மேலும் அறிய

ஜெய் ஸ்ரீ ராம் முழக்கம், ராமருக்கும் கிரிக்கெட்டிற்கும் என்ன தொடர்பு? - சீமான் கேள்வி

மகளிர் உரிமைத் தொகை குறித்து தொடர்ந்து பேசும் திமுக ? மகளிர் நலனுக்காக செய்தது என்ன - நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி

திருச்சி விமான நிலையத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு மதிமுக - நாம் தமிழர் கட்சி தொண்டர்கள்  இடையே எழுந்த மோதல் வழக்கில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜராகினார். இந்த வழக்கு தொடர்பாக இவர் மீண்டும் 3ம் தேதி ஆஜராக உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சீமான் பேசியது..  திருச்செங்கோட்டில் மருத்துவர் குழந்தை  விற்ற  சம்பவம் தமிழகத்தை வெட்கி தலை குனிய வைத்துள்ளது. மருத்துவர்கள் மீது எப்போதும் மதிப்பு மரியாதை உண்டு. ஆனாலும் மருத்துவ தர கட்டுப்பாட்டு மீது எனக்கு விமர்சனம் உள்ளது. தண்ணீர், கல்வி, உயிர் காக்கும் மருத்துவம் உள்ளிட்ட அனைத்தும் விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில் குழந்தை விற்பனை வரை வந்துவிட்டது.  இது முற்றிலும் தவறான செயல் கண்டிக்கத்தக்கது. பாஜக, காங்கிரஸ்  கட்சிகள் காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் இரட்டை வேடம் போடுகிறது. இந்தியா தனது உரிமையை இழந்து வெகு நாளாகிவிட்டது. ராகுல் காந்தி இந்தியாவின் பிரதமர் ஆகலாம், ஆனால் ஏதோ ஒரு மாநிலத்திற்கு முதல்வராக முடியுமா தமிழகத்தில் போட்டித் தேர்வு எழுதும் தேர்வர்களுக்கு ஆடை, சிகை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. ஆனால் வட மாநிலத்தவருக்கு அது போன்ற கட்டுப்பாடு விதிக்கப்படவில்லை. தேர்வில் பல்வேறு முறைகளில் ஈடுபட்டு தேர்வு பெறுவதால் எவ்வாறு தரமான மருத்துவர்களை உருவாக்க முடியும்? அந்தந்த மாநில மக்களுக்கு அந்தந்த மாநில தேர்வில், பதவிகளில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

ஜெய் ஸ்ரீ ராம் முழக்கம், ராமருக்கும் கிரிக்கெட்டிற்கும் என்ன தொடர்பு? - சீமான் கேள்வி

இந்தியா பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற போது ஜெய் ஸ்ரீ ராம் முழக்கம் எழுப்பப்பட்டது. ராமருக்கும் கிரிக்கெட்டிற்கும் என்ன தொடர்பு? இந்தியாவின் விடுதலைக்கு கிறிஸ்தவர்களும், முஸ்லீம்களும் போராடினர். ஆனால் ஆர் எஸ் எஸ் விடுதலைக்காக போராடவில்லை. 400 ஆண்டு காலம் நம்மை அடிமைப்படுத்தி ஆண்ட  ஆங்கிலேயர்கள் பாஜகவினருக்கு நண்பர்களாக உள்ளனர். ஆனால் நாட்டின் விடுதலைக்காக போராடிய முஸ்லிம்களை எதிரிகளாக பார்க்கின்றனர். மகளிர் உரிமை குறித்து  பேசும் திமுக மகளிர் நலனுக்காக என்ன செய்திருக்கிறது? நாம் தமிழர் கட்சியில் பெண்களுக்கு MLA, MP தேர்தல்களில் போட்டியிட சரி பாதி உரிமை கொடுத்துள்ளது. இது போன்ற திமுக செய்துள்ளதா? என கேள்வி எழுப்பினர். பெண்கள் ஓட்டு வங்கியை கருத்தில் கொண்டே இவ்வளவு காலம் நடத்தாத மகளிர்  மாநாட்டை திமுக நடத்துகிறது என குற்றம் சாட்டினர்.

