மேலும் அறிய

திருச்சி மாரிஸ் மேம்பாலத்தில் அடுத்த மாதம் முதல் வாகனங்கள் செல்ல தடை - மேயர் தகவல்

மாரிஸ் மேம்பாலத்தை முழுமையாக சீரமைக்கும் பணிகள் அடுத்த மாதம் தொடங்க உள்ளது.

திருச்சி மாநகர போக்குவரத்தில் தவிர்க்க முடியாத சாலையாக உள்ளது, கோட்டை ரெயில்வே மேம்பாலம் ஆகும் . திருச்சி மெயின்கார்டுகேட் பகுதியையும், தில்லைநகர், உறையூர், தென்னூர் பகுதிகளை இணைக்கும் விதமாக இந்த ரெயில்வே மேம்பாலம் அமைந்துள்ளது. திருச்சி - கரூர் ரெயில்வே மார்க்கத்தின் மீது கட்டப்பட்டுள்ள இந்த பாலம் ஆங்கிலேயர் காலத்தில் 1866ம் ஆண்டு கட்டப்பட்டது. 157 வருட பழமையான இந்த பாலம் வலுவிழந்து வருகிறது. இதன் காரணமாக கடந்த 2020 மழையின் போது பக்கவாட்டு மண் சரிந்து பழுது ஏற்பட்டது. இதனால் அந்த பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, சீரமைக்கும் பணி நடைபெற்றது. ரூ.2.90 கோடி செலவில் சீரமைக்கும் பணி நடைபெற்று மீண்டும் போக்குவரத்திற்கு அனுமதிக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த பாலம் மிகவும் பலவீனமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். பாலத்தின் தூண்களும், பக்கவாட்டு சுவர்களும் பல இடங்களில் வெடிப்புகள் ஏற்பட்டு பிளந்து காணப்படுகிறது. கனரக வாகனத்தின் பளு தாங்காமல் பாலத்தின் மீது உள்ள சாலைகளும் பள்ளம் ஏற்பட்டு உள்ளது.

திருச்சி மாரிஸ் மேம்பாலத்தில் அடுத்த மாதம் முதல்  வாகனங்கள் செல்ல தடை - மேயர் தகவல்

இதன் காரணமாக ரெயில்வே நிர்வாகம், இந்த பாலத்தின் மீது போக்குவரத்தை தடை செய்ய வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியது. இதனை தொடர்ந்து ரூ.34 கோடி ரூபாய் செலவில் பாலத்தை புதிதாக கட்டுவதற்கு கடந்த 2022-23 நிதி நிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் 50 சதவீதம் மாநகராட்சி, 50 சதவீதம் ரெயில்வே நிர்வாகம் ஏற்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான டெண்டரும் கோரப்பட்டிருந்தது. இதற்கான டெண்டரும் கடந்த ஆகஸ்ட் மாதமே முடிவு செய்யப்பட்டு விட்டது. ஆனால் ஏனோ பணிகள் இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது. மேலும் வலுவிழந்து, பலவீனமான நிலையில் உள்ள, இந்த கோட்டை ரெயில்வே மேம்பாலத்தில் பல ஆயிரக்கணக்கான மக்கள் வாகனங்களில் சென்று கொண்டிருக்கின்றனர். ஆபத்தை உணர்ந்தவர்களாய் மாநகராட்சி நிர்வாகம் பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என்பது திருச்சி மாநகர மக்களின் பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது என தெரிவித்தனர்.

மேலும் ஆங்கிலோர்கள் காலத்தில் கட்டப்பட்ட இந்த பாலம் பலமுறை சீரமைக்கப்பட்டாலும் ,அவ்வபோது சில பள்ளங்கள் ,தடுப்புச் சுவடுகள் உடைவது போன்ற நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. திருச்சி மாநகரில் முக்கிய வழித்தடங்களில் ஒன்றான மாரிஸ் மேம்பாலம் வாகனங்கள் தொடர்ந்து செல்லும்போது அதிர்வுகள் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த  அச்சத்துடனே அந்த பாதையை கடந்து செல்கின்றனர். ஆகையால் உடனடியாக இந்த பாலத்தை சீரமைக்க வேண்டும், பெரும் விபத்துகள் நடப்பதற்கு முன்பே பணிகள் தொடங்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

திருச்சி மாரிஸ் மேம்பாலத்தில் அடுத்த மாதம் முதல்  வாகனங்கள் செல்ல தடை - மேயர் தகவல்

இதுகுறித்து திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகனிடம் கேட்டபோது, திருச்சி மாநகராட்சியின் முக்கியமான வழிதடம் இந்த மாரிஸ் பாலம் ஆகும். ஏற்கெனவே பல முறை இந்த பாலத்தை சீரமைப்பு பணிகள் நடந்தது. இந்நிலைல் போக்குவரத்து வாகனங்கள் அதிகரித்ததால், இந்த பாலத்தை முழுமையாக சீரமைத்தும், அகலபடுத்தும் பணிகள் அடுத்தமாதம் நடைபெறவுள்ளது என தெரிவித்தார். குறிப்பாக மேம்பாலத்தை வலுவாகவும், தரமாகவும் சீரமைத்து விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மாநகராட்சி முன்னெடுத்து வருகிறது. அதே நேரம் பணிகள் தொடங்கும் போது மேம்பாலத்தில் முழுமையாக வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்படும். பணிகள் முடியும் வரை மாற்று பாதையில் வாகன ஓட்டிகள் சொல்ல வேண்டும். ஆகையால் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் கேட்டுக்கொண்டார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு  பெருமிதம்!
UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு பெருமிதம்!
எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி
எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி
ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?FORM-க்கு வரும் அதிமுக : வழிகாட்டும் MASTERMIND : திமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்ஹெல்மெட் போட்டா தங்க காசு! NEW YEAR சர்ப்ரைஸ்! துள்ளிக் குதித்த வாகன ஓட்டிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு  பெருமிதம்!
UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு பெருமிதம்!
எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி
எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி
ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
மக்களே மறந்து போன மதகஜராஜா! 12 வருடங்களுக்கு பிறகு ரிலீஸ் - என்னய்யா சொல்றீங்க?
மக்களே மறந்து போன மதகஜராஜா! 12 வருடங்களுக்கு பிறகு ரிலீஸ் - என்னய்யா சொல்றீங்க?
ரயிலில் மதுரைக்கு பார்சலில் வந்த 240 கிலோ கணேஷ் புகையிலை பறிமுதல்
ரயிலில் மதுரைக்கு பார்சலில் வந்த 240 கிலோ கணேஷ் புகையிலை பறிமுதல்
Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!
Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!
Watch  video: அதே ஆள்.. அதே பந்து..  ஸ்லிப்பில் மீண்டும் அவுட்டான கோலி!
Watch video: அதே ஆள்.. அதே பந்து.. ஸ்லிப்பில் மீண்டும் அவுட்டான கோலி!
Embed widget