திருச்சி மாவட்டத்தில் பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர் கே.என்.நேரு
திருச்சி மாவட்டத்தில் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் அமைச்சர் கே.என்.நேரு
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட குழுமிக்கரையில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் ரூபாய் 38.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமுதாய கழிப்பிடத்தையும், அண்ணா நகர் பகுதியில் ரூபாய் 11.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய நியாய விலைக்கடையினையும், இராம்ஜி நகர் மில்காலனியில் ரூபாய் 35 இலட்சம் மதிப்பீட்டில் சமுதாயக் கழிப்பிடத்தையும், கருமண்டபம் வடக்குத் தெரு பகுதியில் ரூபாய் 11 இலட்சம் மதிப்பீட்டில் நியாய விலைக்கடையினையும், கிராப்பட்டி காந்திநகர் பகுதியில் ரூபாய் 11 இலட்சம் மதிப்பீட்டில் நியாய விலைக்கடையினையும், தெற்கு வெள்ளாளர் தெரு பகுதியில் ரூபாய் 35இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமுதாய கழிப்பிடத்தையும், உறையூர் சோழராஜபுரம் பகுதியில் ரூபாய் 30 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நவீன கழிப்பிடத்தையும் நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்கள்,பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்கள்.
பின்னர், திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட கிராபட்டி முஸ்லிம் தெருவில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூபாய் 31.28 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நவீன பொதுக் கழிப்பிட கட்டடத்தையும், காவேரி நகர் பகுதியில் மாநில நகர்ப்புர மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 570 இலட்சம் மதிப்பீட்டில் தெரு மின் விளக்குகளும், லாசன்ஸ் சாலையோரப் பூங்கா நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூபாய் 100 இலட்சம் மதிப்பீட்டில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
மேலும், ஆர்.எம்.எஸ்.காலனி, அசோக் நகர் சிறுவர் பூங்கா மற்றும் திறந்த வெளி உடற்பயிற்சி கூடம் பொது நிதியின் கீழ் ரூபாய் 24 இலட்சம் மதிப்பீட்டிலும், அரசு காலனி ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மைய கட்டடம் ரூபாய் 20.80 இலட்சம் மதிப்பீட்டிலும், கிராப்பட்டி காலனி மெயின் ரோடு ரூபாய் 16.20 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி மைய கட்டடத்தையும் திறந்து வைத்தார்கள். இதனை தொடர்ந்து நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் திருச்சி மாவட்டம், இலால்குடி வட்டம், நகர் கிராமத்தில் நீர்வளத் துறையின் சார்பில் மேல்பங்குனி வாய்க்காலின் குறுக்கே ரூபாய் 14.91 கோடி மதிப்பீட்டில் இடைநிலை நீரொழுங்கியினை புனரமைக்கும் பணிகளையும், மண்ணச்சநல்லூர் மாதிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 12.49 கோடி மதிப்பீட்டில் புதிதாக 59 வகுப்பறைகளுடன் கூடிய புதிய கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார்.
திருச்சி மாவட்டம், இலால்குடி வட்டம், நகர் கிராமத்தில் திருமங்கலம் அணைக்கட்டு, மேல்பங்குனி வாய்க்காலின் குறுக்கே சரகம் 17/2 மைலில் அமைந்துள்ளது. இந்த அணைக்கட்டின் நீளம் 75 மீ ஆகும். இந்த அணைக்கட்டு, சுமார் 80 ஆண்டுகளுக்கு மேல் நீர் தேக்கப்பட்டு, கீழ்பங்குனி வாய்க்காலின் மூலம் சுமார் 3583 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி செய்திடும் வகையில் அமைந்து வருகின்றது. இந்த அணைக்கட்டு பழுதடைந்த காரணத்தினால் அதனை புரனமைத்து பணிகள் மேற்கொள்ள தமிழ்நாடு அரசு ரூபாய் 14.91 கோடி மதிப்பீட்டில் அனுமதியளித்ததைத் தொடர்ந்து இப்பணிகளை மேற்கொள்ளும் வகையில் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என் நேரு அவர்கள் அடிக்கல் நாட்டி திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். இப்பணியினை மேற்கொள்வதால், இலால்குடி வட்டத்தில் உள்ள திருமங்கலம், முருகரை, நகர், ஆங்கரை. தெங்கால், மேட்டுப்பட்டி, திண்ணியம், முள்ளால் மற்றும் ஆலங்குடி ஆகிய கிராமங்கள் பயன்பெறும். அதனைத் தொடர்ந்து, திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம். மண்ணச்சநல்லூர் மாதிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 3,200க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். அவர்களுக்கு தேவையான வகுப்பறைகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தரும் வகையில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 12.49 கோடி மதிப்பீட்டில் புதிதாக 59 வகுப்பறைகளுடன் கூடிய புதிய கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி திட்டப் பணிகளை தொடங்கி வைத்து. இப்பணிகளை விரைவாகவும், தரமாகவும் மேற்கொள்ள தொடர்புடையத் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்நிகழ்வுகளில், மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார, மாநகராட்சி மேயர் அன்பழகன், இலால்குடி சட்டமன்ற உறுப்பினர். சௌந்தரபாண்டியன், மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கதிரவன், மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.