ஜெய் ஸ்ரீ ராம் முழக்கம், ராமருக்கும் கிரிக்கெட்டிற்கும் என்ன தொடர்பு? - சீமான் கேள்வி

தமிழகத்தில் இலவசம் என்ற சொல்லே ஒழிக்கப்பட வேண்டும். வறுமை நிலை இல்லாது தமிழக மக்களின் வாழ்க்கைத் தரம் உயர வேண்டும். திரைத்துறை மொத்தமாக சிதைந்து போய்விட்டது ஒருத்தர் இரண்டு பேரும் கட்டுப்பாட்டில் ஒட்டு மொத்த திரையரங்கு உள்ளது. அதனால் முன்பு போல் 50 நாட்கள் 100 நாட்கள் எந்த ஊர் படமும் ஓடாது குறுகிய நாட்களில் அதிக காட்சிகளை திரையிட்டு தான் வருமானத்தை ஈட்ட முடியும்.. சிறப்பு காட்சியை தடுப்பதால் என்ன பலன் கிடைக்கப் போகிறது விஜய் படத்தை ஒரு வெளியிட்ட நிறுவனத்திற்கு வழங்கப்படாதால் பல்வேறு நெருக்கடிகள் கொடுக்கப்படுகிறது. காவல்துறை பணியில் இருப்பவர்கள் பாலியல் போன்ற குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் வேறு இடத்திற்கு மாற்றுகிறார்கள் தவிர அவர்களுக்கு தண்டனை வழங்கப்படவில்லை பின்பு எப்படி குற்ற சம்பவங்கள் குறையும் அதே தவறு மற்றொரு இடத்தில் தொடரும். இதைக் காவலர்களின் குற்றமாக பார்க்கவில்லை சமூகத்தின் குற்றமாக பார்க்கிறேன் என்றார்.

மீனவர்கள் தொடர்ந்து கைது படுவதில் இந்த தமிழக அரசு எந்த ஒரு  நடவடிக்கையும் எடுக்காது நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு மீனவர்கள் கூட கைது செய்யப்பட மாட்டார்கள் அப்படி கைது செய்யப்பட்டால் நான் கையெழுத்து இட்டுவிட்டு பதவியை ராஜினாமா செய்து விட்டு வெளியேறுகிறேன்.. மற்ற மாநிலங்களில் மீனவர்கள் கைது செய்யப்படுவதில்லை ஆனால் தமிழக மீனவர்கள் மற்றும் கைது செய்யப்படுகிறார்கள். அண்ணாமலையின் நடைப்பயணம் தற்பொழுது எதை நோக்கி செல்கிறது என்று தெரியவில்லை... நடையோ நட என்று நடக்கிறார் அதில் எவ்வித பிரயோஜனமும் இல்லை.. விகிதாச்சார அடிப்படையில் பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்றார்.

தலைப்பு செய்திகள்

மண்ணச்சநல்லூர் அருகே குரங்குகள் அட்டகாசம்: ஊரை விட்டே வெளியேற கிராம மக்கள் முடிவு
மண்ணச்சநல்லூர் அருகே குரங்குகள் அட்டகாசம்: ஊரை விட்டே வெளியேற கிராம மக்கள் முடிவு
திருச்சியில் இன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்... உடனே புறப்படுங்க நண்பர்களே
திருச்சியில் இன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்... உடனே புறப்படுங்க நண்பர்களே
"முதல்வர் விஜய் எங்கள் வயிற்றில் அடித்துள்ளார்" - பால் உற்பத்தியாளர்கள் கொந்தளிப்பு; ஆவின் பால் நிறுத்தம்?
GST Highway Smart Lighting: தாம்பரம்–திண்டிவனம் சாலையில் புதிய மாற்றம்! இரவு பயணிகளுக்கு வரப்போகும் ஸ்மார்ட் வசதி! IOT அதிசயம்!
தாம்பரம்–திண்டிவனம் சாலையில் புதிய மாற்றம்! இரவு பயணிகளுக்கு வரப்போகும் ஸ்மார்ட் வசதி! IOT அதிசயம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly: முன்கூட்டியே தகவல் சொன்ன கருப்பு ஆடு.. சபாநாயகரிடம் தொக்காக மாட்டிய சேகர்பாபு.. விளாசிய ரமேஷ்
TN Assembly: முன்கூட்டியே தகவல் சொன்ன கருப்பு ஆடு.. சபாநாயகரிடம் தொக்காக மாட்டிய சேகர்பாபு.. விளாசிய ரமேஷ்
TN Rain Alert: தமிழ்நாட்டில் மழை தொடரும்.. சென்னையில் என்ன நிலவரம்? - வானிலை அறிவிப்பு இதோ!
TN Rain Alert: தமிழ்நாட்டில் மழை தொடரும்.. சென்னையில் என்ன நிலவரம்? - வானிலை அறிவிப்பு இதோ!
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Embed widget