மேலும் அறிய

திருநங்கைக்கு பாலியல் தொல்லை விவகாரம் : திருச்சி சிறைக் காவலர் சிறையில் அடைப்பு

திருச்சி மத்திய சிறையில் திருநங்கைக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம், சிறைக்காவலரை போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.

திருநங்கைக்கு சிறையில் பாலியல் தொல்லை 

திருச்சி மத்திய சிறையில் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, பாலியல் புகார் சொத்து குவிப்பு வழக்கு உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அடைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக திருச்சி மத்திய சிறையில் 2,517 பேரை அடைக்கும் வசதி உள்ளது. தற்போது இங்கு 836 தண்டனை கைதிகள் உள்பட சுமார் 1,600 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதில் திருச்சியை சேர்ந்த 32 வயது திருநங்கை ஒருவரும் அடைக்கப்பட்டுள்ளார். திருச்சி அரியமங்கலம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த திருட்டு வழக்கில் கடந்த சில மாதங்களுக்கு முன் அந்த திருநங்கை கைது செய்யப்பட்டு இருந்தார். திருச்சி மத்திய சிறையில் சி.பி.-1 என்ற தனி அறையில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.

இந்தநிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன் சென்னையில் இருந்து மாரீஸ்வரன் என்ற சிறைக்காவலர் மாற்றாலாகி வந்தார். அவர் தனி அறையில் இருந்த திருநங்கைக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட திருநங்கை, திருச்சி மத்திய சிறை சூப்பிரண்டு ஆண்டாள், சிறைத்துறை டி.ஐ.ஜி. ஜெயபாரதி ஆகியோரிடம் புகார் அளித்தார். ஆனால் அவர்கள் சிறைக்காவலர் மாரீஸ்வரன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், புகாரை கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டதாக கூறப்படுகிறது.

திருநங்கைக்கு பாலியல் தொல்லை விவகாரம் : திருச்சி சிறைக் காவலர் சிறையில் அடைப்பு

திருச்சி சிறைக்காவலர் கைது செய்து சிறையில் அடைப்பு.  

இதனால் மனமுடைந்த திருநங்கை திருச்சி மாவட்ட கோர்ட்டுக்கு ஆஜராக வந்த நேரத்தில், கோர்ட்டு வளாகத்தில் உள்ள இலவச சட்டப்பணிகள் ஆணையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து சுப்புராமன் என்ற வக்கீல் தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. அந்த குழு திருச்சி மத்திய சிறைக்கு சென்று விசாரணை நடத்தியது.

இதனை தொடர்ந்து அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது திருநங்கையின் புகார் உண்மை என்று தெரியவந்தது. 

இதனை தொடர்ந்து, திருச்சி மத்திய சிறை டிஐஜி ஜெயபாரதி, மற்றும் சிறை கண்காணிப்பாளா் (எஸ்பி) ஆண்டாள், சிறை (தலைமைக்) காவலா் மாரீஸ்வரன் உள்ளிட்டோரை கடந்த ஜூலை 11 ஆம் தேதி காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றி, சிறைத்துறை ஏடிஜிபி மகேஷ்வா் தயாள் உத்தரவிட்டாா். தொடா்ந்து ஜூலை 21 ஆம் தேதி காவலா் மாரீஸ்வரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

மேலும், இந்த வழக்கு தொடா்பாக கே.கே. நகா் காவல் ஆய்வாளா் கோசலராமன் தலைமையிலான போலீஸாா், சிறைக் காவலா் மாரீஸ்வரனை ஆகஸ்ட் 31-ஆம் தேதி கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா். அவா் பணியாற்றிய சிறையிலேயே அவரை அடைக்கக் கூடாது என புகாா் எழுந்தது.

