மேலும் அறிய

அடுத்தாண்டு தொடங்கும் திருச்சி ஒருங்கிணைந்த பேருந்து நிலைய பணிகள்...!

திருச்சி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவான பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய பணிகள் புத்தாண்டில் தொடங்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருச்சி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவான பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த  பேருந்து நிலைய திட்டம் ஆகும். தற்போது இந்த திட்டத்தை செயல்படுத்த மாநகராட்சி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக  460 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய ஒருங்கிணைந்த பேருந்து முனையம் கட்டப்பட இருப்பதாக திருச்சி மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கான முன்வரைவு திட்டம், சட்டசபையில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த புதிய பேருந்து நிலையம், திருச்சி- மதுரை நெடுஞ்சாலையில் பஞ்சப்பூரில் உள்ள 575 ஏக்கர் அரசு நிலத்தில் கே.சாத்தனூர் மற்றும்  பிராட்டியூர் கிழக்கு ஊராட்சிக்கு உட்பட்ட 115.68 ஏக்கர் இடம் தேர்வு செய்து இறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான பணிகளை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்களின்  ஆலோசனையின் பேரில் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

அடுத்தாண்டு தொடங்கும்  திருச்சி ஒருங்கிணைந்த பேருந்து நிலைய பணிகள்...!

புதிதாக அமைக்கப்பட உள்ள ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில், நகர பேருந்துகள், அரசு போக்குவரத்து கழக விரைவு பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் நிறுத்தம் என தனித்தனியாக அமைக்கப்பட உள்ளதாகவும்,  சரக்கு முனையம் என்பது, திருச்சி மக்களின் நீண்டநாள் கனவாக உள்ளது, எனவே இந்த ஒருங்கிணைந்த பேருந்து முனைய திட்டத்தின் கீழ், சரக்கு முனையமும் அமைக்கப்பட உள்ளது. திருச்சி–புதுக்கோட்டை, திருச்சி–திண்டுக்கல் மற்றும் திருச்சி சென்னை வழித்தடங்கள் எளிதில் அணுகக் கூடிய பகுதியாக இது உள்ளது. சரக்கு முனையத்தை அமைக்க, உள்ளாட்சி நிர்வாகம் இதை சிறந்த இடமாக அங்கீகரித்து உள்ளது. மேலும் திருச்சி மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில், மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நாள்தோறும் கிட்டத்தட்ட 15 ஆயிரம் லாரிகள் திருச்சிக்கு வந்து செல்கின்றன. இதுமட்டுமல்லாது, திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நாள்தோறும் 2,245 பேருந்துகளும், 7,975 பேருந்து சேவைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. 6.6 ஏக்கர் பரப்பளவில் அமைந்து உள்ள மத்திய பேருந்து நிலையத்தை நாள்தோறும் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் பயன்படுத்தி வரும் நிலையில், 2006ஆம் ஆண்டிற்கு பிறகு, இடப்பற்றாக்குறை காரணமாக இது மேம்படுத்தப்படவே இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

அடுத்தாண்டு தொடங்கும்  திருச்சி ஒருங்கிணைந்த பேருந்து நிலைய பணிகள்...!

