மேலும் அறிய

பாடைகட்டி, ஒப்பாரி வைத்து விவசாயிகள் போராட்டம்.. திருச்சியில் குவிந்த உழவர்கள்..!

திருச்சி மாவட்டத்தில் பல்வேறு கோடிக்கைகளை வலியுறுத்தி 16 நாட்களாக விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கடந்த 16 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று பாடைகட்டி ஒப்பாரி வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாய கடன் தள்ளுபடி:

மேலும் இந்த போராட்டத்தின் முக்கிய கோரிக்கையான   2016 - ல் வறட்சியின் பொழுது பெரிய விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்யுங்கள் என்று உயர்நீதிமன்றம் கூறிய பிறகு , பெரிய விவசாயிகள் வாங்கிய குறுகிய கால கடனை விவசாயிகளின் கையெழுத்தை பெறாமலே போலியாக  கையெழுத்தை  போட்டு மத்திய கால கடனாக அதிமுக அரசு மாற்றி வைத்தது.

ஆகையால்  விவசாய கடனை தள்ளுபடி செய்து விவசாயிகளை காப்பாற்ற வேண்டுகிறோம். மேட்டூரில் இருந்து வெள்ள நீராக கடலில் கலக்கும் வெள்ள நீரை மேட்டூர் அணையின் வடபுறம் கால்வாய் வெட்டி, அய்யாற்றுடன் இணைத்து சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்ட விவசாயிகளை காப்பாற்ற வேண்டுகிறோம். அதேபோல் ஆலடியாறு டேமில், துளையிட்டு கீழ்கூடலூர், கம்பம், தேனி, பெரியகுளம், திண்டுக்கல், எரியோடு, கடவூர் வழியாக பொன்னியாறு டேமில் இணைத்தால், தேனி, மதுரை, திண்டுக்கல், கரூர், திருச்சி மாவட்ட விவசாயிகள் பயன்பெற முடியும் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 

பாடைகட்டி, ஒப்பாரி வைத்து விவசாயிகள் போராட்டம்.. திருச்சியில் குவிந்த உழவர்கள்..!

கோரிக்கைகள்:

மேலும், தனியார் நிறுவனங்கள் ரூ.5,00,000 கடன் கொடுத்து 48 மாதங்களில் ரூ.7 லட்சம் கட்ட சொல்லி கையெழுத்து வாங்கி விட்டு ரூ.62 லட்சம் கடனை திருப்பி கட்டிய பிறகு 71 மாதங்களாக்கி 11, 1/2 லட்சம் கட்ட சொல்லி 1 தவனை கட்டவில்லையென்றால் டிராக்டர், கார்களை தூக்கி செல்பவர்களை கைது செய்ய வேண்டுகிறோம்.  மேலும், விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான நெல்லுக்கு கிலோவுக்கு ரூ.54, கரும்புக்கு 1 டன்னுக்கு ரூ.8100, வழங்க உதவிட வேண்டுகிறோம். குறிப்பாக காவிரியில் மேகதாது அணைக்கட்ட கூடாது என்றும் காவிரியில் மாத மாதம் தண்ணீர் திறக்க மத்திய அரசை வற்புறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

விவசாயிகள் உரிமைக்காக ஜனநாயக நாட்டில் டெல்லி சென்று போராட முதலமைச்சர் அனுமதி வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை விவசாயிகள் திடீரென்று காவிரி ஆற்றில் உள்ளே இறங்கி போராட்டம் நடத்தியதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தடையை மீறி ஆற்றில் இறங்கி போராடிய விவசாயிகள் 25 பேர்களை கைது செய்தனர்.  மேலும் அனுமதி பெற்று அமைதி வழியில் போராட்டம் நடத்தியவர்களையும் காவல்துறை கைது செய்தனர். 

பாடைகட்டி, ஒப்பாரி வைத்து விவசாயிகள் போராட்டம்.. திருச்சியில் குவிந்த உழவர்கள்..!

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அய்யாகண்ணு, பேசியது, தொடர்ந்து 16-வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகிறோம். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காத்திட மத்திய  அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகிறோம்.

