மேலும் அறிய

முத்தரசனுக்கு சுவாச பாதையில் கிருமி தொற்று; டெங்கு இல்லை - மருத்துவர்கள் தகவல்

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் அவர்கள் இன்னும் 2 நாட்களில் வீடு திரும்புவார். தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் தகவல்

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருச்சிக்கு வந்து பெரிய மிளகுபாறையில் உள்ள கட்சி அலுவலகத்தில் தங்கி இருந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை அவருக்கு சளி அதிகரித்து, காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதற்காக அவர் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சென்று டாக்டரை சந்தித்து உடல்நிலை குறித்து பரிசோதித்தார். அப்போது, உடல் நிலையில் பாதிப்பு ஏதும் இல்லை. ஓய்வு அவசியம் என்று டாக்டர்கள் கூறி, சில மருந்துகள் பரிந்துரை செய்தனர். இதைத்தொடர்ந்து தான் தங்கி இருந்த அறைக்கு சென்று ஓய்வு எடுத்தார். இந்தநிலையில் மாலை 5 மணிக்கு மேல் அவருக்கு தொடர்ந்து விக்கல் வந்து கொண்டிருந்தது. மேலும் அவர் வாந்தி எடுத்துள்ளார். உடல் நலக்குறைவு காரணமாக அவரை மருத்துவ பரிசோதனைக்காக திருச்சி மத்திய பேருந்து நிலைய பகுதியில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு கட்சி நிர்வாகிகள் அழைத்து சென்றனர். மேலும், இரண்டொரு நாட்கள் அவருக்கு முழுமையான ஓய்வு அவசியம் என்றும், மருத்துவமனையில் தங்கி ஓய்வு எடுத்துக்கொள்ளுமாறும் டாக்டர்கள் அவருக்கு அறிவுரை கூறினர். 

முத்தரசனுக்கு சுவாச பாதையில்  கிருமி தொற்று; டெங்கு இல்லை - மருத்துவர்கள் தகவல்

இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு காவேரி மருத்துவமனையிலேயே முத்தரசன் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவருடைய உடல் நிலை சீராக உள்ளது. இதனை தொடர்ந்து இதுபற்றி அறிந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு முத்தரசனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். அதனை தொடர்ந்து தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு, மருத்துவமனைக்கு நேரில் சென்று முத்தரசனை சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார். மேலும் முத்தரசன் உடல் நலம் சீராக இருப்பதாகவும், அவர் ஓய்வெடுக்க உதவும் வகையில் மருத்துவமனைக்கு கட்சியினர் வருவதை தவிர்க்க வேண்டும் என்றும், வேறு கவலைப்படும்படி ஒன்றும் இல்லை என்றும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில துணைச்செயலாளர் நா.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்  முத்தரசனுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியானதாகவும், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் சமூக ஊடகங்களில் தகவல் பரவியது. இதனால் கட்சியினர் முத்தரசனின் உடல் நலம் குறித்து உடனுள்ள நிர்வாகிகளிடம் விசாரித்த வண்ணம் இருந்தனர். 

ஆனால் அவருக்கு டெங்கு காய்ச்சல் இல்லை என்றும், சாதாரண வைரஸ் காய்ச்சல் தான் என்றும் கட்சியினர் விளக்கம் அளித்துள்ளனர். இதுதொடர்பாக கட்சியின் மாநில துணை செயலாளர் நா.பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "முத்தரசனுக்கு தற்போது காய்ச்சல் அளவு குறைந்துள்ளது. பலவீனமாக இருந்த நிலை மாறி, உடலில் ஆற்றல் கூடி வருகிறது. ஆனாலும் சுவாச பாதையில் உருவான கிருமி தொற்று நீங்கவில்லை. சிகிச்சை தொடர்கிறது. இன்னும் இரண்டொரு நாள் சிகிச்சை தொடர வேண்டும் என டாக்டர்கள் கூறியுள்ளனர். அவரது ரத்தம் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் 'டெங்கு' காய்ச்சல் இல்லை என்பதும், சாதாரண வைரல் காய்ச்சல் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவித்து கொள்கிறோம்" என்று கூறப்பட்டு இருந்தது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

