மேலும் அறிய

கலைஞர் மகளிர் உரிமை தொகை விண்ணப்பப் பதிவு ; பெரம்பலூரில் இன்று முதல் சிறப்பு முகாம் - முழு விவரம்

பெரம்பலூர் மாவட்டத்தில், கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்ப பதிவிற்கான இன்று முதற்கட்ட சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் தகுதியான குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000, பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான வருகிற செப்டம்பர் மாதம் 15-ந்தேதி முதல் தமிழக அரசு வழங்கவுள்ளது. இத்திட்டத்திற்காக முதற்கட்டமாக பெரம்பலூர் மாவட்டத்தில் 126 ரேஷன் கடைகளுக்கு உட்பட்ட குடும்ப தலைவிகளுக்கு அவர்களின் ரேஷன் அட்டையை பதிவு செய்துள்ள ரேஷன் கடை பணியாளர் மூலம் வீடு வீடாக விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை திரும்பப் பெற்று பதிவு செய்வதற்கான முதற்கட்ட சிறப்பு முகாம்கள் அந்தந்த ரேஷன் கடைகள் அமைந்துள்ள பகுதிகளின் அருகே இன்று  முதல் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 4-ந்தேதி வரை நடைபெறுகிறது. அதன் விவரம் வருமாறு.. பெரம்பலூர் மாவட்டத்தில் முதற் கட்டமாக பெரம்பலூர் வருவாய் வட்டத்தில் வேலூர், மேலப்புலியூர் (கிழக்கு, மேற்கு), லாடபுரம் (கிழக்கு), அம்மாபாளையம், பொம்மனப்பாடி, சத்திரமனை, களரம்பட்டி ஆகிய வருவாய் கிராமங்களிலும், வேப்பந்தட்டை வருவாய் வட்டத்தில் மலையாளப்பட்டி, உடும்பியம், தொண்டமாந்துறை (மேற்கு, கிழக்கு), வேப்பந்தட்டை (வடக்கு, தெற்கு), வெங்கனூர், வெண்பாவூர், தழுதாழை, வெங்கலம் (மேற்கு, கிழக்கு) ஆகிய வருவாய் கிராமங்களிலும் ரேஷன் கடைகள் அமைந்துள்ள பகுதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது.

கலைஞர் மகளிர் உரிமை தொகை விண்ணப்பப் பதிவு ; பெரம்பலூரில் இன்று முதல் சிறப்பு முகாம்  - முழு விவரம்

இதேபோல் குன்னம் வருவாய் வட்டத்தில் புதுவேட்டக்குடி, ஓலைப்பாடி (கிழக்கு, மேற்கு), துங்கபுரம் (வடக்கு, தெற்கு), வடக்கலூர், பரவாய் (கிழக்கு, மேற்கு), வசிஷ்டபுரம், ஒகளூர் (மேற்கு, கிழக்கு), கிழுமத்தூர் (தெற்கு, வடக்கு), பெரியம்மாபாளையம், அத்தியூர் (வடக்கு, தெற்கு), திருமாந்துறை, வயலப்பாடி, பெரியவெண்மணி (மேற்கு, கிழக்கு), குன்னம், கீழப்பெரம்பலூர், சு.ஆடுதுறை, வரகூர், அகரம்சீகூர், கொளப்பாடி, காடூர் (தெற்கு, வடக்கு), பெண்ணக்கோணம் (தெற்கு) ஆகிய வருவாய் கிராமங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது. ஆலத்தூர் வருவாய் வட்டத்தில் செட்டிகுளம், நாட்டார்மங்கலம், நாரணமங்கலம், மாவிலங்கை, இரூர், புதுஅம்மாபாளையம், பாடாலூர் (கிழக்கு, மேற்கு), சிறுவயலூர், து.களத்தூர், கண்ணப்பாடி, தேனூர், நக்கசேலம், எலந்தலப்பட்டி ஆகிய வருவாய் கிராமங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது.

மேலும், குரும்பலூர் பேரூராட்சி பகுதியில் குரும்பலூர் (வடக்கு, தெற்கு) ஆகிய வருவாய் கிராமங்களுக்கும், பூலாம்பாடி பேரூராட்சி பகுதியில் பூலாம்பாடி (மேற்கு, கிழக்கு) ஆகிய வருவாய் கிராமங்களிலும், அரும்பாவூர் பேரூராட்சி பகுதியில் அரும்பாவூர் வருவாய் கிராமத்திற்கும், லெப்பைக்குடிக்காடு பேரூராட்சி பகுதியில் பெண்ணக்கோணம் (வடக்கு) வருவாய் கிராமங்களிலும் ரேஷன் கடைகள் அமைந்துள்ள பகுதிகளில் முதற் கட்டமாக விண்ணப்பப் பதிவு செய்ய சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. ஆகையால்  சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ள இடங்களுக்கு சென்று மக்கள் பயன்பெற வேண்டுமென  பெரம்பலூர்  கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget