மேலும் அறிய

அதிக அளவில் அரசு திட்ட பணிகள் நடைபெறுவது திருச்சி மாவட்டத்தில் மட்டும்தான் - அமைச்சர் மா.சுப்ரமணியன்

தமிழ்நாட்டில் கடந்த 2 ஆண்டுகளில் 487 விருதுகள், அதிமுக ஆட்சியில் வெறும் 69 விருதுகள் மட்டுமே - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ரூ.10 கோடி மதிப்பில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப் பிரிவுக்கான புதிய கட்டிடம் கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டினார். பின்னர் ரூ. 30 லட்சம் மதிப்பில் கொடும்பபட்டியில் கட்டப்பட்டுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தையும் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கரூர் எம்.பி. ஜோதிமணி, சட்டமன்ற உறுப்பினர் அப்துல்சமது, மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மருத்துவத்துறை இணை இயக்குனர் லெட்சுமி, நகர்மன்ற தலைவர் கீதா மைக்கேல்ராஜ், ஒன்றியக்குழு பெருந்தலைவர் அமிர்தவள்ளி ராமசாமி, ஊராட்சி மன்ற தலைவர் தங்கமணி முருகன், நகர செயலாளர் மு.ம.செல்வம், ஒன்றிய செயலாளர் ராமசாமி, நிர்வாகிகள் பன்னப்பட்டி கோவிந்தராஜன், வக்கீல் கிருஷ்ண கோபால், வேம்பனூர் ராஜேந்திரன், ஜான் பிரிட்டோ, பால்ராஜ், பால்பாண்டி, ஜேம்ஸ், கார்த்திக், கண்ணன், வெற்றிச் செல்வன், விடுதலை மோகன், ஆர்.வி.எஸ். சரவணன், செந்தில், குமரன், ராஜரத்தினம், சோலைராஜன், எங்க வீட்டு வேலன் மற்றும் அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர். 

இதனை தொடர்ந்து விழாவில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: அதிக அளவில் அரசு திட்ட பணிகள் நடைபெறுவது திருச்சி மாவட்டத்தில் மட்டும்தான் - அமைச்சர் மா.சுப்ரமணியன்

மணப்பாறையில் ரூ.10 கோடி மதிப்பில் கட்டப்ப்படும் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பரிவில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. மேலும் இதன் வேலைகள் 12 மாத காலக்கெடுவில் கட்டி முடிக்கப்படும். மேலும் இந்த வளாகம் பழைய அரசு மருத்துவமனை செயல்பட்ட இடம் என அமைச்சர் கூறினார். இந்த இடத்தில் 20 கோடி திட்ட மதிப்பில் 50 படுக்கை வசதிகள் கொண்ட அதி தீவிர சிகிச்சை பிரிவு அமையபட உள்ளது. அதற்கான டெண்டர் விடப்பட்டு 1 மாத காலத்திற்குள் அடிக்கல் நாட்டபட்டது என்றார்.

மேலும், துறையூரில் கடந்தாண்டு நகராட்சித் துறை மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர்களால் அடிக்கல் நாட்டப்பட்ட ரூ. 9 கோடியே 26 லட்சம் திட்ட மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட ஒருங்கிணைந்த மருத்துவமனை முதல்வர் திறந்து வைக்க உள்ளார் . மேலும், 75 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது அதுவும் விரைவில் திறக்கப்பட உள்ளது. மேலும் திருச்சி மாவட்டத்தில் 43 பணிகள் 34 கோடியே 22 லட்சம் திட்ட மதிப்பில் மருத்துவமனை கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன விரைவில் பணிகள் முடிவடைந்து டிசம்பர் மாதம் திறப்பு விழா நடைபெற உள்ளது. ஒரு மாவட்டத்தில் அதிக அளவில் பணிகள் நடைபெற்று வருகிறது என்றால் அது திருச்சி மாவட்ட மாவட்டமாக தான் இருக்கும் என்றார்.


அதிக அளவில் அரசு திட்ட பணிகள் நடைபெறுவது திருச்சி மாவட்டத்தில் மட்டும்தான் - அமைச்சர் மா.சுப்ரமணியன்

டெல்லியில் உள்ள ஒரு மாடல் பள்ளி, அதே போல அதிக அளவில் பயன்பாட்டில் உள்ள ஆம்ஆத்மி மெளலான மருத்துவமனை பற்றி சொல்லப்பட்டது. உடனே பள்ளிக்கு மகேஷ்யும், மருத்துவமனைக்கு என்னையும் அழைத்துக் கொண்டு முதல்வர் பார்வையிட்டு அடுத்த நாள் சட்டமன்றத்தில் வந்து 110 - விதியின் கீழ் இந்த 2 செய்தியையும் அறிவித்தார். மாடல் ஸ்கூல் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும், டெல்லியில் உள்ள மருத்துவமனை போல தமிழ்நாட்டில் 708 மருத்துவமனைகள் அமைக்கப்படும் என தெரிவித்து 21 மாநகராட்சி, 63 நகராட்சிகளில் செயல்படுத்தபடும் என அறிவித்த 4 மாதங்களில் 500 மருத்துவமனைகள் கட்டி முடித்து முதல்வரால் திறந்து வைக்கப்பட்டது.

மேலும், 708 மருத்துவமனைகளில் திருச்சி மாநகராட்சிக்கு 36-ம், மணப்பாறை துறையூர் பகுதிக்கு தலா 1-ம் ஒதுக்கப்பட்டது. இதில் 25 முதல்வரால் திறந்து வைக்கப்பட்டது. மீதமுள்ளதில்  13 -ன்றுமும் கட்டி முடிக்கப்பட்டு, திறப்பு விழா காண தயாராகி வருகிறது. ஒரு மாவட்டத்தில் 38-க்கு 38ம் கட்டி முடிக்கப்பட்டு 100% முடிவடைந்து திருச்சி மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. மேலும் 2012-லிருந்து மத்திய அரசு சிறப்பாக உள்ள மருத்துவமனைகளுக்கு விருது தருகிறார்கள். விருதின் பெயர் தேசிய தர உறுதி நிர்ணய திட்ட விருது ஏறத்தாழ 11 ஆண்டுகளாக வழங்கப்பட்டதில் தமிழ்நாட்டிற்கு இதுவரை 556 விருதுகள் கிடைத்து இருக்கிறது. தமிழக முதல்வர் பதவியேற்று 2 ஆண்டுகளில் 487 விருதுகள் கிடைத்துள்ளது. 556 - 487 போனால் மீதமுள்ள 69 மட்டும் கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் வாங்கிய விருதுகள்.

அதிலிரும் ஒரு சிறப்பு 38 மாவட்டங்களில் திருச்சி மாவட்டம் மட்டும் 14 விருதுகள் மணப்பாறை உள்பட வாங்கியுள்ளது. மருத்துவ கட்டமைப்பு சிறப்பாக உள்ளதற்கு இது ஒரு உதாரணம். 2017- லிருந்து மத்திய அரசு இன்னொரு விருதை தருகிறது. அது என்னவென்றால் மகப்பேறு அறைகளை சிறப்பாக கண்காணித்தழ், கர்ப்பிணி தாய்மார்களின் அறுவை சிகிச்சை அரங்கை பராமரித்தல், உதவி செய்தல் போன்றவற்றிக்காக  லட்சியா விருதுகள் வழங்கப்படுகின்றது என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget