திருச்சி: நாவலூர் குட்டப்பட்டில் ஜல்லிக்கட்டு - மாடு முட்டியதில் சாலையில் நடந்து சென்றவர் உயிரிழப்பு
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட நவலூர் குட்டப்பட்டு கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டியதால் ஒருவர் பலி.
பொங்கல் பண்டிகையை ஒட்டி திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட ராம்ஜிநகர் அடுத்துள்ள நவலூர் குட்டப்பட்டு கிராமத்தில் இன்று காலை 7.30 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கப்படும் அறிவிக்கப்பட்ட நிலையில் காலதாமதமாக 10:30 மணிக்கு தான் ஜல்லிக்கட்டு போட்டி துவங்கியது. இந்த ஜல்லிக்கட்டில் 500 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்கின்றனர். ஜல்லிக்கட்டு காளைகள் மாடுபிடி வீரர்களை அருகில் விடாமல் விரட்டியடித்தது மாடுபிடி வீரர்கள் காளைகளை பிடிக்க முடியாமல் தவித்தனர். காளைகளை அடக்க முயன்ற போது 30 மேற்பட்ட வீரர்கள் காளைகள் முட்டி தூக்கியதால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதில் வெற்றி பெறும் மாடு பிடி வீரர்களுக்கும், காளைகளுக்கும் சைக்கிள், தங்க காசு, வெள்ளி காசு, ப்ரிட்ஜ், குக்கர் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட உள்ளது. பார்வையாளர்கள் போட்டியினை நின்று கண்டுகளிக்க சுற்றிலும் இரும்பிலான கேலரி அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் மாடுபிடி நடைபெறும் மைதானத்திற்குள் பார்வையாளர்கள் அத்துமீறி உள்ளே நுழைந்து விடாதபடியும், 8 அடி உயர இரும்பிலான பாதுகாப்பு அரண்கள் மைதானத்தை சுற்றிலும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மாடுகள் பாதுகாப்புடன் அழைத்துவர ஏதுவாக இரும்பு மற்றும் மரத்தினால் ஆன தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்ட மாடுபிடிவீரர்கள் மட்டுமே பங்கேற்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் உள்ளுர் பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வெளியூர் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது. வெற்றிபெறும் மாடுபிடிவீரர் மற்றும் காளைகளுக்கு தங்கம், வெள்ளிகாசுகள், பிரிட்ஜ், டிவி உள்ளிட்ட பல்வேறு பரிசுப்பொருட்கள் வழங்கப்படவுள்ளது.
ஜல்லிகட்டு போட்டி நடைபெறும் நவலூர் குட்டப்பட்டு வாடிவாசலில் திறக்கப்பட்ட காளை மத்திய சட்டப்பள்ளி அருகே நவலூர் குட்டப்பட்டு பாரதி நகரை சேர்ந்த வினோத் குமார் (24) நடந்து சென்ற போது காளை முட்டி தள்ளியதில் அவர் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்துவிட்டார். தற்போது அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. இதுவரை ஜல்லிக்கட்டு போட்டியில் இதுவரை 31 பேர் படுகாயமடைந்துள்ளனர். 7 பேர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுளளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் உற்ச்சாகம் குறையாமல் வீரர்கள் காளைகளை அடுக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனை தொடர்ந்து நேரம் குறைவாக இருப்பதால் விரைந்து போட்டியை முடிக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதுபோன்று எந்த விதமான அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பு பணியில் 300க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.