மேலும் அறிய

திருச்சியில் 32 படுக்கைகளுடன் ஒமிக்ரான் சிறப்பு வார்டு தயார்- மருத்துவமனை நிர்வாகம்

திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் 32- படுக்கைவசதியுடன் ஒமிக்ரான் சிறப்பு சிகிச்சை வார்டு தயார்.மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தனர்.

சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு பரவிய கொரோனா தொற்று உலக நாடுகளை பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியது. பல லட்சம் உயிர்களை பலி வாங்கியதோடு, கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். மேலும் இந்தியாவிலும் வேகமாக பரவிய இந்த தொற்று மத்திய, மாநில அரசுகளின் தடுப்பு நடவடிக்கைகளால் தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ள தடுப்பூசிகளும் தொடர்ந்து செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸ்  புதியதாக மரபணு உருமாற்றம் அடைந்து ஒமிக்ரான் வடிவில் உலகை அச்சுறுத்த தொடங்கி உள்ளது. தென்ஆப்பிரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளில் ஒமிக்ரான் பரவியுள்ள நிலையில் இந்தியாவிலும் கர்நாடகத்தில் 2 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது, அவர்களின் மாதிரிகளை சேகரித்து ஓமிக்ரான் பரிசோதனைக்கு அனுப்பபட்டுள்ளதாக சுகாதாரதுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருச்சியில் 32 படுக்கைகளுடன் ஒமிக்ரான் சிறப்பு வார்டு தயார்- மருத்துவமனை நிர்வாகம்

குறிப்பாக ஒமிக்ரான் பரவியுள்ள தென்ஆப்பிரிக்கா, போட்ஸ்வானா, இங்கிலாந்து, சிங்கப்பூர், நியூசிலாந்து உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வருகை தரும் பயணிகளிடம் மாதிரிகளை சேகரித்து முறையாக பரிசோதிக்கவும், விமான நிலையங்களில் கூடுதல் வசதிகள் செய்யவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில்  நாடு முழுவதும் விமான நிலையங்களில் வெளிநாட்டு பயணிகளுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டு தீவிரமாக கண்காணிக்கபட்டு வருகிறது. தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, தூத்துக்குடி விமான நிலையங்களில் இந்த பரிசோதனைக்கான ஏற்பாடுகளை தீவிரபடுத்தி தொடர்ந்து கண்காணிக்கபட்டு வருவதாக சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பரமணியன் தெரிவித்துள்ளார். குறிப்பாக தமிழ்நாட்டில் ஒமிக்ரான் வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த வெளிநாட்டுப் பயணிகளுக்கு விமான நிலையங்களில் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. பரிசோதனையில் யாருக்காவது நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டால், அவர்களுக்கு சிகிச்சை அளிக்க மாவட்ட தலைநகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தனி வார்டுகள் தயார் செய்யும்படி சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

திருச்சியில் 32 படுக்கைகளுடன் ஒமிக்ரான் சிறப்பு வார்டு தயார்- மருத்துவமனை நிர்வாகம்

அந்தவகையில், திருச்சி அரசு மருத்துவமனையில், ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கபட்டு வருபவர்களுக்கு 1000 படுக்கை வசதியுடன் தனி வார்டு தயார் செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது.இந்நிலையில் தொற்று எண்ணிக்கை சற்று குறைந்து காணப்படுவதல் ஒமிக்ரான் சிறப்பு வார்டு தயார் செய்யபட்டுள்ளது. அரசு தலைமை மருத்துவமனையில்  ‘குடிபோதை மீட்பு சிகிச்சை மையம்’ கட்டடம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தரை தளம், முதல் தளம், இரண்டாவது தளம் என மூன்று தளங்களில் 32 படுக்கைகளுடன் இந்த வார்டு அமைக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளிலிருந்து திருச்சி விமான நிலையத்துக்கு வரும் பயணிகள் யாருக்காவது நோய்த் தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்தால் அவர்கள் இந்த வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தேவைக்கு ஏற்ப படுக்கை வசதிகளை அதிகபடுத்தவும் தயாராக உள்ளோம் என  மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தலைப்பு செய்திகள்

2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
Kanyakumari: பள்ளியில் மது அருந்திய மாணவிகள்.. வசமாக சிக்கிய பால் பாக்கெட் போடுபவர்.. நடந்தது என்ன?
Kanyakumari: பள்ளியில் மது அருந்திய மாணவிகள்.. வசமாக சிக்கிய பால் பாக்கெட் போடுபவர்.. நடந்தது என்ன?
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
Kanyakumari: பள்ளியில் மது அருந்திய மாணவிகள்.. வசமாக சிக்கிய பால் பாக்கெட் போடுபவர்.. நடந்தது என்ன?
Kanyakumari: பள்ளியில் மது அருந்திய மாணவிகள்.. வசமாக சிக்கிய பால் பாக்கெட் போடுபவர்.. நடந்தது என்ன?
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!
Upcoming Cars:
Upcoming Cars: "மஹிந்திரா முதல் ஸ்கோடா வரை.." ரெண்டே மாசத்துல இந்தியாவுக்குள் வரப்போகும் 6 கார்கள்!
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Embed widget