படுத்தி, கூட்ட நெரிசலில் இருந்து விடுபடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/ abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
வணிகம்
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion