மேலும் அறிய

Tamil Nadu Day: தமிழ்நாடு நாள்; திருச்சியில் வெகு சிறப்பாக கொண்டாடிய மாணவ,மாணவிகள்

திருச்சியில் தமிழ்நாடு நாளை கொண்டாடும் விதமாக 1000க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ், மாணவிகள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

பேரறிஞர் அண்ணா அவர்கள் 1967-ம் ஆண்டு சட்டப்பேரவையில் ஜுலை 18ம் நாளன்று சென்னை மாகாணம் என்றிருந்த பெயரை மாற்றி மீண்டும் தமிழ்நாடு என அழைக்க தீர்மானம் நிறைவேற்றி அறிவித்தார்கள். எனவே அந்த நாளை அனைவரும் நினைவுகூறும் வகையில் ஒவ்வொரு வருடமும் ஜுலை-18ம் நாளினை தமிழ்நாடு நாளாக கொண்டாட கடந்த வருடம்  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்ததை தொடர்ந்து, வருடந்தோறும் இந்நாள் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. அதனடிப்படையில் திருச்சி மாவட்டத்தில், இன்று தமிழ்நாடு நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் திருச்சி வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில் தமிழ்நாடு நாள் எனும் வடிவிலான பள்ளி மாணவ, மாணவியர்களின் அணிவகுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.பிரதீப் குமார் பார்வையிட்டு, தமிழ்நாடு நாள் ஜூலை-18 குறித்து மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியினை கொடியசைத்து தொடங்கி வைத்து, இப்பேரணியில் கலந்து கொண்டார். 


Tamil Nadu Day: தமிழ்நாடு நாள்; திருச்சியில் வெகு சிறப்பாக கொண்டாடிய மாணவ,மாணவிகள்

மேலும் இப்பேரணியில் மாணவ, மாணவியர்கள் தமிழ்நாடு நாள் ஜூலை-18 குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எங்கும் தமிழ் எதிலும் தமிழ், எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு. தமிழன் என்று சொல்லுங்கள், தலை நிமிர்ந்து நில்லுங்கள், தமிழ் உயர்ந்தால் தமிழ்நாடு தானுயரும், இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர், வாழ்க தமிழ், வெல்க தமிழ், தமிழுக்கு அமுதென்று பேர், என் தமிழே என் தமிழ்நாடே, வளம் பெற்று உயர்ந்த தமிழ்நாடே. கலை பல பெற்று உயர்ந்த தமிழ்நாடே, அண்ணா பெயர் சூட்டிய தமிழ்நாடு, யாதும் ஊரே யாவரும் கேளீர் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி முழக்கமிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த பேரணியானது வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் தொடங்கி, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்தது. இந்நிகழ்வுகளில் சுமார் 1000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.


Tamil Nadu Day: தமிழ்நாடு நாள்; திருச்சியில் வெகு சிறப்பாக கொண்டாடிய மாணவ,மாணவிகள்

மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டிந்த அரசின் சாதனை விளக்கப் புகைப்படக்கண்காட்சியினை பொதுமக்களின் பார்வைக்காக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திறந்து வைத்து, மாணவ, மாணவியர்களுடன் கண்காட்சியில் இடம்பெற்றிருந்த புகைப்படங்களை பார்வையிட்டார்கள். இக்கண்காட்சியானது 18.07.2023 முதல் 23.07.2023 வரை பொது மக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்படவுள்ளது. பின்னர் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் தமிழ்நாடு நாள் ஜூலை-18ஐ கொண்டாடும் வகையில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.பிரதீப் குமார் அவர்கள் நினைவு பரிசுகளை வழங்கி பாராட்டினார்கள்.

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.இரா.அபிராமி, முதன்மை கல்வி அலுவலர் திரு.சிவக்குமார், உதவி இயக்குநர் செய்தி மக்கள் தொடர்புத்துறை திரு.வ.பாலசுப்ரமணியன், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள், கல்வித்துறை, செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
7154
Active
9556
Recovered
77
Deaths
Last Updated: Thu 12 June, 2025 at 11:37 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

