’லட்சங்கள், கோடிகளில் பத்திரப்பதிவு’ ஊரடங்கில் அதிகரித்த பத்திரப்பதிவுத்துறை வருவாய்..!
திருச்சி உட்பட 4 மாவட்டங்களில் கடந்த ஆறு மாதத்தில் பத்திரப்பதிவு மூலம் ரூ.296 கோடி வருவாய் கிடைத்துள்ளது. மேலும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ரூ.82 கோடி அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொரானா தாக்கத்தால் தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. தொற்றின் எண்ணிக்கை குறையும் போது சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மாநில அரசு அவ்வப்போது அறிவித்து வருகிறது. இந்த நிலையில் மாநில அரசுக்கு வருவாயை அதிகரித்து தருவதில் முக்கியமாக செயல்பட்டிருக்கிறது பத்திர பதிவு துறை ஆகும். இந்த கொரானா காலக்கட்டத்தில் பத்திர பதிவு துறையில் திருச்சி உட்பட 4 மாவட்டங்களில் கடந்த ஆறு மாதத்தில் பத்திரப்பதிவு மூலம் ரூ.296 கோடி வருவாய் கிடைத்துள்ளது. மேலும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ரூ.82 கோடி ரூபாய் வருவாய் அதிகரித்துள்ளது இதைப்போன்று கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 21 ஆயிரம் பத்திரப்பதிவுகள் கூடுதலாக நடைபெற்றுள்ளது.
பத்திரப்பதிவு துறையில் அனைத்து பதிவுகளும் முறையாக நடைபெற வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. குறிப்பாக பதிவு அலுவலகத்தில் இடைத்தரகர்கள் இல்லாமல் சரியான கட்டணத்துடன் குறிப்பிட்ட நேரத்துக்குள் ஆவணங்களைப் பதிவு செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் புகார் அளிக்கும் வகையில் புதிதாக கட்டுப்பாட்டு அறை விரைவில் திறக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. குறிப்பாக பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு கூட்டங்களை நடத்தி வருகிறார். மேலும் பத்திரப்பதிவு அலுவலங்களில் திடீர் ஆய்வுகளை மேற்கொண்கொண்டும் வருகிறார். இந்நிலையில் திருச்சி, கரூர், அரியலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் கடந்த ஆண்டை விட இந்தாண்டு பத்திரப்பதிவு அதிகரித்து உள்ளது தெரியவந்துள்ளது.
இந்த 4 மாவட்டங்களில் கடந்த ஜனவரியில் ரூ.44.03 கோடி, பிப்ரவரியில் ரூ.48.19 கோடி, மார்ச்சில் ரூ.44.33 கோடி, ஏப்ரலில் ரூ.2.31 கோடி, மே மாதத்தில் ரூ.23.64 கோடி, ஜூனில் ரூ.51.95 கோடி, ஜூலையில் ரூ.47.29 கோடி, ஆகஸ்ட்டில் ரூ.51.51 கோடி, செப்டம்பரில் ரூ. 64.63 கோடி, அக்டோபரில் ரூ.65.79 கோடி, நவம்பரில் ரூ.59.34 கோடி, டிசம்பரில் ரூ.72.52 கோடி என்று மொத்தம் :ரூ. 575.53 கோடி வருவாய் கிடைத்துள்ளது. ஜனவரியில் 14,167, பிப்ரவரியில் 17,344, மார்ச்சில் 16,466, ஏப்ரலில் 795, மே மாதத்தில் 9115, ஜூனில் 19,107, ஜூலையில் 20,003, ஆகஸ்ட்டில் 18,639, செப்டம்பரில் 24,360, அக்டோபரில் 24,232, நவம்பரில் 20,461, டிசம்பரில் 23,760 என்று மொத்தம் 2,08,448 பத்திரப்பதிவுகள் நடைபெற்றுள்ளது. இதைப்போன்று இந்தாண்டு 4 மாவட்டங்களில் ஜனவரி மாதத்தில் ரூ.47.11 கோடி, பிப்ரவரி மாதத்தில் ரூ.73.03 கோடி, மார்ச் மாதத்தில் ரூ.65.43 கோடி, ஏப்ரல் மாதத்தில் ரூ.54.40 கோடி, மே மாதத்தில் ரூ.12.28 கோடி, ஜூன் மாதத்தில் ரூ. 44.30 கோடி என்று மொத்தம் ரூ. 296.55 கோடி வருவாய் கிடைத்துள்ளது. மேலும் ஜனவரி மாதம் 15,022, பிப்ரவரி மாதம் 23,303, மார்ச் மாதம் 23,380, ஏப்ரல் மாதம் 17,919, மே மாதம் 4780, ஜூன் மாதம் 14,228 என்று மொத்தம் 98,632 பத்திரப்பதிவுகள் நடைபெற்றுள்ளது.
இதன்படி பார்த்தால் கடந்த 2020 ஆண்டு ஜூன் மாதம் வரை இந்த 4 மாவட்டங்களில் பத்திரப்பதிவு மூலம் ரூ. 214.46 கோடி வருவாய் கிடைத்தள்ளது. மேலும் 76,994 பத்திரப்பதிவுகள் நடைபெற்றுள்ளது. இந்த ஆண்டு பத்திரப்பதிவு மூலம் ரூ.296 கோடி வருவாய் கிடைத்துள்ளது. 98,632 பத்திரப்பதிவுகள் நடைபெற்றுள்ளது. இதன்படி பார்த்தால் கடந்த ஆண்டை விட இந்தாண்டு ரூ.82.09 கோடி கூடுதலாக வருவாய் கிடைத்துள்ளது. மேலும் 21,638 பத்திரப்பதிவுகள் கூடுலாக நடைபெற்றுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஜனவரியில் ரூ.27.74 கோடி, பிப்ரவரியில் ரூ.22.52 கோடி, மார்ச்சில் ரூ.19.49 கோடி, ஏப்ரலில் ரூ.0.58 கோடி, மே மாதத்தில் ரூ.23.64 கோடி, ஜூன் மாதத்தில் ரூ.23.54 கோடி என்று மொத்தம் ரூ.117.51 கோடி வருவாய் கிடைத்துள்ளது. மேலும் ஜனவரியில் 4528, பிப்ரவரியில் 5272, மார்ச்சில் 4788, ஏப்ரலில் 204, மே மாதத்தில் 2615, ஜூனில் 5414 என்று மொத்தம் 22,821 பத்திரப்பதிவுகள் நடைபெற்றுள்ளது. இந்தாண்டு ஜனவரியில் ரூ.22.29 கோடி, பிப்ரவரியில் ரூ.34.66 கோடி, மார்ச்சில் ரூ.30.64 கோடி, ஏப்ரலில் ரூ.25.14 கோடி, மே மாதத்தில் ரூ.5.2 கோடி, ஜூனில் ரூ.21.84 கோடி என்று மொத்தம் ரூ.87.63 கோடி வருவாய் கிடைத்துள்ளது. மேலும் ஜனவரியில் 4693, பிப்ரவரியில் 7241, மார்ச்சில் 7224, ஏப்ரலில் 5691, மே மாதத்தில் 1424, ஜூனில் 4490 என்று மொத்தம் 30,763 பத்திரப்பதிவு நடைபெற்றுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொரோனா ஊரடங்கில் பலரும் சிரமப்பட்ட நிலையில், லட்சங்கள் முதல் கோடிகள் வரை பலரும் பத்திர பதிவு செய்திருப்பது பொதுமக்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது