மேலும் அறிய

குழந்தை வரம் தரும் கொடுமுடி மகுடேஸ்வரர் கோயில்: வேண்டுதல் நிறைவேறும் அதிசயம்!

கொடுமுடி கோயிலில் பிரம்மதேவரின் அடையாளமாக வன்னி மரம் அமைந்துள்ளது. இந்த வன்னிமரத்தின் வயதை கணக்கிட முடியவில்லை. பழமையான இந்த மரத்தில் பூ பூக்கும். ஆனால் காய் காய்க்காது.

தஞ்சாவூர்: குழந்தை வரம் வேண்டி கொங்கு நாட்டில் உள்ள கொடுமுடிக்கு வரும் பக்தர்களின் இன்னல்களை நீக்கி அருள்பாலிக்கிறார் கொடுமுடிநாதர் என்று அழைக்கப்படும் மகுடேஸ்வர சுவாமி. வேண்டுவன நிறைவேறுவதால் இத்தலத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையோ தினம் தினம் அதிகரிக்கிறது.

பெயர் காரணம் இதுதான்

பார்ப்போமா... கொடுமுடி சிவன் கோயிலின் வரலாற்றை... கொங்கு நாட்டில் உள்ள 7 சிவதலங்களில் கொடுமுடியும் ஒன்று. கொடு என்றால் மலை. முடி என்றால் சிகரம். மலை சிகரமே மூலஸ்தானமாக உள்ளது. இதனால்தான் மூலவர் கொடுமுடிநாதர் என்று அழைக்கப்படுகிறார். இங்கு பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றி புன்னகைக்க வைக்கும் இறைவனுக்கு மகுடேஸ்வரர், கொளுந்தீஸ்வரர் என்ற பெயர்களும் உண்டு. அம்பாள் சவுந்தர நாயகி, வடிவுடைய நாயகி.

காவிரி நதியில் மேல்கரையில் அமைந்துள்ள கோயில்

இந்த கோயில் காவிரி நதியின் மேல்கரையில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. சுவாமி, அம்மன், பெருமாள் சன்னிதிகளுக்குரிய மூன்று கோபுரங்கள் உள்ளன. கோயிலின் உட்புறம் வடக்கில் சுவாமி சன்னதி, தெற்கில் அம்மன் சன்னதி, தென்மேற்கு மூலையில் அனுமன் சன்னதி, வன்னி மரம், பிரம்மாவின் சன்னதி அமைந்துள்ளன. மேலும் மற்ற பரிவார சன்னதிகளும் இக்கோயிலில் அமைந்துள்ளன.

பெருமாள் கோயிலின் உள்ளே இருபுறமும் பன்னிரு ஆழ்வார்கள், பரமபதநாதர் வெங்கடாஜலபதி, கருடன் அருள்பாலிக்கின்றனர்.  நடுவில் மூலவர் வீரநாராயணப் பெருமாள் பள்ளி கொண்ட கோலத்தில் காட்சி தருகிறார். கோயிலுக்கு எதிரில் காவிரிக்கரையில் சக்தி விநாயகர் அமர்ந்துள்ளார். இவரை தரிசித்த பின்னரே கோயிலுக்குள் செல்ல வேண்டும். 

தல வரலாறு பற்றி தெரியுங்களா?

ஆதிசேஷனுக்கும், வாயு பகவானுக்கும் தங்களில் யார் வலிமை மிக்கவர் என்ற போட்டி எழ... தங்களை நிரூபிக்க ஆதிசேஷன் மேரு மலையை கெட்டியாக பிடித்துக் கொள்வது. அதை வாயு பகவான் தனது வேகத்தால் பெயர்க்க வேண்டும் என்ற போட்டி உருவானது. இதில் யார் வெற்றி பெறுகிறாரோ அவரே வலிமை வாய்ந்தவர் என்று முடிவுக்கு வந்தனர். இதன்படியே இருவரும் செயல்பட இதில் மேரு மலை சிதறி ஐந்து துண்டுகளாக பூமியில் விழுந்தன.

அவை ஒவ்வொன்றும் ரத்தினமாக மாறி லிங்கங்களாக ஆனது. இவற்றில் வைரக்கல் கொடுமுடியில் விழுந்தது. இதனால் வைரக்கல்லால் ஆன லிங்கமாக இறைவன் குடியிருப்பதாக ஐதீகம். சிவப்புக் கல் திருவண்ணாமலையிலும், மரகதக் கல் ஈங்கோய் மலையிலும், நீலக்கல் பொதிகையிலும், மாணிக்கம் வாட்போக்கி (அய்யர் மலை)யிலும் விழுந்தன என்பது புராண வரலாறு.

பார்வதி, பரமேஸ்வரன் திருமணத்தின் போது ரிஷிகள் அனைவரும் ஒரே இடத்தில் கூட வடதிசை தாழ்ந்து, தென்திசை உயர உலகை சமநிலைப்படுத்த இறைவன் அகத்தியரை அழைக்க... அவரோ... நான் மட்டும் உங்கள் திருமண காட்சியை பார்க்க முடியாமல் போகுமே என்று வருத்தப்பட்டார். அப்போது இறைவன் எனது திருமணக் காட்சியை கொடுமுடியில் உனக்கு காட்டி அருள்வேன் என்று அருள்பாலிக்க... அதன்படி கொடுமுடியில் இறைவனின் திருமணக்காட்சியை அகத்தியர் கண்டுகளித்தார்.