ஆயிரத்தில் ஒருவன்.. விமான விபத்தில் உயிர் தப்பிய அந்த ஒரு நபர்.. பதற்றத்துடன் நடந்து செல்லும் காட்சி 
ஆயிரத்தில் ஒருவன்.. விமான விபத்தில் உயிர் தப்பிய அந்த ஒரு நபர்.. யார் இந்த ரமேஷ்?
Musk Spoke to Trump: பஞ்சாயத்து முடிஞ்சுடுச்சு, எல்லாரும் கிளம்புங்க; ட்ரம்ப்பிடம் பேசிய மஸ்க் - என்ன கூறினார் தெரியுமா.?
பஞ்சாயத்து முடிஞ்சுடுச்சு, எல்லாரும் கிளம்புங்க; ட்ரம்ப்பிடம் பேசிய மஸ்க் - என்ன கூறினார் தெரியுமா.?
’’சரியாக வேலை செய்யவில்லை; ஏதோ தவறாக உணர்ந்தேன்’’- விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்தவர் பதிவு!
’’சரியாக வேலை செய்யவில்லை; ஏதோ தவறாக உணர்ந்தேன்’’- விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்தவர் பதிவு!
Air India Plane Crash: அகமதாபாத் கோர விமான விபத்துக்கு காரணம் பறவைகளா.? - DGCA கூறுவது என்ன தெரியுமா.?
அகமதாபாத் கோர விமான விபத்துக்கு காரணம் பறவைகளா.? - DGCA கூறுவது என்ன தெரியுமா.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

பூட்டியிருந்த வீட்டில் தீ விபத்து சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு பகீர் கிளப்பும் காட்சி Coimbatore Cylinder Blastசாப்பிட்டபடி பஸ் ஒட்டிய DRIVER பீதியில் உறைந்த பயணிகள்! ஆம்னி நிறுவனம் அதிரடி! | Careless Drivingகைதாகும் வேல்முருகன்?பாய்ந்தது POCSO வழக்கு சம்பவம் செய்த விஜய்! | Velmurugan TVK Vijay Controversy

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆயிரத்தில் ஒருவன்.. விமான விபத்தில் உயிர் தப்பிய அந்த ஒரு நபர்.. பதற்றத்துடன் நடந்து செல்லும் காட்சி 
ஆயிரத்தில் ஒருவன்.. விமான விபத்தில் உயிர் தப்பிய அந்த ஒரு நபர்.. யார் இந்த ரமேஷ்?
Musk Spoke to Trump: பஞ்சாயத்து முடிஞ்சுடுச்சு, எல்லாரும் கிளம்புங்க; ட்ரம்ப்பிடம் பேசிய மஸ்க் - என்ன கூறினார் தெரியுமா.?
பஞ்சாயத்து முடிஞ்சுடுச்சு, எல்லாரும் கிளம்புங்க; ட்ரம்ப்பிடம் பேசிய மஸ்க் - என்ன கூறினார் தெரியுமா.?
’’சரியாக வேலை செய்யவில்லை; ஏதோ தவறாக உணர்ந்தேன்’’- விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்தவர் பதிவு!
’’சரியாக வேலை செய்யவில்லை; ஏதோ தவறாக உணர்ந்தேன்’’- விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்தவர் பதிவு!
Air India Plane Crash: அகமதாபாத் கோர விமான விபத்துக்கு காரணம் பறவைகளா.? - DGCA கூறுவது என்ன தெரியுமா.?
அகமதாபாத் கோர விமான விபத்துக்கு காரணம் பறவைகளா.? - DGCA கூறுவது என்ன தெரியுமா.?
Vadapalani Bus Terminal: டோட்டலாக மாறப் போகும் வடபழனி; ரூ.481 கோடில என்ன வரப்போகுது தெரியுமா.? கேட்டா அசந்துடுவீங்க.!
டோட்டலாக மாறப் போகும் வடபழனி; ரூ.481 கோடில என்ன வரப்போகுது தெரியுமா.? கேட்டா அசந்துடுவீங்க.!
பிளக்கும் சத்தம், புகை, தீ குழம்பு..நடந்தது இதுதான்! விமான விபத்தை நேரில் பார்த்தவர் பரபரப்பு பேட்டி
பிளக்கும் சத்தம், புகை, தீ குழம்பு..நடந்தது இதுதான்! விமான விபத்தை நேரில் பார்த்தவர் பரபரப்பு பேட்டி
Ahmedabad Plane Crash: ‘MAYDAY‘ அழைப்பு விடுத்த ஏர் இந்தியா விமானம்; உடனே அழைத்த கட்டுப்பாட்டு அறை - ஆனால்...
‘MAYDAY‘ அழைப்பு விடுத்த ஏர் இந்தியா விமானம்; உடனே அழைத்த கட்டுப்பாட்டு அறை - ஆனால்...
Ahmedabad Plane Crash: ‘’இந்த ஆண்டு மிகப்பெரிய விமான விபத்து நடக்கும்’’ முன்பே கணித்த ஜோதிடர்- வைரலாகும் பதிவு!
Ahmedabad Plane Crash: ‘’இந்த ஆண்டு மிகப்பெரிய விமான விபத்து நடக்கும்’’ முன்பே கணித்த ஜோதிடர்- வைரலாகும் பதிவு!
Embed widget