மேலும் அறிய

Trichy : வடகிழக்கு பருவமழை : திருச்சியில் 7 இடங்களில் தயார் நிலையில் பம்பிங் ஸ்டேஷன்கள்..!

திருச்சியில் தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் தேங்கும் மழை நீரை வெளியேற்ற 7 இடங்களில் பம்பிங் ஸ்டேஷன்கள் அமைக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி மேயர் தெரிவித்தார்.

தமிழகத்தில் ஆண்டுதோறும் பருவ மழை காலங்களில் கூரையாற்றில் ஏற்படக்கூடிய வெள்ளப்பெருக்கால் திருச்சி மாநகரில் எடமலைப்பட்டி புதூர், கருமண்டபம், உறையூர், செல்வ நகர், லிங்கம் நகர், பாத்திமா நகர், ராஜலட்சுமி நகர், பேஸ்கி நகர், தியாகராஜ நகர், மேல பாண்டமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்து கொள்வதும் அங்கு வசிக்கும் மக்கள் பல நாட்கள் அவதிக்குள்ளாவதும் தொடர்கதையாகி  வருகிறது.  மேலும் கடந்தாண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது மழைநீர் வடியாததால் இப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் ஒரு வாரத்துக்கும் மேல் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் அவதிப்பட்டனர்.

இதையடுத்து, திருச்சி மாநகரில் இது போன்ற சூழல் மீண்டும் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசு அதிகாரிகளுக்கு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு உத்தரவிட்டார். குறிப்பாக தொடர் மழையின் போது மழை நீர் வெளியேற வழியின்றி தேங்கி கிடக்கக்கூடிய குடியிருப்பு பகுதிகளை கண்டறிந்து, அங்கிருந்து உடனடியாக மழை நீரை வெளியேற்றும் வகையில் மின்மோட்டார்களுடன் கூடிய பம்மிங் ஸ்டேஷனுக்கு அமைக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார். 

Trichy : வடகிழக்கு பருவமழை : திருச்சியில் 7 இடங்களில் தயார் நிலையில் பம்பிங் ஸ்டேஷன்கள்..!

இதையடுத்து, கடந்து சில ஆண்டுகளாக தொடர் மழையின் போது அதிக அளவில் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாநகராட்சி அதிகாரிகள் கணக்கெடுப்பு நடத்தினர். அதன் அடிப்படையில் முதற்கட்டமாக கோரையாற்று வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய எடமலைப்பட்டி புதூர் பகுதியில் உள்ள அன்பிலார் நகர், டோபி காலனி, துளசிங்க நகர், கிருஷ்ணாபுரம், ராஜீவ் காந்தி நகர் ,துறையூர், பாத்திமா நகர் ,ஆதிநகர் ,ஏ.யு.டி நகர் ஆகிய 7 இடங்களில் மின் மோட்டார்களுடன் கூடிய பம்பிங் ஸ்டேஷன் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் தெரிவித்தது. "கோரையாற்றில் ஆங்காங்கே உள்ள மதகுகள் முறையாக  பராமரிக்கப்படாததால். அவற்றின் வழியாக தண்ணீர் வெளியேறி திருச்சி மாநகரில் கரையோரத்தில் உள்ள சில குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து வந்தது.

Trichy : வடகிழக்கு பருவமழை : திருச்சியில் 7 இடங்களில் தயார் நிலையில் பம்பிங் ஸ்டேஷன்கள்..!

இதைத் தவிர்க்க கோரையாறு மற்றும் அதை ஒட்டிய இதர வாய்க்கால்காளில் உள்ள மதகுகளை சீரமைக்கும் பணிகளை மேற்கொண்டோம். தொடர்ந்து வெள்ளம் வடிவதற்கு வழி இன்றி இருக்கக்கூடிய தாழ்வான பகுதிகளை கண்டறிந்தோம். அதன்படி 7 இடங்களில் தற்போது 20 எச்.பி. திறன் கொண்ட மின் மோட்டார் ஜெனரேட்டர் வசதிகளுடன் கூடிய பம்பிங் ஸ்டேஷன் அமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இனிவரும் காலங்களில் இப்பகுதிகளில் மழை நீர் தேங்கினால் அடுத்த சில மணி நேரங்களிலேயே மின் மோட்டார்கள் மூலம் அந்த நீரை அருகில் உள்ள வடிகால் வாய்க்கால்களுக்கு கொண்டு சென்று விட முடியும். மேலும்  முன்பு போல நாள்கணக்கில் பாதிப்பு இருக்காது. உறையூர் ,எடமலைப்பட்டி புதூர் பகுதி மக்களால் இதன் பலனை நன்கு உணர முடியும்" என்றார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

தலைப்பு செய்திகள்

திருச்சியில் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி
திருச்சியில் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி
விளையாட்டு வீரர்களின் கனவுக்கு பூட்டு... அரசின் கோடிக்கணக்கான முதலீடு வீணாகும் அபாயம்: எங்கு தெரியுங்களா?
விளையாட்டு வீரர்களின் கனவுக்கு பூட்டு... அரசின் கோடிக்கணக்கான முதலீடு வீணாகும் அபாயம்: எங்கு தெரியுங்களா?
தமிழகத்துக்கே முன்மாதிரி... திருடர்களுக்கு ‘செக்’:  ரூ.40 லட்சம் சொந்த நிதியில் 200 சிசிடிவி கேமராக்கள் பொறுத்திய மக்கள்
தமிழகத்துக்கே முன்மாதிரி... திருடர்களுக்கு ‘செக்’:  ரூ.40 லட்சம் சொந்த நிதியில் 200 சிசிடிவி கேமராக்கள் பொறுத்திய மக்கள்
திருச்சி விமான நிலையத்தில் ரூ. 9.21 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் துரிதம்
திருச்சி விமான நிலையத்தில் ரூ. 9.21 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் துரிதம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
Embed widget