மேலும் அறிய

திருச்சி தொழிலதிபர் வீட்டில் கொள்ளை போன ரூ.60 லட்சம் மதிப்பிலான பொருட்கள் மீட்பு

திருச்சி மாவட்டம், தொழிலதிபர் வீட்டில் கொள்ளை அடித்த கொள்ளையனிடமிருந்து 60 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை திருவெறும்பூர் தனி படை போலீஸ்சார் மீட்டு உள்ளனர்.

திருச்சி மாவட்டம் , திருவெறும்பூர் அருகே உள்ள ஐ.ஏ.எஸ் நகர் பகுதியை சேர்ந்தவர் தேவேந்திரன் தொழிலதிபர் இவரது வீட்டில் கடந்த 23ஆம் தேதி காலை வீட்டின் பூட்டை உடைத்து 92 பவுன், வைரவளையல் மற்றும் நெக்லஸ் (மதிப்பு ரூ.5,00,000), பிளாட்டின ஆரம் (மதிப்பு ரூ.5,00,000/-), லெனோவா லேப்டாப் ஒன்று (மதிப்பு 50,000/-) சோனி லேப்டப் ஒன்று (மதிப்பு ரூ.60,000) 4 ஸ்மார்ட் போன் (மதிப்பு ரூ.50,000/-) மற்றும் 1,50,000/- மதிப்புள்ள வெள்ளி பொருட்கள் திருடுபோனது. இது சம்பந்தமாக தேவேந்திரன் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். 

அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு மத்திய மண்டல டிஐஜி சரவணசுந்தர், திருச்சி எஸ்பி சுஜித் குமார் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்தநிலை திருச்சி மத்திய மண்டல காவல் துறை தலைவர்  கார்த்திகேயன்  உத்தரவின் பேரில் திருச்சி மாவட்ட காவல் துணைத்தலைவர்  சரவணசுந்தர்  மேற்பார்வையில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார்  முன்னிலையில் , திருவெறும்பூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அறிவழகன் தலைமையில, திருவெறும்பூர் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன், துவாக்குடி இன்ஸ்பெக்டர்  ஈஸ்வரன், பெல் இன்ஸ்பெக்டர்  கமலவேணி மற்றும் உதவி ஆய்வாளர்கள் ஆகியோர் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளியை தொடர்ந்து தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலை 5 மணிக்கு மஞ்சத்திடல் சோதனை சாவடியில் வாகன சோதனை செய்த போது அந்த வழியாக வந்த  காரை மறித்த போது அது நிற்காமல் சென்றதால் போலீசார் அந்த காரை விரட்டியுள்ளனர்.  

திருச்சி தொழிலதிபர் வீட்டில் கொள்ளை போன ரூ.60 லட்சம் மதிப்பிலான பொருட்கள் மீட்பு

இதனை தொடர்ந்து அந்த காரை கல்லனை ரோட்டில் சென்றபோது வேங்கூர் சுடுகாட்டிற்கு அருகில் மடக்கி பிடித்த போது காரில் இருந்து தப்பி ஓடிய நபரை பிடித்து விசாரிக்க அவர் பெயர் கார்த்திக் (எ) செல்வகார்த்திக் என்றும் அவருக்கு திருவெறும்பூர் நவல்பட்டு காவல் நிலைய குற்ற வழக்குகள் ஏற்கனவே உள்ளதும் தெரியவந்தது. எனவே அந்த காரை சோதனை செய்த போது காரில் 22 பவுன் தங்க நகை மற்றும் ரூ.50,000 பணம் இருந்தது தெரியவந்தது. அதன் அடிப்படையில் அந்த நகையை தேவேந்திரனிடம் எடுத்துச் சென்று காட்டிய போது அது தங்களுடைய நகையினை கூறியதை தொடர்ந்து செல்வா கார்த்தியை போலீசார் கைது செய்து விசாரணை செய்தபோது, தான் திருவையாறில் உள்ள புது அஹ்ரகாரத்தில் உள்ள தனது வீட்டில் மறைத்து வைத்திருந்த 118 பவுன் நகை அதன் மதிப்பு ரூ.47,20,000, பணம் 4 லட்சத்து 50 ஆயிரம் பணம், லேப்டாப், செல்போன் திருட்டுக்கு பயன்படுத்திய கார், பயன்படுத்திய இரும்பு கம்பி மற்றும் திருப்புலி ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினார்கள். செய்தியாளர்களை சந்தித்து பேசிய திருச்சி சரக்க டி.ஏ.ஜி சரவணன் சுந்தர் பேசுகையில், திருவெறும்பூர் பகுதியில் கடந்த 23ஆம் தேதி நடந்த குற்றம் பாரி குற்றமாகும் இந்த குற்றம் பற்றி சம்பவ இடத்திற்கு நானும் திருச்சி எஸ் பி சுஜித் குமார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தோம் முதல் கட்டு விசாரணையில் 150 என புகார் தெரிவித்தனர்.

