மேலும் அறிய

திருச்சி மத்திய மண்டலத்தில் 88,376 பேர் சிறப்பு சலுகை மூலம் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பித்துள்ளனர்.

மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்டங்களில் மொத்தம் 88 ஆயிரம் பேர் சிறப்பு சலுகை மூலம் வேலைவாய்ப்பு பதிவைு புதுப்பித்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் உள்ள அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த தகவல்களை, கடந்த 3 ஆண்டுகளாக புதுப்பிக்காத பட்டதாரிகளுக்கு சில சலுகைகளை அளிப்பதாக அரசு முடிவெடுத்துள்ளது. அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக பதிவுகளை புதுப்பிக்காதவர்களுக்கு சில சலுகைகளை வழங்க முடிவெடுத்துள்ள தமிழக அரசு அதற்கான அரசாணையையும் வெளியிட்டுள்ளது. இதன் அடிப்படையில் ஒருவர் மூன்று மாதங்களுக்குள் தகவல்களை புதுப்பித்துக்கொள்ள முடியும். அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், ‘கடந்த 2017 முதல் 2019 வரையுள்ள ஆண்டுகளில் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்த சலுகையை பெற விரும்புபவர்கள் மூன்று மாதத்திற்குள்ளாக ஆன்லைனில் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். இந்த சலுகை ஒரு முறை மட்டுமே வழங்கப்படும். மூன்று மாதங்களுக்கு பிறகு அனுப்பப்படும் கோரிக்கைகள் நிராகரிக்கப்படும். 1-1-2017 க்கு முன் புதுப்பிக்க தவறியவர்களின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படாது தெரிவிக்கப்பட்டிருந்தது.

திருச்சி மத்திய மண்டலத்தில் 88,376  பேர் சிறப்பு சலுகை மூலம் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பித்துள்ளனர்.

இதன்படி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்டங்களில் மொத்தம் 88 ஆயிரம் பேர் சிறப்பு சலுகை மூலம் வேலைவாய்ப்பு பதிவைு புதுப்பித்து உள்ளனர். தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி வரை 71,55,917 பேர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். இதில் 18 வயதுக்குற்பட்ட பள்ளி மாணவர்கள் 12,91,125 பேர். 19 முதல் 23 வரை வரை உள்ள கல்லூரி மாணவர்கள் 18,89,886 பேர். 24 முதல் 35 வயது வரை உள்ளவர்கள் 26,59,276 பேர். 36 முதல் 57 வயது வரை உள்ளவர்கள் 13,04,299 ேபர். 58 வயதுக்கு மேற்பட்டவர்கள் 11,331 பேர் ஆகும்.இந்நிலையில் தமிழகத்தில் வேலை வாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு சலுகை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதன்படி 2017, 2018 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவினை பல்வேறு காரணங்களினால் புதுப்பிக்கத் தவறியவர்கள் மே மாதம் 28ம் தேதி முதல் ஆக்ஸ்ட் 28ம் தேதி வரை பதிவை புதுப்பித்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.இதன்படி http://tnvelaivaaippu.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவை புதுப்பித்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.

திருச்சி மத்திய மண்டலத்தில் 88,376  பேர் சிறப்பு சலுகை மூலம் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பித்துள்ளனர்.

