மேலும் அறிய

திருச்சி மாவட்டத்திற்கு வரும் 15ம் தேதி விடுமுறைங்க...!!!எதற்காக தெரியுங்களா?

தேரோட்டம் வரும் 15ம் தேதி நடைபெறுகிறது. அன்று காலை 10.31 மணிக்கு மேல்11.30 மணிக்குள் தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 16ம் தேதி வெள்ளி காமதேனு வாகனத்திலும் அம்மன் புறப்பாடாகிறார்.

திருச்சி மாவட்டத்திற்கு வரும் 15ம் தேதி உள்ளூர் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதற்காக தெரியுங்கள?

திருச்சிராப்பள்ளி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டத்தில் அமைந்துள்ளது சமயபுரம் மாரியம்மன் கோயில். மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை எப்போதும் அதிகம்தான். தமிழகத்தில் உள்ள சக்தி தலங்களில் முதன்மையானதாக சமயபுரம் மாரியம்மன் கோயில் உள்ளது. திருச்சி காவிரி கரை ஓரமாக உள்ள இந்த கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

இந்த கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் அனைத்து நாட்களிலும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். தங்கள் குடும்பக்கவலை தீர, குழந்தைகள் படிப்பு, நல்ல வேலை என்று பல்வேறு குடும்பப்பிரச்னைகளை தீர்க்க வேண்டும் என்று வேண்டுதல்களுடன் வருகின்றனர்.

ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால் அப்போது இந்த  கோயிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை லட்சக்கணக்கில் இருக்கும்.  மேலும் குழந்தைகளின் உடல் நலன், குழந்தை வரம் வேண்டி வரும் பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறினால் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்துவது வழக்கம். மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோயிலில் ஆண்டுதோறுதி சித்திரை தேர் திருவிழா நடப்பது வழக்கம். அதேபோல் இந்தாண்டும் கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. இதில் வரும் 14ம் தேதி அம்மன் வெள்ளிக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி வையாளி கண்டருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 15ம் தேதி நடைபெறுகிறது. அன்று காலை 10.31 மணிக்கு மேல்11.30 மணிக்குள் தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 16ம் தேதி வெள்ளி காமதேனு வாகனத்திலும், 17ம் தேதி முத்துப்பல்லக்கிலும் அம்மன் புறப்பாடாகிறார். 18ம் தேதி மாலை அம்மனுக்கு அபிஷேகமும், இரவு 7 மணிக்கு வசந்தமண்டபத்தில் தெப்ப உற்சவ தீபாராதனையும் நடைபெறுகிறது. தேரோட்டம் முடிந்து எட்டாம் நாளான 22ம் தேதி இரவு அம்மன் தங்கக்கமல வாகனத்தில் புறப்படுகிறார்.

இந்நிலையில் சித்திரை தேர் திருவிழா நடைபெறும் 15ம் தேதி செவ்வாய்கிழமை அன்று உள்ளூர் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாளை ஈடு செய்யும் வகையில் மே மாதம் 3ம் தேதி சனிக்கிழமை அன்று அரசு வேலை நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட கலெக்டர் திரு மா. பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

வாடகை பாக்கி வைத்திருந்த கடைகள்... அதிரடியாக பூட்டி சீல் வைத்த திருச்சி மாநகராட்சி
வாடகை பாக்கி வைத்திருந்த கடைகள்... அதிரடியாக பூட்டி சீல் வைத்த திருச்சி மாநகராட்சி
சென்னையிலிருந்து திருச்சிக்கு இனி 3 மணி நேரம்தான்...! இனி டோல்கேட்டில் நிற்கத் தேவையில்லை...
சென்னையிலிருந்து திருச்சிக்கு இனி 3 மணி நேரம்தான்...! இனி டோல்கேட்டில் நிற்கத் தேவையில்லை...
Trichy power cut: திருச்சியில் நாளை (01-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட பட்டியல்
Trichy power cut: திருச்சியில் நாளை (01-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட பட்டியல்
திருச்சி அரசு மருத்துவமனையில் எலி கடித்த சம்பவம்... தூய்மைப்பணிகளை தீவிரப்படுத்திய நிர்வாகம்
திருச்சி அரசு மருத்துவமனையில் எலி கடித்த சம்பவம்... தூய்மைப்பணிகளை தீவிரப்படுத்திய நிர்வாகம்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
Royal Enfield Shotgun 650: 3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
Galaxy F70 Pro 5G Price: ஆகஸ்ட் 3-ல் வெளியாகும் கேலக்ஸி F70 ப்ரோ 5G; விலை, அம்சங்கள் என்ன தெரியுமா.? சாம்சங் முக்கிய தகவல்
ஆகஸ்ட் 3-ல் வெளியாகும் கேலக்ஸி F70 ப்ரோ 5G; விலை, அம்சங்கள் என்ன தெரியுமா.? சாம்சங் முக்கிய தகவல்
Trump on Iran: ஈரானை அழிக்க மாபெரும் பிளான்.! அமெரிக்க ராணுவத்திற்கு என்ன உத்தரவிட்டுள்ளார் ட்ரம்ப்.? பரபரப்பு தகவல்
ஈரானை அழிக்க மாபெரும் பிளான்.! அமெரிக்க ராணுவத்திற்கு என்ன உத்தரவிட்டுள்ளார் ட்ரம்ப்.? பரபரப்பு தகவல்
Embed widget