திருச்சி மண்டல அளவிலான ஹாக்கி லீக் போட்டி: தொடங்கி வைத்த நாகை மாவட்ட ஆட்சியர்
இப்போட்டிகளில் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், நாமக்கல், திருச்சிராப்பள்ளி ஆகிய ஏழு மாவட்டங்களிலிருந்து ஹாக்கி அணியினர் கலந்து கொள்ள உள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டம், கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டு அரங்கில் இரண்டு நாள் நடைபெறும் 2021-2022ஆம் ஆண்டுக்கான திருச்சி மண்டல அளவிலான ஹாக்கி லீக் போட்டியினை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து பேசிய ஆட்சியர் அருண் தம்புராஜ், “ஹாக்கி நம்முடைய தேசிய விளையாட்டாகும். நம்முடைய மாவட்டத்தில் இது போன்ற நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடத்திட வேண்டும். இப்போட்டிகளில் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், நாமக்கல் மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய ஏழு மாவட்டங்களிலிருந்து ஹாக்கி அணியினர் கலந்து கொள்ள உள்ளனர்.
இப்போட்டிகளில் கலந்து கொள்ள உள்ள விளையாட்டு வீரர்கள் தேசிய அளவில் மட்டுமல்லாது உலக அளவிலும் சாதனைகளைப் படைக்க வேண்டும். இளம் சிறார்கள் மற்றும் மாணவர்கள் ஹாக்கியில் ஆர்வம் செலுத்த வேண்டும்.
மேலும் படிக்க: High Court order: பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிப்பதில் அரசுக்கு என்ன பிரச்சினை? - தற்காலிக நியமனத்திற்கு இடைக்காலத் தடை
நீங்கள் மாவட்ட விளையாட்டு அரங்கில் பயிற்சி பெற்ற போட்டிகளிலும் பங்கு பெறலாம். மாணவர்களை ஆசிரியர்கள் ஊக்கப்படுத்த வேண்டும், அதேபோல் பெற்றோரும் உற்சாகமூட்டி அவர்களை பயிற்சி மேற்கொள்ள வைக்க வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ராஜா மற்றும் நாகப்பட்டினம் ஹாக்கி கழக செயலர் சாமிநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.
இந்தப் போட்டிகள் இன்று (ஜூன்.02) நாளை (ஜூன்.03) என இரண்டு நாள்கள் நடைபெற உள்ளன. வெற்றி பெறும் அணிகளுக்கு சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட உள்ளன. முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகள் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கு பெற தகுதி பெறுகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்