மேலும் அறிய

குளத்தில் மண் எடுக்க அனுமதி வேண்டும் - புதுக்கோட்டை அருகே கடைகள் அடைத்து மக்கள் போராட்டம்

குளத்தில் மண் எடுக்க அனுமதி அளிக்கக்கோரி புதுக்கோட்டை அருகே கடைகளை அடைத்து பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் 48 ஊராட்சிகள் உள்ளன. இதில், கல்லாலங்குடி ஊராட்சியும் ஒன்று. இந்த ஊராட்சியில் 9 வார்டுகளும், 17 குக்கிராமங்களும் உள்ளன. இங்கு 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். இந்தநிலையில், பழுதடைந்த சாலைகளை சீரமைக்க அப்பகுதியில் உள்ள பாலைய குளத்தில் மண் எடுக்க அனுமதி அளிக்கக்கோரி கல்லாலங்குடி ஆர்ச் நுழைவுவாயில் முன்பு 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று காலை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அப்பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கடைகளை வியாபாரிகள் அடைத்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், “கல்லாலங்குடி ஊராட்சியில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க கோரி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் மழைக்காலங்களில் சாலைகளை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, எங்களின் வேண்டுகோளுக்கு இணங்க கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கல்லாலங்குடி ஊராட்சி பகுதியில் உள்ள பாலைய குளத்தில் மண் எடுத்து பழுதடைந்த சாலைகள் சமப்படுத்தப்பட்டு வந்தது.
 

குளத்தில் மண் எடுக்க அனுமதி வேண்டும் - புதுக்கோட்டை அருகே கடைகள் அடைத்து மக்கள் போராட்டம்
 
இந்தநிலையில் தனிநபர் அளித்த தவறான புகாரால் மீதமுள்ள சாலைகளை சமப்படுத்த அதிகாரிகள் மண் எடுக்க அனுமதி மறுத்து உள்ளனர். இதனால் சாலைகளை சீரமைக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் கல்லாலங்குடி ஊராட்சி பகுதியில் இஸ்லாமியர்களுக்கு மயானம், குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரிவர செய்து தரவில்லை என கூறினர். இதுகுறித்து தகவல் அறிந்த திருவரங்குளம் ஒன்றிய ஆணையர் ஆயிஷா ராணி, கிராம வளர்ச்சி அலுவலர் (வட்டார வளர்ச்சி கிராமம்) கோகுலகிருஷ்ணன் மற்றும் ஆலங்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு தீபக் ரஜினி, ஆலங்குடி இன்ஸ்பெக்டர் அழகம்மை உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பிறகு கல்லாலங்குடி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பொதுமக்களிடம் மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் இதில் எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை. எங்கள் கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்றால் அடுத்தகட்ட போராட்டம் நடைபெறும்” என தெரிவித்தனர்.
 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

தலைப்பு செய்திகள்

தனியார் பேருந்துகளின் வேகப் போட்டி... அலறவிடும் ஏர்ஹாரன்கள்: உயிரை கையில் பிடித்தபடி செல்லும் மக்கள்
தனியார் பேருந்துகளின் வேகப் போட்டி... அலறவிடும் ஏர்ஹாரன்கள்: உயிரை கையில் பிடித்தபடி செல்லும் மக்கள்
Trichy power cut: திருச்சியில் நாளை (ஆக.04) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? பட்டியல் இதோ!
திருச்சியில் நாளை (ஆக.04) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? பட்டியல் இதோ!
வாடகை பாக்கி வைத்திருந்த கடைகள்... அதிரடியாக பூட்டி சீல் வைத்த திருச்சி மாநகராட்சி
வாடகை பாக்கி வைத்திருந்த கடைகள்... அதிரடியாக பூட்டி சீல் வைத்த திருச்சி மாநகராட்சி
சென்னையிலிருந்து திருச்சிக்கு இனி 3 மணி நேரம்தான்...! இனி டோல்கேட்டில் நிற்கத் தேவையில்லை...
சென்னையிலிருந்து திருச்சிக்கு இனி 3 மணி நேரம்தான்...! இனி டோல்கேட்டில் நிற்கத் தேவையில்லை...

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Maruti Brezza Vs Renault Kiger: மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
Maruti XL6 Facelift: செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
Innova Hycross on EMI: ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
Embed widget