மேலும் அறிய

திருச்சி : அரசுப்பள்ளிகளில் சேர்ந்த 33 ஆயிரம் தனியார் பள்ளி மாணவர்கள்..!

திருச்சி மத்திய மண்டலத்தில் உள்ள மாவட்டங்களில் 33 ஆயிரம் மாணவர்கள் தனியார் பள்ளிகளில் இருந்து விலகி அரசு பள்ளியில் சேர்ந்து உள்ளனர்.

கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகள் செயல்படவில்லை. இதனால் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு கல்வி தொலைக்காட்சி மூலம் பாடங்களை நடத்தி வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் பெற்றோர்கள்  தங்களின் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர். குறிப்பாக தனியார் பள்ளியில் இருந்து அரசு பள்ளி நோக்கி வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே உள்ளது. இதன்படி மத்திய மண்டலத்தில் உள்ள மாவட்டங்களில் மட்டும் இந்தாண்டு இதுவரை 1 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்ந்துள்ளது. இதில் 33 ஆயிரம் பேர் தனியார் பள்ளிகளில் இருந்து அரசு பள்ளியை நோக்கி வந்துள்ளனர். இதனால் திருச்சி மத்திய மண்டலத்தில் அரசு பள்ளியில் மொத்த மாணவர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியுள்ளது. என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகும்போது பள்ளிகளில் தேவையான அடிப்படை வசதிகள், கட்டமைப்புகள் என  அனைத்தையும் பள்ளி நிர்வாகம் மேற்கொள்ளவேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உத்தரவிட்டுள்ளார். 

திருச்சி : அரசுப்பள்ளிகளில் சேர்ந்த 33 ஆயிரம் தனியார் பள்ளி மாணவர்கள்..!

திருச்சி மாவட்டத்தில் 1,293 அரசு பள்ளிகள் உட்பட மொத்தம் 2,110 பள்ளிகள் உள்ளன. இதில் கடந்த ஆண்டை காட்டிலும் நடப்பாண்டு 30 ஆயிரம் மாணவர்கள் கூடுதலாக அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். இந்தாண்டு ஒன்றாம் வகுப்பில் 11,327 , 2-ஆம் வகுப்பில் 12,402, 3-ஆம் வகுப்பில் 12,802 , 4-ஆம் வகுப்பில் 13,822, 5-ஆம் வகுப்பில் 14,470 , 6-ஆம் வகுப்பில் 12,963 , 7-ஆம் வகுப்பில் 14,005, 8ம் வகுப்பில் 13,836 , 9ம் வகுப்பில் 13,404 , 10ம் வகுப்பில் 13,453 , 11ம் வகுப்பில் 11,836 , 12ம் வகுப்பில் 11,777 என நடப்பாண்டு 1,56,079 சேர்ந்துள்ளனர். மொத்தம் 7,233 மாணவர் கூடுதலாக சேர்ந்துள்ளனர். அரசு உதவி பெறும் பள்ளியில், 12,668 பேரும், தனியார் பள்ளிகளில் 13,072 என மொத்தம் 25,740 பேர் விலகி உள்ளனர்.  புதுக்கோட்டை மாவட்டத்தில் 2021-2022 கல்வியாண்டில் 1ம் வகுப்பில் 522, 2ம் வகுப்பில் 560 மாணவர்களும், 3ம் வகுப்பில் 615, 4ம் வகுப்பில் 567, 5ம் வகுப்பில் 500, 6ம் வகுப்பில் 1364, 7-ஆம் வகுப்பில் 292, 8ம் வகுப்பில் 313 ,9ம் வகுப்பில் 317, 10ம் வகுப்பில் 40,11ம் வகுப்பில் 776, 12ம் வகுப்பில் 67 மாணவர்கள் என மொத்தம் 5933 மாணவர்கள் தனியார் பள்ளிகளில் படித்தவர்கள் அரசுப் பள்ளியை நோக்கி வந்துள்ளனர்.

திருச்சி : அரசுப்பள்ளிகளில் சேர்ந்த 33 ஆயிரம் தனியார் பள்ளி மாணவர்கள்..!

நாகை மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 1-ஆம் வகுப்பில் 8521 பேர், 2ம் வகுப்பில் 3721, 3ம் வகுப்பில் 4021, 4ம் வகுப்பில் 3033, 5ம் வகுப்பில் 3021, 6ம் வகுப்பில் 12,289, 7ம் வகுப்பில் 8021, 8ம் வகுப்பில் 8077, 9ம் வகுப்பில் 9021, 10ம் வகுப்பு 8021, 11ம் வகுப்பில் 11863 என்று மொத்தம் 79,609 பேர் சேர்ந்துள்ளனர். கடந்த ஆண்டு 69021 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். கடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டில் 10588 மாணவர்கள் கூடுதலாக அரசு பள்ளியில் சேர்ந்துள்ளனர். இதில் 4 ஆயிரம் மாணவர்கள் தனியார் பள்ளிகளில் இருந்து விலகி அரசு பள்ளியில் சேர்ந்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் 2021-2022 ஆம் கல்வி இதில் எல்கேஜியில் 351, யுகேஜியில் 167, 1ம் வகுப்பில் 4,160, 2ம் வகுப்பில் 854, 3ம் வகுப்பில் 962, 4ம் வகுப்பில் 790, 5ம் வகுப்பில் 764, 6ம் வகுப்பில் 404, 7ம் வகுப்பில் 88, 8ம் வகுப்பில் 45, 9ம் வகுப்பில் 1,031, 10ம் வகுப்பில் 55, 11 மற்றும் 12 வகுப்புகளில் 4,808 பேர் என மொத்தம் 17,839 பேர் புதிதாக சேர்ந்துள்ளனர். இவற்றில் 6ம் வகுப்பில் 431, 7ம் வகுப்பில் 121, 8ம் வகுப்பில் 103, 9ம் வகுப்பில் 164, 10ம் வகுப்பில் 21, 11ம் வகுப்பில் 206, 12ம் வகுப்பில் 3 பேர் என மொத்தம் 1,049 பேர் அரசுப்பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் 53 மேல்நிலைப் பள்ளிகளும், 118 உயர்நிலைப் பள்ளிகளும், 110 நடுநிலைப் பள்ளிகளும், 467 துவக்கப் பள்ளிகள் உள்ளன. இதில் சென்ற கல்வியாண்டில்(20-21) முதல் வகுப்பில் 4674 மாணவர்களும், இந்த கல்வியாண்டில் 4932 மாணவர்களும் சேர்ந்துள்ளார். 258 மாணவர்கள் சென்ற ஆண்டைவிட கூடுதலாக சேர்ந்துள்ளனர்.

