மேலும் அறிய

பஞ்சப்பூர் மட்டுமல்ல... அங்கிருக்கிற குளமும் பளபளப்பாகுது: செம ஐடியாவோட களமிறங்குது மாநகராட்சி

பஞ்சப்பூர் குளத்தை 23.2 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்த திட்டமிட்டுள்ளது. திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த குளம், கொட்டப்பட்டு குளம் போல் மேம்படுத்தப்படும்.

தஞ்சாவூர்: புதுப் பொலிவு பெற்றுள்ள திருச்சி பஞ்சப்பூரில் குளத்தை சீரமைக்க மாநகராட்சி புதிய திட்டம் தீட்டியுள்ளதாம். இதற்காக ரூ.23.2 லட்சம் நிதி ஒதுக்கீடு செஞ்சு இருக்காங்க. இனி திருச்சியின் அடையாளம் என்றால் அது பஞ்சப்பூர்தான் என்று சொல்லும் அளவிற்கு வளர்ச்சியில் அசுர வேகம் காட்டி வருகிறது. 

அந்த வகையில் திருச்சி மாநகராட்சி பஞ்சப்பூர் குளத்தை 23.2 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்த திட்டமிட்டுள்ளது. திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த குளம், கொட்டப்பட்டு குளம் போல் பொழுதுபோக்கு அம்சங்களுடன் மேம்படுத்தப்படும். குளத்தின் கரைகள் பலப்படுத்தப்பட்டு, நீர்வரத்து மற்றும் வெளியேறும் வழிகள் சீரமைக்கப்படும் என்று சொல்றாங்க.

இந்த பஞ்சப்பூர் குளத்தை மேம்படுத்த ஒரு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ. 23.2 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் (NH) இந்த குளம் இருக்கிறது. பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்துக்கு (IBT) அருகிலேயே இந்த குளம் இருக்கிற காரணத்தால் சில பொழுதுபோக்கு அம்சங்களையும் சேர்க்க இருக்காங்களாம். குளத்தின் அருகில் மக்கள் பொழுதை கழிக்கும் வகையில் வசதிகள் செய்ய இருக்காங்களாம். அதாவது இதையும் ஒரு பூங்கா போல் மாற்ற இருக்காங்க.

43.4 ஹெக்டேர் பரப்பளவில் இருக்கும் இந்த பஞ்சப்பூர் குளத்தை தூர் வார திட்டமிட்டுள்ளனர். குளத்தோட கரைகளை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது. திருச்சி விமான நிலையத்தின் அருகில் இருக்கும் கொட்டப்பட்டு குளம் மாதிரி இந்த குளத்திலும் நிறைய வசதிகள் செய்ய இருப்பதாக தகவல்கள் வலுவாக கிடைத்துள்ளது. 

குளத்துக்கு தண்ணீர் வரும் வழியையும், தண்ணீர் வெளியே செல்லும் வழியையும் சரி செய்ய இருக்காங்க. காவிரி தண்ணீரை சேமிக்கவும் யோசனை இருக்காம். அதுமட்டுமா? அலங்கார விளக்கு என்ன...  பெஞ்சுகள், குழந்தைகள் விளையாடற இடம் என்னன்னு ஏகப்பட்ட வசதிகள் செய்து இதை சுற்றுலா தலம் போல் மாற்ற இருக்காங்க. அதுமட்டுமா? இன்னும் என்ன வசதிகளும் செய்யலாம்னு யோசிக்கிறாங்கப்பா.
 
இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கூறுகையில்,  முதலில் திருச்சி மாநகராட்சி 7 குளங்களை மேம்படுத்தலாம் என திட்டம் தீட்டியது. ஆனா பட்ஜெட் பெரிசா இருந்துச்சு. அதனால் இப்ப முதற்கட்டமாக பஞ்சப்பூர் குளத்தை மட்டும் மேம்படுத்த இருக்காங்க. பஞ்சப்பூர் பேருந்து நிலையம் நிறைய பயணிகளை ஈர்க்கும். நகரமும் தெற்கு பக்கம் விரிவாக்கம் ஆகும். அதனால பஞ்சப்பூர் குளத்தை நன்றாக மேம்படுத்தினால் அந்த பகுதிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பஞ்சப்பூரை சுத்தி நிறைய வளர்ச்சி இருக்கும் என்று கால்குலேஷன் போட்டு இருக்காங்க. இந்த குளத்தை மேம்படுத்தினால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்பது அடுத்த கால்குலேஷன் என்று தெரிவித்தனர்.

