மேலும் அறிய

திருச்சி: ஒரேநாளில் 742 பேருக்கு கொரோனா தொற்று

திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கபட்டு இதுவரை 4713 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தமிழகத்தில் கொரோனா, ஓமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நோய் பரவுவதை  கட்டுப்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் முழு ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை தோறும் தளர்வுகள் இல்லாமல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது . இந்நிலையில் மக்கள் அதிகமாக கூடும் நிகழ்ச்சிகளுக்கு  கட்டுப்பாடுகள் விதித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது, இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் மக்களுக்கு தொற்று பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்கபட்டுள்ளது. மேலும் மக்கள் மிகுந்த கவனமுடன் செயல்பட வேண்டும், குறிப்பாக அரசு கூறிய விதிமுறைகளை பொதுமக்கள் முழுமையாக கடைபிடிக்க வேண்டும், இல்லை என்றால்  நோய் தொற்று அதிக அளவில் பரவி பாதிப்பை ஏற்படுத்தும். கொரோனா தடுப்பூசியை அனைவரும் செலுத்திக்கொள்ள வேண்டும்  என்று சுகாதார துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


திருச்சி: ஒரேநாளில் 742 பேருக்கு கொரோனா தொற்று

திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை இம்மாதம் தொடக்கத்தில் இருந்து கொரோனா தொற்றால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக அதிகரித்து வருகிறது. இதனை தொடர்ந்து இன்று கொரோனா தொற்றால் 742 பேர்கள் பாதிக்கபட்டுள்ளனர். அதேசமயம் 569 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒருவர் உயிரிழப்பு . இதனை தொடர்ந்து  மருத்துவமனையில் 4713 பேர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் இதுவரை தொற்றால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 88128, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 82295, இறந்தவர்களின் எண்ணிக்கை 1120 ஆகும். குறிப்பாக திருச்சி மாவட்டத்தில் இதுவரை 5 நபர்களுக்கு ஓமிக்ரான் தொற்றால் பாதிக்கபட்டு சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


திருச்சி: ஒரேநாளில் 742 பேருக்கு கொரோனா தொற்று

மேலும் கொரோனா தொற்றை விட  ஒமிக்ரான் தொற்று  அதிக வேகமாக பரவ கூடும் என்பதால் பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். குறிப்பாக ஓமிக்ரான் தொற்று பற்றி அச்சப்பட தேவையில்லை. பொதுமக்கள் அரசு கூறும் விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். முக கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். பொது இடங்களில் கூட்டமாக மக்கள் இருப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் இரண்டு தவணை தடுப்பூசிகளை கட்டாயமாக எடுத்துக் கொள்ள வேண்டும் இவற்றை நாம் முழுமையாக கடைப்பிடித்தாலே தொற்றில் இருந்து நம்மை நாம் காத்துக் கொள்ள முடியும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக கடந்த சில மாதங்களாக பொதுமக்கள் அலட்சியத்தினால்  தற்போது மீண்டும் கொரோனா தொற்று அதிக அளவில் பரவி வருகிறது. ஆகையால் மக்கள் அலட்சியப்போக்கு தவிர்த்து பாதுகாப்பாக அரசு கூறும் நடவடிக்கைகளுக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா விதிமுறைகள். கட்டுபாடுகளை மாவட்ட நிர்வாகம் தீவிரபடுத்தியுள்ளது.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

தலைப்பு செய்திகள்

தனியார் பேருந்துகளின் வேகப் போட்டி... அலறவிடும் ஏர்ஹாரன்கள்: உயிரை கையில் பிடித்தபடி செல்லும் மக்கள்
தனியார் பேருந்துகளின் வேகப் போட்டி... அலறவிடும் ஏர்ஹாரன்கள்: உயிரை கையில் பிடித்தபடி செல்லும் மக்கள்
Trichy power cut: திருச்சியில் நாளை (ஆக.04) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? பட்டியல் இதோ!
திருச்சியில் நாளை (ஆக.04) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? பட்டியல் இதோ!
வாடகை பாக்கி வைத்திருந்த கடைகள்... அதிரடியாக பூட்டி சீல் வைத்த திருச்சி மாநகராட்சி
வாடகை பாக்கி வைத்திருந்த கடைகள்... அதிரடியாக பூட்டி சீல் வைத்த திருச்சி மாநகராட்சி
சென்னையிலிருந்து திருச்சிக்கு இனி 3 மணி நேரம்தான்...! இனி டோல்கேட்டில் நிற்கத் தேவையில்லை...
சென்னையிலிருந்து திருச்சிக்கு இனி 3 மணி நேரம்தான்...! இனி டோல்கேட்டில் நிற்கத் தேவையில்லை...

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kanimozhi: அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
Donald Trump: ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
TN Weather News: 7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Embed widget