மேலும் அறிய

செந்தில் பாலாஜி வீட்டில் 150 கிலோ தங்கம் பிடிப்பட்டதா..? - ஹெச். ராஜா கூறுவது என்ன..?

தமிழகத்தில் கள்ளச்சாராயத்தால் 22 பேர் உயிரிழந்த போது அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி விலக சொல்லாதவர்கள். எதிர்பாராமல் நடந்த ரயில் விபத்துக்காக பிரதமரை மட்டும் பதவி விலக சொல்வது ஏன் ? - ஹெச்.ராஜா கேள்வி

திருச்சி மாநகர் நீதிமன்றம் அருகே உள்ள மாவட்ட பாஜக அலுவலகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் 9 ஆண்டு சாதனைகள் குறித்த நிகழ்வில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா கலந்துகொண்டார். பின்னர்  செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், “நீண்ட நாட்களாக செய்யாமல் இருக்கும் பிரச்சினைக்கு தீர்வு கண்டால் அது தான் நல்ல அரசாக இருக்கும். அந்த வகையில் பாரதிய ஜனதா கட்சி தீர்க்க முடியாமல் பல ஆண்டுகளாக இருந்த பல பிரச்சினைகளை தீர்த்து வைத்தது. மேலும்  பாஜக, ஆர்டிக்கல் 370 அத்துடன் 35A வை ரத்து செய்தது. குறிப்பாக ராமர் கோவில் பிரச்சினையை மிக சுலபமாக தீர்த்தது. இந்தியாவிலேயே ஒரு மிக பெரிய சிக்கலான விஷயத்தை சரி செய்தது பா.ஜ.க மட்டும் தான். அயோத்தி ராமர் கோவில் விவகாரத்தில் பாரதிய ஜனதா கட்சி என்ன செய்யப் போகிறது என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் மிக சுலபாக இந்த பிரச்சினைக்கு தீர்வு கொண்டு வந்தது” என்றார்.  மேலும், “அனைவருக்கும் வீடு திட்டத்தில் 3 கோடி பேருக்கு வீடு கட்டி கொடுத்துளளோம். ரூபாய் 11 கோடி 72 லட்சம் மக்களுக்கு கழிப்பறை வசதி ஏற்படுத்தி கொடுத்துள்ளோம். ரூபாய் 1 லட்சம் கோடி வேளாண்மை துறையில் முதலீடு செய்துள்ளோம், விளிம்பு நிலை விவசாயிகளுக்கு எண்ணற்ற நல்ல திட்டங்களை கொடுத்துள்ளோம். குறிப்பாக  20 லட்சம் கோடி கடன் விவசாயிகளுக்கு கடன் கொடுக்கப்பட்டுள்ளது.  நாடு முழுவதும் ரூபாய் 1.33 லட்சம் கோடி பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜி வீட்டில் 150 கிலோ தங்கம் பிடிப்பட்டதா..? - ஹெச். ராஜா கூறுவது என்ன..?

சீனாக்காரன் உற்பத்தி செய்ததில் மிக பெரிய பிரச்னை இந்த கொரோனோ. 250 ஆண்டுகள் நம்மை ஆண்ட பிரிட்டீசிடம் கூட பாராசிட்டமால் இல்லை. ஆனால் நாம் கொடுத்து உதவினோம்” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய ஹெச். ராஜா, “என்.ஐ.ஏ சரியான ஆதாரங்கள் இல்லாமல் சோதனை அல்லது கைது நடவடிக்கை எடுப்பதில்லை. இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 6.1 ஆக உள்ளது. சீனா கூட நமக்கு பின்னர் தான் உள்ளது. 2017ல் இருந்து ஜி.எஸ்.டியை கொண்டு வந்தோம். பொதுமக்கள் நல்ல வரவேற்பை அளித்து வருகின்றனர். உண்மையில் ரயில் விபத்து மிகவும் கவலை அளிக்கும் விஷயம். ரயில் விபத்திற்கான காரணத்தை நாம் கண்டு பிடிப்போம். பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக சி.பி.ஐ  விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

செந்தில் பாலாஜி வீட்டில் 150 கிலோ தங்கம் பிடிப்பட்டதா..? - ஹெச். ராஜா கூறுவது என்ன..?

திருச்சியில் கே.என் நேருவிடம் கேள்வி கேட்டால் என்ன  சொல்கிறார் ? அரசு மற்றும் வேறு எந்த விஷயத்திற்கும் அவர் பதில் கூற மாட்டார். சாக்கடை அடைத்தால் சொல்லு பதில் சொல்கிறேன் என்கிறார். அதேபோல் செந்தில் பாலாஜியை பற்றி பேச எந்த அமைச்சருக்கும் அதிகாரம் கொடுக்கப்படவில்லை. அரசு மதுபான கடைகளில் 10 ரூபாய் பாட்டில் வாங்குவது ரெய்டுக்கு முன் கூட்டியே நடந்து வந்தது.  செந்தில் பாலாஜி வீட்டில் 150 கிலோ தங்கம் பிடிப்பட்டதாக கூறுகிறார்கள்” எனக் கூறினார். ஆனால், இதுதொடர்பான ஆதாரங்களை ஹெச்.ராஜாவிடம் கேட்டபோது அவர் அதை எதையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், பாராளுமன்ற தேர்தல் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், ஆடு - புலி கதை தான், எதிர் அணிகள் இந்தியாவில் ஒன்று சேர வாய்ப்பு இல்லை என்றார். மல்யுத்த வீரர்கள் போராட்டம் மதிக்கப்டவில்லை என்கிற குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, 6 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டு விசாரணை செய்தனர். இதில்  FIR போடப்பட்டு விசாரணை செய்த காவலர்கள் குற்றம் சாட்டியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டிய அவசியம் இல்லை என கூறிவிட்டனர். இந்த விவகாரத்தில் வேண்டும் என்றே  தவறாக பொய் செய்தியை பரப்பி வருகிறார்கள் என தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

