Lok Sabha Election 2024: திருச்சியில் மாற்றுத்திறனாளிகள், முதியோர்களுக்கு அஞ்சல் வழியில் வாக்களிக்க ஏற்பாடு - மாவட்ட தேர்தல் அலுவலர் பிரதீப் குமார்
திருச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களுக்கு, அஞ்சல் வழியில் வாக்களித்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
பாராளுமன்ற தேர்தல் 2024 முன்னிட்டு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் திருச்சி மாவட்டத்தில் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக வேட்பு மனுத்தாக்கல் நாளை 20ம் தேதி தொடங்குகிறது. வேட்புமனுத்தாக்கல் செய்ய மார்ச் 27 ம் தேதி கடைசி நாளாகும். வேட்பு மனு மீதான பரிசீலனை என்பது மார்ச் 28 ம் தேதி நடைபெற உள்ளது. வேட்பு மனு வாபஸ் பெற மார்ச் 30ம் தேதி கடைசி நாளாகும். அதன்பிறகு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு ஏப்ரல் 19 ம் தேதி 39 லோக்சபா தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. ஓட்டு எண்ணிக்கை என்பது ஜுன் 4ம் தேதி நடைபெற உள்ளது.
தேர்தல் விதிமீறலை கண்காணக்க குழு அமைப்பு
திருச்சி மாவட்டத்தில், தேர்தல் நடத்தை விதிகளை கண்காணித்திடும் பொருட்டு, 81 பறக்கும் படைகள். 81 நிலையான கண்காணிப்புக்குழுக்கள், 9 வீடியோ நிலையான கண்காணிப்பு குழுக்கள், வேட்பாளர்களால் தேர்தலுக்காக செலவிடப்படும் தொகையினை கண்காணித்திட 9 செலவு கண்காணிப்பு குழு, 9 வீடியோ கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.மேலும் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பான புகார்களை 1800 599 5669 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் தெரிவிக்கலாம். மேலும் புகார்களை 6384001585 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிற்கும் புகார்களை தெரிவிக்கலாம். புகார்கள் அனைத்திற்கும் 24 மணி நேரத்திற்குள் தீர்வுகள் மேற்கொள்ளப்படும்.
மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் மற்றும் நீக்கம் தொடர்பான விபரங்களை பொதுமக்கள் பெற ஏதுவாக மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் வண்ணம் வாக்காளர் மாவட்ட தொடர்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், கட்டணமில்லா தொலைபேசி எண் 1950 ஆகும். எனவே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் மற்றும் நீக்கம் தொடர்பாக விபரங்களை 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது. மேலும் பொதுமக்கள் தேர்தல் நடத்தை விதி மீறல்கள் தொடர்பான புகார்களை ஊ- ஏபைடை என்ற மொபைல் செயலி மூலமாகவும் தெரிவிக்கலாம். இதில் வரப்பெறும் புகார்களுக்கு 100 நிமிடத்தில் உரிய விசாரணைக்கு பிறகு தீர்வு காணப்படும்.
மாற்றுத்தினாளிகள் மற்றும் 85 வயது மேற்படோர்களுக்கு அஞ்சல் வழியில் வாக்களிக்க வசதி..
இந்திய ஆணையத்தால் பாராளுமன்ற தேர்தல், 2024 அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து. திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட 9 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிப்பதில் ஏற்படும் சிரமத்தினை தவிர்க்கும் பொருட்டு, அஞ்சல் வழியில் வாக்களித்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்நேர்வில், மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களின் விருப்பத்தினை பெற ஏதுவாக தங்களது இல்லங்களுக்கு வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் படிவம் 12D மற்றும் வாக்காளர் பட்டியலுடன் நேரில் வருகை தருவார்கள். அவ்வாறு தங்களது இல்லங்களுக்கு வருகை தரும் போது உரிய படிவத்தில் தங்களது விருப்பத்தினை படித்து பார்த்தும்/ படிக்க கேட்டும்.
மேலும், ஆதாரங்கள் ஏதும் கோரும் பட்சத்தில் அதன் நகலினை சமர்ப்பித்து, ஒப்பம் செய்து தங்களது ஒத்துழைப்பினை மாவட்ட நிர்வாகத்திற்கு நல்கிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.மேலும் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாகவோ திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தொகுதிக்குரிய மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திலோ அல்லது தங்களது பகுதிக்குட்பட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் (வட்டாட்சியர் அலுவலகம்) அலுவலகத்திற்கோ சென்று 25.03.2024 க்குள் படிவம் 12D-ஐ. இதற்காக பிரத்யேகமாக நியமனம் செய்யப்பட்டுள்ள அலுவலரிடம் உரிய ஒப்பம் செய்து சமர்ப்பித்து எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை, சுமூகமாகவும், நேர்மையாகவும் நடத்திட தக்க ஒத்துழைப்பு நல்கிடுமாறு மதிப்பிற்குரிய மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் மற்றும் 85 வயதிற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.