மேலும் அறிய

வேங்கையவயல் விவகாரம்: புதுக்கோட்டை ஆட்சியர், மாவட்ட எஸ்.பி.க்கு நோட்டீஸ்

வேங்கையவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்.பி.க்கு நோட்டிஸ் - தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் .

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில், மேல்நிலை குடிநீர் தொட்டியில் சமீபத்தில் சிலர் மனிதக் கழிவுகளை கலந்ததாக பரபரப்பு புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக தகவல் கிடைத்ததும் மாவட்ட கலெக்டர் கவிதாராமு, போலீஸ் சூப்பிரண்டு வந்திதாபாண்டே ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசாரும் தனியாக வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் விசுவரூபம் எடுத்ததை தொடர்ந்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தை ஆய்வு செய்து விசாரணையை தொடங்கினர். அத்துடன், குடிநீர் தொட்டியில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சென்னைக்கு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் முத்துக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட வேங்கைவயல், இறையூர் மற்றும் பக்கத்து கிராமங்களை சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்டோரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த 46 பேர், பிற சமூகத்தை சேர்ந்த 49 பேரின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இன்னும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இந்தநிலையில் கடந்த வாரம்  வேங்கைவயல் கிராமம் அமைந்துள்ள முத்துக்காடு ஊராட்சி மன்ற தலைவரின் கணவர், பயிற்சி காவலர் முரளிராஜா மற்றும் முன்னாள் கவுன்சிலர் உள்பட 8 பேரையும்,  சி.பி.சி.ஐ.டி. போலீசார் திருச்சி மத்திய சிறை அருகே உள்ள சி.பி.சி.ஐ.டி போலீஸ் அலுவலகத்துக்கு அழைத்திருந்தனர்.


வேங்கையவயல் விவகாரம்: புதுக்கோட்டை ஆட்சியர், மாவட்ட எஸ்.பி.க்கு நோட்டீஸ்

இதனை தொடர்ந்து  8 பேரும், சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு தில்லைநடராஜன் முன் நேரில் ஆஜராகினர். அவர்களிடம் துணை போலீஸ் சூப்பிரண்டு பால்பாண்டி மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த வழக்கு விசாரணை முக்கிய கட்டத்தை அடைந்து விட்டதாகவும், விரைவில், தொடர்புடைய குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் அதிகாரிகள் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு நேரில் சென்று மேலும் சிலரிடம் தீவிர விசாரணை நடத்தினர். இந்நிலையில் வேங்கையவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் தொடர்பாக ஆட்சியர், மாவட்ட எஸ்.பி.க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். புதுக்கோட்டை ஆட்சியர், மாவட்ட எஸ்.பி. 15 நாட்ளில் அறிக்கை அளிக்க தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அம்பேதகர் மக்கள் இயக்க தலைவர் இளமுருகுமுத்து கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மேலும் அறிக்கை தாக்கல் செய்த உடனே அடுத்தகட்ட விசராணையை தீவிரபடுத்தி குற்றவாளிகள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கபடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Adani TNEB: அதானி உடன் கைகோர்த்த திமுக அரசு? வெடிக்கும் லஞ்ச விவகாரம் -  அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
Adani TNEB: அதானி உடன் கைகோர்த்த திமுக அரசு? வெடிக்கும் லஞ்ச விவகாரம் - அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
Vijay vs Thirumavalavan: விஜய்க்கு வில்லனா? தளபதியா? திருமா முடிவுக்காக தி.மு.க. வெயிட்டிங்!
Vijay vs Thirumavalavan: விஜய்க்கு வில்லனா? தளபதியா? திருமா முடிவுக்காக தி.மு.க. வெயிட்டிங்!
Embed widget