கோவை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் ; வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை
கோவை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் ; வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை
Trichy Surya Siva: பாஜக வேண்டாம், வேண்டவே வேண்டாம்.. சந்தானம் காமெடியை பகிர்ந்த சூர்யா சிவா
பாஜக வேண்டாம், வேண்டவே வேண்டாம்.. சந்தானம் காமெடியை பகிர்ந்த சூர்யா சிவா
Breaking News LIVE: நீதியரசர் சந்துரு அறிக்கை : நகலை கிழித்து எறிந்த பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த்
Breaking News LIVE: நீதியரசர் சந்துரு அறிக்கை : நகலை கிழித்து எறிந்த பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த்
Indian 2: உலகளவில் பிரமோஷன்.. மும்பையில் ரிலீசாகும் ட்ரெய்லர்.. இந்தியன் 2 பற்றிய சூப்பரான தகவல்கள்!
உலகளவில் பிரமோஷன்.. மும்பையில் ரிலீசாகும் ட்ரெய்லர்.. இந்தியன் 2 பற்றிய சூப்பரான தகவல்கள்!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கோவை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் ; வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை
கோவை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் ; வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை
Trichy Surya Siva: பாஜக வேண்டாம், வேண்டவே வேண்டாம்.. சந்தானம் காமெடியை பகிர்ந்த சூர்யா சிவா
பாஜக வேண்டாம், வேண்டவே வேண்டாம்.. சந்தானம் காமெடியை பகிர்ந்த சூர்யா சிவா
Breaking News LIVE: நீதியரசர் சந்துரு அறிக்கை : நகலை கிழித்து எறிந்த பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த்
Breaking News LIVE: நீதியரசர் சந்துரு அறிக்கை : நகலை கிழித்து எறிந்த பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த்
Indian 2: உலகளவில் பிரமோஷன்.. மும்பையில் ரிலீசாகும் ட்ரெய்லர்.. இந்தியன் 2 பற்றிய சூப்பரான தகவல்கள்!
உலகளவில் பிரமோஷன்.. மும்பையில் ரிலீசாகும் ட்ரெய்லர்.. இந்தியன் 2 பற்றிய சூப்பரான தகவல்கள்!
PM Modi: தொடங்கியது மக்களவை முதல் கூட்டத்தொடர்.. எம்.பி.யாக பதவியேற்றார் பிரதமர் மோடி..!
தொடங்கியது மக்களவை முதல் கூட்டத்தொடர்.. எம்.பி.யாக பதவியேற்றார் பிரதமர் மோடி..!
கள்ளச்சாராயம் காய்ச்சினால் இந்த வாட்ஸ் அப் எண்ணிற்கு தகவல் சொல்லுங்க -தஞ்சை கலெக்டர்
கள்ளச்சாராயம் காய்ச்சினால் இந்த வாட்ஸ் அப் எண்ணிற்கு தகவல் சொல்லுங்க -தஞ்சை கலெக்டர்
AIADMK: கள்ளக்குறிச்சி சம்பவம் திமுக அரசின் அலட்சியம்.. கண்டன ஆர்ப்பாட்டத்தில் இபிஎஸ் குற்றச்சாட்டு
கள்ளக்குறிச்சி சம்பவம் திமுக அரசின் அலட்சியம்.. கண்டன ஆர்ப்பாட்டத்தில் இபிஎஸ் குற்றச்சாட்டு
Salem Leopard: சேலத்தில் உலா வரும் சிறுத்தை - தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் வனத்துறை..
சேலத்தில் உலா வரும் சிறுத்தை - தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் வனத்துறை..
Embed widget