மேலும் மத்திய அமைச்சர் அமித்ஷா தொடர்ந்து பொய்களை கூறி வருகிறார், விவசாயிகள் வாழ்வாதத்திற்காக எந்த நடவடிக்கையும் மத்திய அரசு எடுக்கவில்லை. விவசாயிகளின் விளைச்சலுக்கு உரிய விலையை நிர்ணயிக்க வேண்டும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காத்திட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோன்று காவிரியில் இருந்து தமிழகத்திற்கு உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் என கோரிக்கையை முன் வைத்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Pongal Gift: பொங்கலுக்கு ஏன் ரூ.1000 வழங்கப்படவில்லை? ; நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சொன்னது என்ன?
பொங்கலுக்கு ஏன் ரூ.1000 வழங்கப்படவில்லை? ; நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சொன்னது என்ன?
"சார், பார்த்து சுடுங்க" குறி பார்த்து சுட்ட ராஜ்நாத் சிங்.. அசந்து போன ராணுவ வீரர்கள்!
"குற்றத்தை ஒத்துக்கோங்க" விமானத்தை சுட்டது யார்? ரஷியா மீது அஜர்பைஜான் அதிபர் பரபர குற்றச்சாட்டு!
பிள்ளைகளை வளர்ப்பது பெரிய விஷயம் அல்ல, பகுத்தறிவோட வளர்ப்பது பெரிய விஷயம் - அமைச்சர் அன்பில் மகேஷ்
பிள்ளைகளை வளர்ப்பது பெரிய விஷயம் அல்ல, பகுத்தறிவோட வளர்ப்பது பெரிய விஷயம் - அமைச்சர் அன்பில் மகேஷ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Mukundan PMK : ’’தாத்தா மாமா அடிச்சுக்காதீங்கஎனக்கு பதவியே வேண்டாம்’’முகுந்தன் எடுத்த முக்கிய முடிவுAnna University Issue | ‘'வீடியோ எடுத்து மிரட்டுனான்’’ பாதிக்கப்பட்ட மாணவி பகீர்!வெளியான FIR ReportAnna University Issue : 15 வழக்குகள்...திமுக நிர்வாகி!RAPIST ஞானசேகரனின் பின்னணி!யார் யாருடன் தொடர்பு?RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal Gift: பொங்கலுக்கு ஏன் ரூ.1000 வழங்கப்படவில்லை? ; நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சொன்னது என்ன?
பொங்கலுக்கு ஏன் ரூ.1000 வழங்கப்படவில்லை? ; நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சொன்னது என்ன?
"சார், பார்த்து சுடுங்க" குறி பார்த்து சுட்ட ராஜ்நாத் சிங்.. அசந்து போன ராணுவ வீரர்கள்!
"குற்றத்தை ஒத்துக்கோங்க" விமானத்தை சுட்டது யார்? ரஷியா மீது அஜர்பைஜான் அதிபர் பரபர குற்றச்சாட்டு!
பிள்ளைகளை வளர்ப்பது பெரிய விஷயம் அல்ல, பகுத்தறிவோட வளர்ப்பது பெரிய விஷயம் - அமைச்சர் அன்பில் மகேஷ்
பிள்ளைகளை வளர்ப்பது பெரிய விஷயம் அல்ல, பகுத்தறிவோட வளர்ப்பது பெரிய விஷயம் - அமைச்சர் அன்பில் மகேஷ்
கேம் சேஞ்சர் படத்தை தமிழ்நாட்டில் வெளியிடுவதற்கு லைகா எதிர்ப்பு ? உடன்படிக்கைக்கு வர மறுக்கும் ஷங்கர்
கேம் சேஞ்சர் படத்தை தமிழ்நாட்டில் வெளியிடுவதற்கு லைகா எதிர்ப்பு ? உடன்படிக்கைக்கு வர மறுக்கும் ஷங்கர்
TN Rain: ஜன.4-ம் தேதி வரை மழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
TN Rain: ஜன.4-ம் தேதி வரை மழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
"தடைகளைத் தகர்ப்போம்.. எதேச்சதிகாரத்தை வெல்வோம்" தொண்டர்களுக்கு கடிதம் எழுதிய ஸ்டாலின்!
வேறு வழியில்லை; அன்புமணிகிட்ட கொடுத்தேன்: தனியாக ராமதாஸ் சொன்ன விஷயம்! பொதுவில் போட்டுடைத்த சீமான்!
வேறு வழியில்லை; அன்புமணிகிட்ட கொடுத்தேன்: தனியாக ராமதாஸ் சொன்ன விஷயம்! பொதுவில் போட்டுடைத்த சீமான்!
Embed widget