ஆறாம் வகுப்பில் சென்ற ஆண்டு 5991 மாணவர்களும், இந்த ஆண்டு 7424 மாணவர்களும் சேர்ந்துள்ளனர். இதில் 1432 மாணவர்கள் சென்ற ஆண்டைவிட கூடுதலாக சேர்ந்துள்ளனர். பதினோராம் வகுப்பில் சென்ற ஆண்டு 5134 மாணவர்களும், இந்த ஆண்டு 5807 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இவ்வாறு சென்ற கல்வி ஆண்டை காட்டிலும் இந்த கல்வியாண்டில் கூடுதலாக இணைந்த 2363 மாணவர்கள் தனியார் பள்ளியில் இருந்து அரசு பள்ளிக்கு சேர்ந்தவர்கள்.

திருச்சி : அரசுப்பள்ளிகளில் சேர்ந்த 33 ஆயிரம் தனியார் பள்ளி மாணவர்கள்..!

திருவாரூர் மாவட்டத்தில் தனியார் பள்ளிகளில் இருந்து 3 ஆயிரத்து 764 மாணவர்களும், அரசு உதவி பெறும் பள்ளிகளிலிருந்து 3,964 மாணவர்களும் மற்றும் சொந்த நிதியில் இயங்கும் பள்ளிகள் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளில் இருந்து 462 மாணவர்களும் என மொத்தம் 8 ஆயிரத்து 190 மாணவர்கள் தனியார் பள்ளிகளில் இருந்து அரசு பள்ளியில் நடப்பாண்டில் சேர்ந்துள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தியாகராஜன் தெரிவித்துள்ளார். இதன்படி எல்கேஜி வகுப்பில் 575, யுகேஜியில் 1103, 1ம் வகுப்பில் 6351, 2ம் வகுப்பில் 7 172, 3ம் வகுப்பில் 7551, 4ம் வகுப்பில் 8207, 5ம் வகுப்பில் 8490, 6ம் வகுப்பில் 7581, 7ம் வகுப்பில் 8487, 8ம் வகுப்பில் 8278, 9ம் 7591, 10ம் 8193, 11ம் 5475, 12-ஆம் வகுப்பில் 6 ஆயிரத்து456 என எல்ஜி முதல் 12ம் வகுப்பு வரையில் ஜூலை 20ந் தேதி கணக்கெடுப்பின்படி மொத்தம் 91 ஆயிரத்து 110 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் இந்த கல்வியாண்டில் பிரிகேஜியில் 402 பேர்,எல்கேஜியில் 188 பேர், 1ம் வகுப்பில் 10,938, 2ம் வகுப்பில் 1338, 3ம் வகுப்பில் 1319, 4ம் வகுப்பில் 1222, 5ம் வகுப்பில் 1195, 6ம் வகுப்பில் 11,205, 7ம் வகுப்பில் 663, 8ம் வகுப்பில் 653, 9ம் வகுப்பில் 3080, 10ம் வகுப்பில் 151, 11ம் வகுப்பில் 13,498, 12ம் வகுப்பில் 3 என்று மொத்தம் 45,855 பேர் சேர்ந்துள்ளனர். இதில் பிரிகேஜியில் 19 பேர்,எல்கேஜியில் 28 பேர், 1ம் வகுப்பில் 458, 2ம் வகுப்பில் 927, 3ம் வகுப்பில் 947, 4ம் வகுப்பில் 903, 5ம் வகுப்பில் 829, 6ம் வகுப்பில் 2158, 7ம் வகுப்பில் 411, 8ம் வகுப்பில் 398, 9ம் வகுப்பில் 436, 10ம் வகுப்பில் 35, 11ம் வகுப்பில் 2742, 12ம் வகுப்பில் 12 பேர் என்று மொத்தம் 10,303 தனியார் பள்ளியில் இருந்து அரசுப்பள்ளியில் பேர் சேர்ந்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!
TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Sunil Gavaskar: ட்ராவிட்டிற்கு இதுதான் உயர்ந்த கெளரவமாக இருக்கும்! அரசுக்கு கவாஸ்கர் வைத்த முக்கிய கோரிக்கை!
Sunil Gavaskar: ட்ராவிட்டிற்கு இதுதான் உயர்ந்த கெளரவமாக இருக்கும்! அரசுக்கு கவாஸ்கர் வைத்த முக்கிய கோரிக்கை!
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
Embed widget