மேலும் அறிய

புதிய கல்விக் கொள்கையை ஒருபோதும் தமிழ்நாடு அரசு ஏற்காது - அமைச்சர் அன்பில் மகேஷ்

பிரதமரின் ஸ்ரீ' பள்ளிகளுக்கான கையெழுத்து இடுவதற்கு ஒரு குழு அமைத்து இருக்கிறோம், ஆலோசனை செய்த பிறகு அடுத்து கட்ட முடிவு எடுக்கப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ்

தமிழ்நாடு பாடநூல் கழகம் சார்பாக வெளியிடப்படும் அனைத்து புத்தகங்களையும் தமிழகம் முழுவதும் உள்ள இடங்களில் விற்பனைக்கு கொண்டு செல்லும் வகையில் திருச்சியில் இன்று சிங்காரத்தோப்பு பகுதியில் உள்ள ராசி பப்ளிகேஷன், சுமதி பப்ளிகேஷன் ஆகிய இரு புத்தகக் கடைகளில் இரண்டு ஸ்டால்களை தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார். மேலும் தமிழ்நாடு பாட நூல் கழகம் சார்பாக வழங்கப்படும் அனைத்து புத்தகங்களும் முறையாக வருகிறதா?, மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறதா என்பது குறித்து நூலக நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார். 

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியதாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் அடிப்படையில் தமிழ்நாடு பாடநூல் கழகம் சார்பாக பல நூல்கள் சார்பாக பல நூல்கள் மொழிபெயர்த்துள்ளோம். குறிப்பாக 350க்கும் மேற்பட்ட நூல்களை மொழிபெயர்த்துள்ளோம். மேலும் மற்ற மாநிலங்களை சார்ந்த நூல்களாக இருந்தாலும் அதையும் நாம் மொழிபெயர்த்துள்ளோம். இது போன்ற நூல்களை குறைந்தது 100 இடங்களுக்காவது கொண்டு சென்று ஸ்டால்கள் அமைக்க வேண்டும் என்று விரும்புகிறோம். குறிப்பாக அனைவரும் DPI வளாகத்திற்கு வந்து நூல்களை வாங்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள்.

புதிய கல்விக் கொள்கையை ஒருபோதும் தமிழ்நாடு அரசு ஏற்காது - அமைச்சர் அன்பில் மகேஷ்

புதிது புதிதாக வரும் நூல்களை மொழி பெயர்த்து வெளியிட வேண்டும் என்று நோக்கத்தோடு பணியாற்றி வருகிறோம். குறிப்பாக வ.உ.சி அவர்களின் வாழ்க்கை வரலாறு புகைப்படங்களை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். அதை ஒரு தொகுப்பாக கொண்டு நூலாக வெளியிட்டுள்ளோம். சென்னையில் ஒரு ஸ்டால் அமைத்துள்ளோம் அடுத்ததாக தமிழ்நாட்டில் பழமை வாய்ந்த புகழ் பெற்ற திருச்சியில் ஸ்டால் அமைக்க வேண்டும் என்று நோக்கத்தில் தற்போது ராசி, சுமதி ஆகிய 2 கடைகளிலும் ஸ்டால்கள் அமைத்து நூல்களை வெளியிட்டுள்ளது எனக்கு பெரும் மகிழ்ச்சியாக உள்ளது. 

குறிப்பாக திருச்சியில் ஸ்டால்கள் அமைத்தது திருச்சியை சேர்ந்தவன் என்ற முறையில் எனக்கு மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. ஏனென்றால் நான் பள்ளி மாணவராக இருந்தபோது நானும் எனது நண்பர்களும் இந்த இரண்டு கடைகளில்தான் புத்தகங்களை வாங்கி செல்வோம். அந்தப் பழைய நினைவுகள் இன்றும் என் நினைவில் நின்று கொண்டு தான் இருக்கிறது. தமிழ்நாட்டில் 2 மற்றும் 3 இடமாக திருச்சியில் இந்த நூல்களை கொண்டு வந்துள்ளோம்.

