JBLSeason 2 : திருச்சியில் கோலாகலமாக தொடங்கியது ஜூனியர் பேட்மிட்டன் போட்டி!
திருச்சியில் 4 நாட்கள் நடைபெறும் மாபெரும் ஜூனியர் பேட்மிட்டன் சீசன் 2, போட்டியை இந்தியா பேட்மிட்டன் சங்கத்தின் சங்கத்தின் துணைத் தலைவர் அன்புமணி ராமதாஸ் தொடங்கி வைத்தார்.
திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் உள்ள உள் விளையாட்டு அரங்கில் ஜூனியர் பேட்மிட்டன் சீசன் 2 போட்டிகளை இந்தியா பேட்மிட்டன் சங்கத்தின் சங்கத்தின் துணைத் தலைவரும், தமிழ்நாட்டின் பேட்மிட்டன் தலைவர் அன்புமணி ராமதாஸ் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் செயலாளரும் தமிழ்நாடு பேட்மிண்டன் சங்கத்தின் செயலாளர் அருணாச்சலம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மேலும் கோலாகலமாக தொடங்கிய போட்டியில் 8 அணிகள் , 88 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். 8 அணிகளை A மற்றும் B என 2 பிரிவுகளாக பிரித்து போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. A பிரிவில் திருவாரூர் டெல்டா கிங்ஸ், சென்னை சிட்டி கேங்டேர்ஸ், விருதை வேங்கை, தஞ்சை தலைவாஸ் அணிகளும் B பிரிவில் திருச்சி தமிழ்வீராஸ், கோவை சூப்பர் கிங்ஸ், ரைன்போ ராக்கர்ஸ், மதுரை இண்டீயன்ஸ் அணிகளும், மோதிகொள்ள உள்ளது. மேலும் இந்த போட்டி தினம்தோறும் காலை, மாலை என போட்டிகள் தொடர்ந்து நடைபெற உள்ளது. குறிப்பாக போட்டியானது 17,19 வயதுக்கு உட்பட்ட பெண்கள், ஆண்கள் இரு பிரிவினரும் இணைந்து விளையாடும் போட்டிகள் நடைபெறுகிறது. குறிப்பாக நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் 17 வயதிற்க்கு உட்பட்டோர்கான ஒற்றைபிரிவுகான 2 ஆட்டத்தில் சென்னை சிட்டி கேங்டேர்ஸ் அணியும் , விருதை வேங்கை அணியும் மோதியது. தொடக்கம் முதல் விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் இரு அணிகளும் தல ஒரு போட்டியில் வெற்றி பெற்றது.
இதனை தொடர்ந்து நடைபெற்ற 17 வயதிற்க்கு உட்பட்டோர்கான இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் 1-0 என்ற புள்ளி கணக்கில் சென்னை சிட்டி கேங்டேர்ஸ் அணி வென்றது. அதேபோல் 19 வயதிற்க்கு உட்பட்டோர்கான ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இரு அணிகளும் சமன் செய்தது. மேலும் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் சென்னை சிட்டி கேங்டேர்ஸ் அணியை வீழ்த்தி விருதை வேங்கை அணி வெற்றிபெற்றது. இதேபோல் நடை பெற்ற ஆட்டத்தில் சென்னை சிட்டிகேங்டேர்ஸ் அணியும் , திருவாரூர் டெல்டா கிங்ஸ் அணியும் மோதியது. இதில் 17 வயதிற்க்கு உட்பட்டோர்கான ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் 0-1, இரட்டையர் பிரிவில் 0-2 என்ற புள்ளி கணக்கில் சென்னை சிட்டி கேங்டேர்ஸ் வெற்றி பெற்றது. இதேபோல் 19 வயதிற்க்கு உட்பட்டோர்கான ஒற்றையர் பிரிவுகான 2 ஆட்டத்தில் ஒரு போட்டியில் சென்னையும், மற்றொரு ஆட்டத்தில் திருவாரூர் அணியும் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து நடைபெற்ற இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் 2-0 என்ற புள்ளி கணக்கில் திருவாரூர் அணி வெற்றி பெற்றது.
குரூப் B அணி :
முதல் போட்டியில் திருச்சி தலைவாஸ் அணையும், மதுரை இன்டீயன்ஸ் அணியும் மோதியது. இதில் 17 வயத்திற்கான ஒற்றையர் பிரிவில் 0-1 என்ற புள்ளி கணக்கில் மதுரை அணி வெற்றி பெற்றது. இரட்டையர் பிரிவில் இரு அணிகளும் சமன் செய்தது. 19 வயத்திற்கான ஒற்றையர் பிரிவுகான 2 போடியில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றது. இதேபோல் இரட்டையர் பிரிவில் 2-0 என்ற புள்ளி கணக்கில் திருச்சி தலைவாஸ் அணி வெற்றி பெற்றது. மேலும் வரும் 15ஆம் தேதி மாலை போட்டியின் நிறைவு விழாவில் நடிகர் மற்றும் இசை அமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் கலந்து கொண்டு பரிசுகளை வழங்க உள்ளார். இதில் வெற்றி பெறும் அணிகளின் வீரர்,வீராங்கனைகளுக்கு, ரூபாய் 70 லட்சம் பணமதிப்புள்ள பரிசுகளை வழங்கபட உள்ளது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்