மேலும் அறிய
ஸ்ரீரங்கம் கோயிலில் ஶ்ரீராமானுஜ திருமால் அடியார்கள் ஜால்றா அடித்து போராட்டம்
ஶ்ரீரங்கம் கோயில் கொடிமரம் முன்பு நகர்த்தப்பட்ட அனுமன் சிலையை மீண்டும் பழைய நிலைக்கு நகர்த்த கோரி ஶ்ரீராமானுஜ திருமால் அடியார்கள் குழாம் சார்பில் ஜால்றா அடித்து போராட்டம்.

ஸ்ரீரங்கம் கோவிலில் ஜால்றா அடித்து போராட்டம்.
108 திவ்ய தேசங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் கோயிலில் உள்ள கொடிமரம் முன்பு 3000 ஆண்டுகளாக ஒரே இடத்தில் இருந்த அனுமன் சிலையை நகற்றி வைத்துள்ளனர். அதனை பழைய நிலைக்கு நகர்த்த கோரி யும், சிதிலம் அடைந்த மூலவர் ரெங்கநாதர் சிலை பாதத்தை சீரமைக்க வலியுறுத்தி கடந்த ஆண்டும் போராட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து இந்த ஆண்டு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு பொள்ளாச்சியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் திருமால் அடியார்கள் குழாம் அமைப்பினர் சுமார் 700 பேர் வந்தனர். இவர்களை கோவில் ஊழியர்கள் தடுத்து நிறுத்தியதால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் மூலவர் ரெங்கநாதரை தரிசித்த திருமால் அடியார்கள் குழாம் அமைப்பினர் தங்கக்கொடி மரம் அருகில் உள்ள கம்பத்தடி ஆஞ்சநேயரை, ஏற்கனவே இருந்த இடத்தில் மீண்டும் பிரதிஷ்டை செய்ய வேண்டும். கடந்த 2015-ம் ஆண்டு நடந்த கும்பாபிஷேகத்திற்கு முன் இருந்தது போலவே மூலவர் ரெங்கநாதர் திருவடியை மாற்றி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தங்கக்கொடி மரம் அருகிலும், கருடமண்டபத்திலும் ஜால்ரா அடித்து, பக்தி பாடல்பாடி, கும்மியடித்து, நடனமாடியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோவில் இணை ஆணையர் சிவராம்குமார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் உங்களின் கோரிக்கைகளை இந்துசமய அறநிலையத்துறை ஆணையருக்கு உடனடியாக பரிந்துரை செய்கின்றேன் என்றார். மேலும், இதுகுறித்து திருமால் அடியார்கள் குழாம் அமைப்பின் தலைவர் சீனிவாசன் கூறுகையில், ”எங்களது இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள திருமால் அடியார்கள் தங்களது வீடுகளில் கருப்பு கொடி ஏற்ற உள்ளோம். ஸ்ரீரங்கம் கோவில் நிலைமை குறித்தும், அதில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்தும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் சுவரொட்டி ஒட்ட உள்ளோம்” என்றார்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement


470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
உலகம்
திருச்சி
தூத்துக்குடி
ஆட்டோ
Advertisement
Advertisement