இதனை தொடா்ந்து, மாரீஸ்வரனை சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

மேலும் இந்த சம்பவம் தொடா்பாக ஏற்கனவே கேகே நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்ற புகாரின் பேரில், கே.கே.நகா் ஆய்வாளா் அம்சவேணி அண்மையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

குப்பை மேடு போச்சு... செல்பி ஸ்பாட் வந்தாச்சு! திருச்சியில் அசத்தும் மாநகராட்சி
குப்பை மேடு போச்சு... செல்பி ஸ்பாட் வந்தாச்சு! திருச்சியில் அசத்தும் மாநகராட்சி
Trichy power cut: திருச்சியில் நாளை (07-10-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
திருச்சியில் நாளை (07-10-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
திடீரென மாற்றப்பட்ட ரயில் சேவை: ரயில் பயணிகளுக்கு ரயில்வே-யின் அவசர செய்தி!
திடீரென மாற்றப்பட்ட ரயில் சேவை: ரயில் பயணிகளுக்கு ரயில்வே-யின் அவசர செய்தி!
விசைத்தறி மூலம் ரஜினி உருவம்... “ஜெயிலர் 2” எழுத்து வடிவம்!கரூர் நெசவாளியின் புதுமை முயற்சிக்கு அங்கீகாரம்
விசைத்தறி மூலம் ரஜினி உருவம்... “ஜெயிலர் 2” எழுத்து வடிவம்!கரூர் நெசவாளியின் புதுமை முயற்சிக்கு அங்கீகாரம்

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
டிராஃபிக் பிரச்னைக்கு குட்பை! நாளை முதல் பூந்தமல்லி To வடபழனி இனி நிமிடங்களில் போகலாம்!
டிராஃபிக் பிரச்னைக்கு குட்பை! நாளை முதல் பூந்தமல்லி To வடபழனி இனி நிமிடங்களில் போகலாம்!
மக்களே உஷார்! தமிழகத்தில் எகிறப்போகும் வெயில்... எந்தெந்த மாவட்டங்களில் மழை? - வானிலை வார்னிங்
மக்களே உஷார்! தமிழகத்தில் எகிறப்போகும் வெயில்... எந்தெந்த மாவட்டங்களில் மழை? - வானிலை வார்னிங்
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை நாளை தொடக்கம்! சென்னை வருகிறார் PM மோடி! வரவேற்கும் விஜய்!
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை நாளை தொடக்கம்! சென்னை வருகிறார் PM மோடி! வரவேற்கும் விஜய்!
வீட்டில் விருந்து.. ஒரே காரில் எங்கு பயணம்? அந்த 45 நிமிடங்கள்.. ராகுல் - விஜய் பேசியது என்ன?
வீட்டில் விருந்து.. ஒரே காரில் எங்கு பயணம்? அந்த 45 நிமிடங்கள்.. ராகுல் - விஜய் பேசியது என்ன?
ADMK: தவெக-விற்கு தாவிய அதிமுக வாக்குகள்.. சரியாத திமுக ஓட்டுகள்! இரட்டை இலை செல்வாக்கை மீட்பாரா இபிஎஸ்?
ADMK: தவெக-விற்கு தாவிய அதிமுக வாக்குகள்.. சரியாத திமுக ஓட்டுகள்! இரட்டை இலை செல்வாக்கை மீட்பாரா இபிஎஸ்?
Delhi Protest: டெல்லியில் உச்சக்கட்ட பதற்றம்.. அடுத்தடுத்து நடக்கும் திருப்பம்..முன்னாள் முதல்வர்கள் குண்டு கட்டாக கைது
Delhi Protest: டெல்லியில் உச்சக்கட்ட பதற்றம்.. அடுத்தடுத்து நடக்கும் திருப்பம்..முன்னாள் முதல்வர்கள் குண்டு கட்டாக கைது
CJP Protest: டெல்லியில் இன்று CJP போராட்டம்.. கதிகலங்கும் தலைநகரம்.. பதவி விலகுவாரா ஞானேஷ்குமார்?
CJP Protest: டெல்லியில் இன்று CJP போராட்டம்.. கதிகலங்கும் தலைநகரம்.. பதவி விலகுவாரா ஞானேஷ்குமார்?
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
Embed widget