அதன் ஒரு பகுதியாக பேருந்து நிலையத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தில் மண் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, திருச்சி மாநகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் மாநகராட்சி பேருந்துக்கள் நிறுத்துமிடம், தொலைதூர அரசு விரைவுப் பேருந்துகள், ஆம்னி பேருந்துகள், நிறுத்துமிடம் என ஆகியவற்றுடன் கூடியதாக ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கும் திட்டம் ரூபாய் 460 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது என தெரிவித்தனர். இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தில் திருச்சி அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி சிவில் இன்ஜினியரிங் துறை பேராசிரியர்கள் கொண்ட குழுவினர் மண் பரிசோதனை செய்துள்ளனர். 115 ஏக்கரில் தேர்வு செய்யபட்ட 70 இடங்களில் இருந்து மண் மாதிரிகள் எடுக்கப்பட்டு உள்ளன, இவற்றைக்கொண்டு அந்த இடத்தின் பாதுகாப்பு தன்மை, தாங்கும் திறன் ,உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் சோதனை செய்யப்பட்டு அது குறித்து முழு விவரங்களுடன் கூடிய அறிக்கையை அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் கொண்ட குழுவினர் தற்போது சமர்ப்பித்துள்ளனர். அறிக்கையில் பேருந்து நிலையம் அமைப்பதற்கான அனைத்து சாத்தியகூறுகள் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பணிகள் தொடங்குவதற்கான தகுதி வாய்ந்த ஏஜென்சி மட்டும் நிறுவனங்களை தேர்வு செய்வதற்கான டெண்டர் மாநகராட்சி நிர்வாகத்தால் கோரப்பட்டுள்ளது. நவம்பர் மாதம் 15ஆம் தேதி வரை நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு 16ஆம் தேதி இறுதி செய்யப்படும். பின்னர் தேர்வு செய்யப்படும் நிறுவனத்தின் சம்பந்தப்பட்ட இடங்களை ஆய்வு செய்து திட்டத்திற்கான விரிவான அறிக்கையை தயார் செய்வார்கள் அந்த அறிக்கையின் அடிப்படையில் கருத்துரு தயார் செய்து அரசுக்கு அனுப்பப்பட்டு அரசாணை பெறப்படும். இந்தக் காலத்திற்கு இடையே இத்திட்டம் சார்ந்த மற்ற பணிகளும் மேற்கொள்ளப்படும், அனேகமாக பூர்வாங்க பணிகள் முடிந்து புத்தாண்டில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் பணிகள் தொடங்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
விமானப் பயணிகள் கவனத்திற்கு! விடாது பெய்யப்போகும் மழை! விமான நிலையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
விமானப் பயணிகள் கவனத்திற்கு! விடாது பெய்யப்போகும் மழை! விமான நிலையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
"அச்சத்தில் மக்கள்" புதிய பாம்பன் பாலத்தில் பாதுகாப்பு குறைபாடுகள்.. ரயில்வே அமைச்சருக்கு பறந்த கடிகம்!
கரூரில் விமான நிலையம் எப்போது வரும்?  -  அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்த சூப்பர் அப்டேட்
கரூரில் விமான நிலையம் எப்போது வரும்? - அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்த சூப்பர் அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Father Crying : ’’FOOTBOARD அடிக்காதீங்க பா'’காலில் விழுந்து கதறிய தந்தை தேம்பி அழுத மாணவர்கள்BJP Councillor : ’’உதயநிதி பிறந்தநாளுக்கா?’’ SWEET கொடுத்த பாஜக கவுன்சிலர்!திமுக கவுன்சிலர் THUGLIFEKarur Drunken Girl | ”மூடிட்டு போங்க டி...” போலீஸை மிரட்டிய பெண் மதுபோதையில் ATROCITY! | MK Stalinவிஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
விமானப் பயணிகள் கவனத்திற்கு! விடாது பெய்யப்போகும் மழை! விமான நிலையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
விமானப் பயணிகள் கவனத்திற்கு! விடாது பெய்யப்போகும் மழை! விமான நிலையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
"அச்சத்தில் மக்கள்" புதிய பாம்பன் பாலத்தில் பாதுகாப்பு குறைபாடுகள்.. ரயில்வே அமைச்சருக்கு பறந்த கடிகம்!
கரூரில் விமான நிலையம் எப்போது வரும்?  -  அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்த சூப்பர் அப்டேட்
கரூரில் விமான நிலையம் எப்போது வரும்? - அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்த சூப்பர் அப்டேட்
TNUHDB : “90% காலி, 100% காலி” தள்ளாடும் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்..!
TNUHDB : “90% காலி, 100% காலி” தள்ளாடும் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்..!
Dhanush Aishwarya : தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து வாங்கியாச்சு...குழந்தைகள் நிலைமை என்ன?
Dhanush Aishwarya : தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து வாங்கியாச்சு...குழந்தைகள் நிலைமை என்ன?
காதலர் கொடுத்த மன உளைச்சல்: அசைவ உணவுக்காக உயிரை விட்ட பெண் விமானி? என்ன நடந்தது?
காதலர் கொடுத்த மன உளைச்சல்: அசைவ உணவுக்காக உயிரை விட்ட பெண் விமானி? என்ன நடந்தது?
Fengal Cyclone Update: ’’வரும்.. ஆனா வராது..’’ ஃபெங்கல் புயலாக கரையை கடக்காது; என்ன காரணம் தெரியுமா?
Fengal Cyclone Update: ’’வரும்.. ஆனா வராது..’’ ஃபெங்கல் புயலாக கரையை கடக்காது; என்ன காரணம் தெரியுமா?
Embed widget