தமிழ்நாடு முழுவதும் 100 இடங்களில் இது போன்ற ஸ்டால்கள் அமைக்க திட்டமிட்டுள்ளோம். குறிப்பாக பொதுமக்கள் அதிகமாக நின்று செல்லக்கூடிய இடங்களை கண்டறிந்து அங்கு ஸ்டால்கள் அமைப்பது தொடர்பான பணிகளை மேற்கொண்டு வருகிறோம். 

புதிய கல்விக் கொள்கையை ஒருபோதும் தமிழ்நாடு அரசு ஏற்காது - அமைச்சர் அன்பில் மகேஷ்

தமிழகத்தில் பிஎம் ஸ்ரீ பள்ளிகள் குறித்து அமைச்சர் மகேஷ் விளக்கம்..

'பிரதமரின் ஸ்ரீ' பள்ளிகளுக்கான கையெழுத்து இடுவதற்கு ஒரு குழு அமைத்து இருக்கிறோம். அதற்காக நாங்கள் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்கிறோம் அர்த்தமாகாது. நமக்கு தரவேண்டிய மூன்றாவது தவணை நான்காவது தவணை 1800 கோடி மட்டுமல்ல அடுத்த ஆண்டு தரவேண்டிய 3 ஆயிரத்து 800 கோடி ரூபாயையும் இதில் தொடர்புப்படுத்துகின்றனர். ஆனால் இரண்டையும் லிங்க் செய்வது போல செய்கின்றனர் அமைச்சர் என்பதை தாண்டி திமுக காரனாக கண்டிப்பாக இதை எதிர்ப்பேன். இதில் தமிழக முதலமைச்சர் என்ன ஆலோசனை சொல்கிறார்கள், நம்முடைய மாநிலத்திற்கு என்ன தேவையோ மாநில கல்விக் கொள்கையை அதனால் தான் உருவாக்கியுள்ளோம். எனவே ஆரம்பத்தில் இருந்து எதிர்த்து வருகிறோம் எனவே அதை பொது பட்டியலில் இருந்து மாநில பட்டியலை கொண்டு வர வேண்டியது தான் எங்களுடைய எண்ணம் அதை நோக்கி தான் நாங்கள் செயல்படுகிறோம்

எங்களுடைய நிலைப்பாட்டில் இருந்து மாற்று கொள்கைக்கு செல்வதாக யாரும் எடுத்துக் கொள்ள வேண்டியது இல்லை. புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு என்றைக்கும் அதை ஏற்றுக் கொள்ளாது என்பதை நான் திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா?
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா? அமைச்சர் விளக்கம்!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav arjuna Resign VCK : ஆதவ் அர்ஜுனா ராஜினாமா!’’எனக்கு உள் நோக்கமா?’’திருமாவுக்கு பதிலடி!Aadhav Arjuna Joins Vijay TVK : விசிகவுக்கு டாட்டா!தவெகவில் இணையும் ஆதவ்?TARGET திருமாPriyanka Gandhi Palestine bag : Shankar Jiwal Daughter : தமிழ்நாடு DGP-யின் மகள்..ஜெயம் ரவி ஹீரோயின்!யார் இந்த தவ்தி ஜிவால்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா?
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா? அமைச்சர் விளக்கம்!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
"இங்கிலீஷ் நல்லாதான் பேசுறாங்க.. ஆனா, செயல் சரி இல்ல" நிர்மலா சீதாராமனை பங்கமாக கலாய்த்த கார்கே!
TN Rain Alert: 2 நாட்களுக்கு கனமழை இருக்கு; சென்னைக்கு எப்படி?வானிலை அப்டேட்!
TN Rain Alert: 2 நாட்களுக்கு கனமழை இருக்கு; சென்னைக்கு எப்படி?வானிலை அப்டேட்!
"நிவாரணம் எங்களுக்கும் வேணும்" கொந்தளிக்கும் கிராம மக்கள்; தொடர் சாலை மறியல் - திணறும் விழுப்புரம் மாவட்டம்
Embed widget