திருச்சி தொழிலதிபர் வீட்டில் கொள்ளை போன ரூ.60 லட்சம் மதிப்பிலான பொருட்கள் மீட்பு

பின்னர் அவர்கள் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் 92 பவுன் நகை 5 லட்சம் பணம் 5 கேரட் பிளாட்டினம், 6 கேரட் வைரம் என புகார் கொடுத்திருந்தனர். இந்த நிலையில் திருவெறும்பூர் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன், தலைமையில் எஸ்ஐ சதீஷ் ஏட்டு செந்தில் மற்றும் போலீசார் சதீஷ்குமார், ஜேம்ஷ் செல்வராஜ், பெல் இன்ஸ்பெக்டர் கமலவேணி தலைமையில் எஸ் ஐ சசிகுமார், ஏட்டுகள் அருண்மொழிவர்மன், இன்ப மணி, ஹரிஹரன், போலீசார் ராஜேஷ், சிலம்பரசன், துவாக்குடி இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன்தலைமையில் எஸ்ஐகள் மாரிமுத்து, மணிகண்டன், எஸ் எஸ் ஐ வேல்அழகன், ஏட்டு முத்துக்குமார், போலீசார் இளையராஜா, அறிவழகன் ஆகியோர் அடங்கிய தனிப்படை  குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து 118 பவுன்நகை 5லட்சம் மதிப்பிலான பிளாட்டினம், 5 லட்சம் மதிப்புள்ளான வைரம், 1.50 லட்சம் மதிப்பிலான வெள்ளி, 2 லேப்டாப், செல்போன் மற்றும் ராமநாதபுரத்தில் திருடப்பட்ட கார் என ரூபாய் 60.30 லட்சம் மதிப்பிலான பொருட்கள் மீட்கப்பட்டது. நீதிமன்றத்தில் அனுமதி பெற்று உரியவர்களிடம் பொருள் ஒப்படைக்கப்படும். இவர் மீது திருவெறும்பூர் காவல் நிலையத்தில் 2019, நவல்பட்டு காவல் நிலையத்தில் 2021 ஆகிய ஆண்டுகள் வழக்கு உள்ளது என கூறினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone Landfall: கரையை கடக்க ஆரம்பித்த ஃபெஞ்சல் புயல்: எங்கு ரெட் அலர்ட்? எங்கு ஆரஞ்சு அலர்ட்?
Fengal Cyclone Landfall: கரையை கடக்க ஆரம்பித்த ஃபெஞ்சல் புயல்: எங்கு ரெட் அலர்ட்? எங்கு ஆரஞ்சு அலர்ட்?
விமானப் பயணிகளின் கவனத்திற்கு! நாளை வரை கொஞ்சம் அவதிதான்! 55 விமான சேவை ரத்து! - முழு விவரம்
விமானப் பயணிகளின் கவனத்திற்கு! நாளை வரை கொஞ்சம் அவதிதான்! 55 விமான சேவை ரத்து! - முழு விவரம்
Fengal: வட சென்னையை வதைத்த ஃபெஞ்சால்! தண்ணீரில் தவிக்கும் மக்கள் கண்ணீர்! தீர்வு எப்போது?
Fengal: வட சென்னையை வதைத்த ஃபெஞ்சால்! தண்ணீரில் தவிக்கும் மக்கள் கண்ணீர்! தீர்வு எப்போது?
Fengal Cyclone LIVE:  ஃபெஞ்சல் புயலின் முன்பகுதி கரையை கடக்கத் தொடங்கியது - வானிலை ஆய்வு மையம்
Fengal Cyclone LIVE: ஃபெஞ்சல் புயலின் முன்பகுதி கரையை கடக்கத் தொடங்கியது - வானிலை ஆய்வு மையம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav Arjuna : ”விஜய் வருவது உறுதி..”அடம்பிடிக்கும் ஆதவ் அர்ஜூனா?தலைவலியில் திருமா..கடுப்பில் திமுகPawan Kalyan Controversy : CM Vs DEPUTY CM ”துறைமுகமா? கடத்தல் கூடாரமா?” பவன் கல்யாண் எச்சரிக்கைFengal Cyclone : ”வந்துட்டான்யா! வந்துட்டான்யா!சென்னையை நெருங்கும் புயல் வெளியே வராதீங்க மக்களே!மழைக்கான ஏற்பாடுகள் என்ன? கலெக்டர் கொடுத்த HINT! துண்டு சீட்டில் எழுதிய அமைச்சர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone Landfall: கரையை கடக்க ஆரம்பித்த ஃபெஞ்சல் புயல்: எங்கு ரெட் அலர்ட்? எங்கு ஆரஞ்சு அலர்ட்?
Fengal Cyclone Landfall: கரையை கடக்க ஆரம்பித்த ஃபெஞ்சல் புயல்: எங்கு ரெட் அலர்ட்? எங்கு ஆரஞ்சு அலர்ட்?
விமானப் பயணிகளின் கவனத்திற்கு! நாளை வரை கொஞ்சம் அவதிதான்! 55 விமான சேவை ரத்து! - முழு விவரம்
விமானப் பயணிகளின் கவனத்திற்கு! நாளை வரை கொஞ்சம் அவதிதான்! 55 விமான சேவை ரத்து! - முழு விவரம்
Fengal: வட சென்னையை வதைத்த ஃபெஞ்சால்! தண்ணீரில் தவிக்கும் மக்கள் கண்ணீர்! தீர்வு எப்போது?
Fengal: வட சென்னையை வதைத்த ஃபெஞ்சால்! தண்ணீரில் தவிக்கும் மக்கள் கண்ணீர்! தீர்வு எப்போது?
Fengal Cyclone LIVE:  ஃபெஞ்சல் புயலின் முன்பகுதி கரையை கடக்கத் தொடங்கியது - வானிலை ஆய்வு மையம்
Fengal Cyclone LIVE: ஃபெஞ்சல் புயலின் முன்பகுதி கரையை கடக்கத் தொடங்கியது - வானிலை ஆய்வு மையம்
Red Alert: மக்களே அலர்ட்.! இன்று மாலைவரை 8 மாவட்டங்களில் அதிகனமழை இருக்கு.!
Red Alert: மக்களே அலர்ட்.! இன்று மாலைவரை 8 மாவட்டங்களில் அதிகனமழை இருக்கு.!
Fengal Cyclone: கொட்டும் மழை; பயணிகளே இதை உடனடியா செய்ங்க- சென்னை மெட்ரோ எச்சரிக்கை!
Fengal Cyclone: கொட்டும் மழை; பயணிகளே இதை உடனடியா செய்ங்க- சென்னை மெட்ரோ எச்சரிக்கை!
கனமழை எதிரொலி: அம்மா உணவகங்களில் இலவச உணவு: எப்போது? எவ்வளவு நாட்கள்? - முதலமைச்சரின் அறிவிப்பு
கனமழை எதிரொலி: அம்மா உணவகங்களில் இலவச உணவு: எப்போது? எவ்வளவு நாட்கள்? - முதலமைச்சரின் அறிவிப்பு
ஃபெஞ்சல் புயல் : சுளுக்கு எடுக்கும் சூறாவளி காற்று... சாலையில் விழும் மரங்கள்; ஸ்தம்பிக்கும் ECR
ஃபெஞ்சல் புயல் : சுளுக்கு எடுக்கும் சூறாவளி காற்று... சாலையில் விழும் மரங்கள்; ஸ்தம்பிக்கும் ECR
Embed widget