"துரைமுருகனை அழைத்துச்சென்று பல மணிநேரம் ஆகியும் அவர் எங்கே இருக்கிறார் எனத் தெரியவில்லை" - துரைமுருகன் மனைவி
என் கணவரை கண்டுபிடித்து, போலீசாரிடமிருந்து மீட்டுக் கொடுக்க வேண்டும் என சாட்டை துரைமுருகனின் மனைவி மாதரசி திருச்சி புலனாய்வு உதவி ஆணையரிடம் மனு
சாட்டை துரைமுருகன் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியான நிலையில், தற்போது அது உறுதியாகியுள்ளது. திருச்சி சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை
பாஸ்க்கான் நிறுவனத்தில் 9 பெண்கள் இறந்துபோய்விட்டனர் என கூறி வீடியோ போட்ட விவகாரத்தில் கைது சாட்டை துரைமுருகனை கைது செய்து திருச்சி சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அவரது திருச்சி தில்லை நகர் வீட்டில் வைத்து ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக போலீஸ் கைது செய்துள்ளது.
என் கணவரை கண்டுபிடித்து, போலீசாரிடமிருந்து மீட்டுக் கொடுக்க வேண்டும் என சாட்டை துரைமுருகனின் மனைவி மாதரசி திருச்சி புலனாய்வு உதவி ஆணையரிடம் மனு அளித்துள்ளார். ”போலீசார் என சொல்லி வந்த 7 பேர் சாட்டை துரைமுருகனை விசாரணை என சொல்லி அழைத்து சென்றனர். அவரை அழைத்து சென்று பல மணி நேரம் ஆன நிலையில், அவர் எங்கே இருக்கிறார் என தெரியவில்லை. சாட்டை துரைமுருகனுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளது” என அவரது மனைவி மாதரசி அம்மனுவில் தெரிவித்துள்ளார்.
சாட்டை துரைமுருகனின் வழக்கறிஞர் பேசியபோது, “திருச்சி சைபர் பிரிவு ஆய்வாளர் தயாளன் தலைமையிலான போலீசார்தான் துரைமுருகனை விசாரணை என சொல்லி அழைத்து சென்றனர். கண்டோன்மெண்ட் ஸ்டேஷன் வரச் சொல்லினர். அங்குபோய் பார்த்தால் இல்லை, பின்னர் கே.கே.நகர் வரச்சொல்லியுள்ளனர் அங்கே போய் பார்த்தாலும் இல்லை” என்றார். "சாட்டை துரைமுருகனை வண்டியில் வைத்தே திருச்சி முழுவதும் ரவுண்ட் அடித்துவிட்டு, பூந்தமல்லியில் கொடுத்த புகாரில் கைது செய்ததாக காட்டி, செங்கல்பட்டு சிறையில் அடைக்க வாய்ப்புள்ளது” எனவும் கூறினார்.