“எனக்கு உளவியல் ரீதியாக பிரச்சனை உள்ளது மன அழுத்தம் அதிகம் ஏற்படுகிறது” - நீதிபதியிடம் தெரிவித்த சவுக்கு சங்கர்
திருச்சி அல்லது சென்னை சிறை வேண்டும் என சவுக்கு சங்கர் கோரிக்கை நிராகரிப்பு.
தனியார் யூடியூப் சேனலில் பெண் போலீசாரை அவதூறு பேசியதாக கைது செய்யப்பட்டுள்ள பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கோவை மத்திய ஜெயிலில் இருந்து திருச்சி நீதிமன்றத்தில் கடந்த 15-ம் தேதி ஆஜர் படுத்தப்பட்டார்.
சவுக்கு சங்கரை ஒருநாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் நேற்று அனுமதி அளித்த நிலையில் இன்று மாலை 4 மணியுடன் நிறைவடையவுள்ள நிலையில், மீண்டும் திருச்சி மகிளா நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர் படுத்துவதற்காக போலீசார் அழைத்து வந்தனர்.
முன்னதாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்வதற்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் திருச்சி மகிளா நீதிமன்ற நீதிபதி செல்வி ஜெயப்பிரதா முன்னிலையில் ஆஜரான சவுக்கு சங்கரிடம்...
விசாரணை முறையாக நடத்தப்பட்டதா? உங்களுக்கு உணவு தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் வழங்கப்பட்டது என நீதிபதி கேட்டார்?
அதற்கு அனைத்தும் வழங்கப்பட்டது எனவும், விசாரணையில் துன்புறுத்தப்படவில்லை எனவும் சவுக்கு சங்கர் தெரிவித்தார்.
மேலும், கோவை சிறையில் எனக்கு உளவியல் ரீதியாக பிரச்சனை உள்ளது. மன அழுத்தம் அதிகமாக ஏற்படுகிறது. சென்னை அல்லது திருச்சி சிறைக்கு மாற்றுமாறு கோரிக்கை விடுக்கிறேன். எனக்கு மருத்துவ உதவியும், அனைவருக்கும் இருக்கக்கூடிய சிறை போலவே வழங்க வேண்டும் கோரிக்கை வைத்தார். அதனை நீதிபதி மனுவாக வழங்க அறிவுறுத்தியுள்ளார்..
பின்னர் நீதிபதி வரும் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் எனவும் கோவை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். மீண்டும் நீதிமன்ற காவலுக்கு பிறகு திருச்சி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு விட்டார்.
கோவை சிறையில் அடைக்க உத்தரவிட்டதை அடுத்து சவுக்கு சங்கர் தனக்கு கோவை சிறையில் தனி வார்டு வழங்க கேட்டுக் கொண்டார். பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சவுக்கு சங்கர் கோவை சிறையில் அடைக்க திருச்சி மாவட்ட பெண் போலீசார் அடங்கிய குழுவினர் அழைத்துச் சென்றனர்.
அதன் பின்னர் சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் முல்லை சுரேஷ் செய்தியாளரிடம் கூறியதாவது:
கோவை மத்திய சிறையில் மனநோயாளிகள் அழைக்கப்பட்டுள்ள பிரிவில் அடைத்து வைத்துள்ளதாகவும், தன்னை அதிலிருந்து வேறு அறைக்கு மாற்ற வேண்டும் என நீதிபதி முன்பு சவுக்கு சங்கர் கோரிக்கை வைத்துள்ளதாகவும், மேலும் வேறு சிறைக்கு மாற்றக் கூடிய சவுக்கு சங்கரின் கோரிக்கை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து சிறை மாற்றிக்கொள்ள அறிவுறுத்தினார்.
சவுக்கு சங்கர் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்திருப்பதாகவும் இரண்டு நாட்களில் நம்பர் ஆகி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். விரைவில் ஜாமின் கிடைக்கப்பெறும் என சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் முல்லை சுரேஷ் நம்பிக்கை தெரிவித்தார்.