இணையம் வாயிலாக பதிவினைப் புதுப்பிக்க இயலாத பதிவுதாரர்கள் குறிப்பிட்ட தேதிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு பதிவஞ்சல் மூலமாக விண்ணப்பம் அளித்து புதுப்பித்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பின் படி மத்திய மண்டத்தில் மொத்தம் 88,376 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பு பதிவை புதுப்பித்துள்ளனர். இதன்படி திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 19,346 பேரும், கரூரில் 6356 பேரும், புதுக்கோட்டையில் 12,149  பேரும், அரியலூரில் 5954 பேரும், பெரம்பலூரில் 4648 பேரும், தஞ்சாவூரில் 17,935 பேரும், திவாரூரில் 10,497 பேரும், நாகையில் 11,491 பேரும் என்று மொத்தம் 88,376 பேர் பதிவை புதுப்பித்துள்ளனர்.இதனுடன் சேர்த்து 12 லட்சம் பேர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். இதன்படி திருச்சியில் 2,55,934 பேர், கரூரில் 96,346, புதுக்கோட்டையில் 1,58,281 பேர், அரியலூரில் 1,23,859 பேர், பெரம்பலூரில் 66,907 பேர், தஞ்சாவூரில் 2,23,583 பேர், திருவாரூரில் 1,97,678 பேர், நாகையில் 1,50,579 பேர் என்று மொத்தம் 12,72,897 பேர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman Arrest?: எப்பவோ பத்த வச்ச வெடி இப்போதான் வெடிக்குது.. விரைவில் சீமான் கைது.?
எப்பவோ பத்த வச்ச வெடி இப்போதான் வெடிக்குது.. விரைவில் சீமான் கைது.?
சீமான் வீட்டு காவலாளி - போலீஸ் இடையே அடிதடி! அண்ணன் வீட்டில் சினிமா பாணியில் சண்டை!
சீமான் வீட்டு காவலாளி - போலீஸ் இடையே அடிதடி! அண்ணன் வீட்டில் சினிமா பாணியில் சண்டை!
PM Modi : ”என்னை மன்னிச்சிடுங்க” மக்களிடம் பிரதமர் மோடி கேட்ட திடீர் மன்னிப்பு.. ஏன் தெரியுமா?
PM Modi : ”என்னை மன்னிச்சிடுங்க” மக்களிடம் பிரதமர் மோடி கேட்ட திடீர் மன்னிப்பு.. ஏன் தெரியுமா?
GATE 2025 Answer key: வெளியான கேட் தேர்வு ஆன்சர் கீ; காண்பது, ஆட்சேபிப்பது எப்படி?
GATE 2025 Answer key: வெளியான கேட் தேர்வு ஆன்சர் கீ; காண்பது, ஆட்சேபிப்பது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கண்டுகொள்ளாத EPS? விழாவுக்கு வராத தங்கமணி! அதிமுகவில் மீண்டும் சிக்கல்Selvaperunthagai | ”செ.பெருந்தகைய மாத்துங்க... காங். கட்டப்பஞ்சாயத்து கமிட்டியா?” டெல்லிக்கு படையெடுத்த நிர்வாகிகள்! | Congress”ரூ.12,000 வச்சுக்கோங்க” கையில் கொடுத்த மாணவி! பூரித்து போன அமைச்சர்Amman Arjunan MLA: வருமானத்திற்கு அதிகமாக சொத்து!  எம்எல்ஏ வீட்டில் ரெய்டு! எஸ்.பி.வேலுமணிக்கு செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman Arrest?: எப்பவோ பத்த வச்ச வெடி இப்போதான் வெடிக்குது.. விரைவில் சீமான் கைது.?
எப்பவோ பத்த வச்ச வெடி இப்போதான் வெடிக்குது.. விரைவில் சீமான் கைது.?
சீமான் வீட்டு காவலாளி - போலீஸ் இடையே அடிதடி! அண்ணன் வீட்டில் சினிமா பாணியில் சண்டை!
சீமான் வீட்டு காவலாளி - போலீஸ் இடையே அடிதடி! அண்ணன் வீட்டில் சினிமா பாணியில் சண்டை!
PM Modi : ”என்னை மன்னிச்சிடுங்க” மக்களிடம் பிரதமர் மோடி கேட்ட திடீர் மன்னிப்பு.. ஏன் தெரியுமா?
PM Modi : ”என்னை மன்னிச்சிடுங்க” மக்களிடம் பிரதமர் மோடி கேட்ட திடீர் மன்னிப்பு.. ஏன் தெரியுமா?
GATE 2025 Answer key: வெளியான கேட் தேர்வு ஆன்சர் கீ; காண்பது, ஆட்சேபிப்பது எப்படி?
GATE 2025 Answer key: வெளியான கேட் தேர்வு ஆன்சர் கீ; காண்பது, ஆட்சேபிப்பது எப்படி?
இந்தியால் அழிந்த இந்திய மொழிகள் இத்தனையா? பட்டியல் போட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்
இந்தியால் அழிந்த இந்திய மொழிகள் இத்தனையா? பட்டியல் போட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்
Trump Vs Musk: சொல்லுங்க..எலான தூக்கி வெளில வீசிடலாம்.. அமைச்சரவை கூட்டத்தில் ட்ரம்ப் பேச்சால் பரபரப்பு...
சொல்லுங்க..எலான தூக்கி வெளில வீசிடலாம்.. அமைச்சரவை கூட்டத்தில் ட்ரம்ப் பேச்சால் பரபரப்பு...
Crying Disease: என்னடா இது புதுசா இருக்கு.!! உயிர்பலி வாங்கும் அழுகை வியாதி..எந்த நாட்டில் தெரியுமா.?
என்னடா இது புதுசா இருக்கு.!! உயிர்பலி வாங்கும் அழுகை வியாதி..எந்த நாட்டில் தெரியுமா.?
Seeman : கொடுத்த காசிற்கு கூவ வேண்டும்! பிரசாந்த் கிஷோரை தாக்கி பேசிய சீமான்
Seeman : கொடுத்த காசிற்கு கூவ வேண்டும்! பிரசாந்த் கிஷோரை தாக்கி பேசிய சீமான்
Embed widget