பஞ்சப்பூர் குளத்துக்கு ஒரு திட்டம் தயாராக உள்ளது. அதேபோல் மற்ற 6 குளங்களையும் மேம்படுத்த போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு தேவையான பணத்தை மத்திய, மாநில அரசுகளோட திட்டங்கள் மூலமா திரட்ட போறதாக கூறப்படுகிறது. திருச்சி நகரத்தில் எந்தெந்த குளங்களை நீர் மேலாண்மை திட்டத்தில் சேர்க்கப்படும் என்ற சில தகவல் கிடைச்சு இருக்கு. 

அந்த குளங்கள் புங்கனூர் குளம் - 133 ஹெக்டேர், கோத்தமங்கலம் பெரிய குளம் - 61.1 ஹெக்டேர்,  பிராட்டியூர் குளம் - 48.2 ஹெக்டேர், பஞ்சப்பூர் குளம் 43.4 ஹெக்டேர், கல்லுக்குடி குளம் - 22.4 ஹெக்டேர், மலைப்பட்டி குளம் - 16 ஹெக்டேர்,  கோத்தமங்கலம் சிறிய குளம் - 12.3 ஹெக்டேர், மொத்தமாக இந்த குளங்களில் பரப்பளவு - 336.7 ஹெக்டேர்

இதுல தண்ணீர் வரத்து, மற்றும் தண்ணீர் செல்லும் வழி சரி செய்யப்படும். குளத்தை தூர் வாரி, கரைகளை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் பொழுதுபோக்குக்காக குளத்தில் தனியாக இடம் அமைத்தல் என்று செம திட்டம் போட்டுக்கிட்டு இருக்காங்க. இனி பஞ்சப்பூர்... பளபளப்பூர்தான் போங்க.

தலைப்பு செய்திகள்

இரும்பு உத்தரங்கள் வந்தாச்சு... பணிகள் ஸ்பீடு பிடிச்சாச்சு:திருச்சி கோட்டை மேம்பாலம் ஜனவரிக்குள் திறக்க நடவடிக்கை?
இரும்பு உத்தரங்கள் வந்தாச்சு... பணிகள் ஸ்பீடு பிடிச்சாச்சு:திருச்சி கோட்டை மேம்பாலம் ஜனவரிக்குள் திறக்க நடவடிக்கை?
திருச்சியில் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி
திருச்சியில் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி
விளையாட்டு வீரர்களின் கனவுக்கு பூட்டு... அரசின் கோடிக்கணக்கான முதலீடு வீணாகும் அபாயம்: எங்கு தெரியுங்களா?
விளையாட்டு வீரர்களின் கனவுக்கு பூட்டு... அரசின் கோடிக்கணக்கான முதலீடு வீணாகும் அபாயம்: எங்கு தெரியுங்களா?
தமிழகத்துக்கே முன்மாதிரி... திருடர்களுக்கு ‘செக்’:  ரூ.40 லட்சம் சொந்த நிதியில் 200 சிசிடிவி கேமராக்கள் பொறுத்திய மக்கள்
தமிழகத்துக்கே முன்மாதிரி... திருடர்களுக்கு ‘செக்’:  ரூ.40 லட்சம் சொந்த நிதியில் 200 சிசிடிவி கேமராக்கள் பொறுத்திய மக்கள்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
Trump Praises India: “அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
“அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
Yamaha Scooter Launch: ஆக்டிவாவுக்கு ஆப்பு கன்பார்ம்.! ஃபாசினோ, ரேZR ஹைப்ரிட்களின் 2026 பதிப்பை இறக்கிய யமாஹா; விலை என்ன.?
ஆக்டிவாவுக்கு ஆப்பு கன்பார்ம்.! ஃபாசினோ, ரேZR ஹைப்ரிட்களின் 2026 பதிப்பை இறக்கிய யமாஹா; விலை என்ன.?
Trump on Hormuz: ''ஹார்முஸ் அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது''; மீண்டும் ஈரானை சீண்டும் ட்ரம்ப்
''ஹார்முஸ் அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது''; மீண்டும் ஈரானை சீண்டும் ட்ரம்ப்
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
Embed widget