இறைவன் மகுடேஸ்வரரின் திருமணக்காட்சியை தரிசிக்க பிரம்மா, திருமால் ஆகியோர் கொடுமுடியில் எழுந்தருளி அமர்ந்தனர். அதனாலேயே சுவாமி, திருமால், அம்மையார் ஆகிய மூவருக்கும் தனித்தனியே மூன்று கோபுரங்கள் அமைந்தது தனிச்சிறப்பு. சைவ, வைணவ சமநோக்கு நிலையில் வழிபடும் கோயில். மூர்த்திகள் புறப்பட்டு உலா வரும் போது சிவனும், திருமாலும் சேர்ந்து காட்சி தருவது கண்கொள்ளாக் காட்சியாகும்.

பிரம்மதேவரின் அடையாளமாக வன்னி மரம் அமைந்துள்ளது. இந்த வன்னிமரத்தின் வயதை கணக்கிட முடியவில்லை. பழமையான இந்த மரத்தில் பூ பூக்கும். ஆனால் காய் காய்க்காது. ஒரு பக்கம் முள் இருக்கும். மற்றொரு பக்கம் முள் இருக்காது.

அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய தலம் இந்த கொடுமுடி மகுடேஸ்வரர் கோயில் ஆகும். இந்த நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இக்கோயிலுக்கு வந்து மகுடேஸ்வரரையும், சனி பகவானையும் வணங்கி வழிபட்டு செல்கின்றனர். அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் தங்கள் பிறந்த நட்சத்திரத்தன்று இந்த கோயிலுக்கு வந்து காவிரியில் நீராடி, மகுடேஸ்வரருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். பின்னர் அம்பாளை வணங்கி அர்ச்சனை செய்து கொள்ள வேண்டும்.

கொடுமுடி கோவிலில் சனீஸ்வரர் ஒரு கையில் பாம்பும், ஒரு கையில் சூலாயுதமும் பிடித்தபடி காக வாகனத்தில் மேற்கு பார்த்த சன்னிதியில் வீற்றிருக்கிறார். இங்கு சனி தோஷம் உள்ளவர்கள் விளக்கு ஏற்றி வழிபட வேண்டும். பிதுர் தர்ப்பணம் செய்யலாம். அறுபதாம் கல்யாணம், ஆயுள் ஹோமமும் நடத்தப்படுகிறது. ஆதிசேஷனால் உருவான தலம் என்பதால் ராகு, கேது தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலத்தில் பரிகாரங்கள் செய்து திருமணத்தடை நீங்கப்பெறுகிறார்கள். குழந்தை பாக்கியம் அடைகிறார்கள்.

நவக்கிரக பூஜை செய்வது நல்ல பலனை தரும். வேப்பமரமும், அரச மரமும் இணைந்துள்ள மரத்தடியில் உள்ள நவநாயகருக்கு காவிரியில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து ஊற்றினால் திருமணமாகும். குழந்தை வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. முன்னோர்கள் சாப விமோசனம், திருமணத்தடை நீங்க, திதிகள் கொடுத்தல், சனீஸ்வர தோஷ நிவர்த்தி பரிகாரம், கடன் தொல்லை நீங்க பரிகாரம், குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு பரிகார பூஜைகள் செய்யப்படுகிறது.

வேண்டுவன நிறைவேறுவதால் இத்தலத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை தினமும் உயர்ந்தபடியே உள்ளது.

தலைப்பு செய்திகள்

தமிழகத்துக்கே முன்மாதிரி... திருடர்களுக்கு ‘செக்’:  ரூ.40 லட்சம் சொந்த நிதியில் 200 சிசிடிவி கேமராக்கள் பொறுத்திய மக்கள்
தமிழகத்துக்கே முன்மாதிரி... திருடர்களுக்கு ‘செக்’:  ரூ.40 லட்சம் சொந்த நிதியில் 200 சிசிடிவி கேமராக்கள் பொறுத்திய மக்கள்
திருச்சி விமான நிலையத்தில் ரூ. 9.21 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் துரிதம்
திருச்சி விமான நிலையத்தில் ரூ. 9.21 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் துரிதம்
3,575 சதுர மீட்டர்...10 ஆயிரம் மரக்கன்றுகள் திருச்சியில் உருவாகிறது அடர்ந்த ‘மியாவாக்கி’ குறுங்காடு!
3,575 சதுர மீட்டர்...10 ஆயிரம் மரக்கன்றுகள் திருச்சியில் உருவாகிறது அடர்ந்த ‘மியாவாக்கி’ குறுங்காடு!
மத ஒற்றுமையை வெளிப்படுத்திய பிரார்த்தனை: மழை வேண்டி கண்ணீர் மல்க சிறப்புத் தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள்
மத ஒற்றுமையை வெளிப்படுத்திய பிரார்த்தனை: மழை வேண்டி கண்ணீர் மல்க சிறப்புத் தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Embed widget