பிரதமர் மோடி பதிலுரை: நேற்று பேசாமல் போனவர் இன்று என்ன பேசினார்? - இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்து பரபரப்பு பேச்சு
பிரதமர் மோடி பதிலுரை: நேற்று பேசாமல் போனவர் இன்று என்ன பேசினார்? - இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்து பரபரப்பு பேச்சு
பிரதமர் மோடி மீது தாக்குதல் நடத்த திட்டம்; காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் சதி? அதிர்ச்சி குற்றச்சாட்டை முன்வைத்த சபாநாயகர்!
பிரதமர் மோடி மீது தாக்குதல் நடத்த திட்டம்; காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் சதி? அதிர்ச்சி குற்றச்சாட்டை முன்வைத்த சபாநாயகர்!
’’வெட்கக்கேடு; இதனால்தான் பிரதமருக்கு பயம்- நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன?’’ ஜோதிமணி பரபரப்பு பதில்!
’’வெட்கக்கேடு; இதனால்தான் பிரதமருக்கு பயம்- நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன?’’ ஜோதிமணி பரபரப்பு பதில்!
’’சபாநாயகர் பின்னால் ஒளியும் பிரதமர் மோடி; முட்டாள்தனம், அப்பட்டமான பொய்’’- வெடித்த பிரியங்கா காந்தி
’’சபாநாயகர் பின்னால் ஒளியும் பிரதமர் மோடி; முட்டாள்தனம், அப்பட்டமான பொய்’’- வெடித்த பிரியங்கா காந்தி
ABP Premium

வீடியோ

Gold Price Drop Reason | மீண்டும் ஏறும் தங்கம் தலைகீழாய் மாற வாய்ப்பு பிப்ரவரியில் TWIST |Trump
US India | இந்தியா - அமெரிக்கா டீல்
Tirunelveli News | சமபந்தி விருந்தில் தீண்டாமை விரட்டப்பட்ட நரிக்குறவர் சிறுவர்கள் வெடித்த சர்ச்சை
US Trade Deal with India |
US Trade Deal with India | ட்ரம்ப் விரித்த வலை ரஷ்யா நட்பை முறிக்கும் இந்தியா? மோடி முடிவின் பின்னணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பிரதமர் மோடி பதிலுரை: நேற்று பேசாமல் போனவர் இன்று என்ன பேசினார்? - இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்து பரபரப்பு பேச்சு
பிரதமர் மோடி பதிலுரை: நேற்று பேசாமல் போனவர் இன்று என்ன பேசினார்? - இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்து பரபரப்பு பேச்சு
பிரதமர் மோடி மீது தாக்குதல் நடத்த திட்டம்; காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் சதி? அதிர்ச்சி குற்றச்சாட்டை முன்வைத்த சபாநாயகர்!
பிரதமர் மோடி மீது தாக்குதல் நடத்த திட்டம்; காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் சதி? அதிர்ச்சி குற்றச்சாட்டை முன்வைத்த சபாநாயகர்!
’’வெட்கக்கேடு; இதனால்தான் பிரதமருக்கு பயம்- நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன?’’ ஜோதிமணி பரபரப்பு பதில்!
’’வெட்கக்கேடு; இதனால்தான் பிரதமருக்கு பயம்- நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன?’’ ஜோதிமணி பரபரப்பு பதில்!
’’சபாநாயகர் பின்னால் ஒளியும் பிரதமர் மோடி; முட்டாள்தனம், அப்பட்டமான பொய்’’- வெடித்த பிரியங்கா காந்தி
’’சபாநாயகர் பின்னால் ஒளியும் பிரதமர் மோடி; முட்டாள்தனம், அப்பட்டமான பொய்’’- வெடித்த பிரியங்கா காந்தி
ADMK : ’அடுத்தடுத்து அறிவிப்புகளை வெளியிடும் அதிமுக’ தேர்தல் வியூகத்தில் EPS..!
’அடுத்தடுத்து அறிவிப்புகளை வெளியிடும் அதிமுக’ தேர்தல் வியூகத்தில் EPS..!
Tamil Nadu cabinet meeting: அடித்தது ஜாக்பாட்.! 55ஆயிரம் பேருக்கு வேலை... ரூ. 34 ஆயிரம் கோடியில் 15 தொழில் முதலீடுகள்- அமைச்சரவை ஒப்புதல்
அடித்தது ஜாக்பாட்.! 55 ஆயிரம் பேருக்கு வேலை... ரூ. 34 ஆயிரம் கோடியில் 15 தொழில் முதலீடுகள்- அமைச்சரவை ஒப்புதல்
அய்யய்யோ! காகங்கள் மரணத்திற்கு காரணம் இதுவா? மக்கள் செய்ய வேண்டியது இதுதான்!
அய்யய்யோ! காகங்கள் மரணத்திற்கு காரணம் இதுவா? மக்கள் செய்ய வேண்டியது இதுதான்!
அரசு கல்லூரிகளில் 426 விரிவுரையாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி? தகுதி, தேதி- முழு விவரம்!
அரசு கல்லூரிகளில் 426 விரிவுரையாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி? தகுதி, தேதி- முழு விவரம்!
Embed widget