மேலும் அறிய

சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல் காணிக்கை 12 நாட்களில் இவ்வளவா?

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவயிலில் கடந்த 12 நாட்களில் மட்டும் 93 லட்சம் வரை பக்தர்கள் உண்டியல் காணிக்கைகளை செலுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது...

தமிழ்நாட்டில் சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலமாக திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவில் திகழ்ந்து வருகிறது. கேட்டதை தருபவள், நினைத்ததை நிறைவேற்றுபவள், சங்கடங்கள் எத்தனை வந்தாலும் துணை நின்று காப்பவள் என சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய செல்வார்கள்.

அதிலும் குறிப்பாக ஆடி மாதம் என்றாலே தமிழ்நாடு மட்டுமல்ல பிற மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நடைபாதையாக சென்று தங்களது நேற்றிக்கடன் செலுத்துவது வழக்கம்.

ஆடி மாதம் முழுவதும் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் ஆராதனைகள் தொடர்ந்து நடைபெறும்.

குறிப்பாக ஆண்டு தோறும் நடைபெறும் தேர் திருவிழா மற்றும் மாசி, பங்குனி மாதங்களில் நடைபெறும் பச்சை பட்டினி விரதம் உள்ளிட்ட நிகழ்வுக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் தரிசனம் செய்ய வருவார்கள் அப்போது சமயபுரமே விழாக்கோலம் கொண்டிருக்கும்.

சமயபுரம் மாரியம்மனை மனதில் நினைத்து பூஜை செய்தால், வேண்டியவை அனைத்தும் நிறைவேறும். சங்கடங்கள் அனைத்தும் நீங்கும். இத்தகைய உலக சிறப்புமிக்க சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தினம்தோறும் விழா கோலமாக காட்சி அளிக்கும். 

சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல் காணிக்கை 12 நாட்களில் இவ்வளவா?

குறிப்பாக சமயபுரம் மாரியம்மன் இடம் எதை வேண்டினாலும் கிடைக்கும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் பொதுவாக உள்ளது. ஆகையால் மக்கள் தங்களுடைய இன்னல்களை தீர்க்க பலவிதமான நேத்தி கடன்களை வேண்டுதலாக வைத்து சமயபுரம் மாரியம்மனுக்கு பூஜை செய்வார்கள்.

அதேசமயம் பொதுமக்கள் வேண்டுதல் நிறைவேறினால் அவர்களுக்கு ஏற்றவாறு உண்டியலில் காணிக்கை செலுத்தவது வழக்கம். 

அந்த வகையில் பக்தர்கள் கோயில் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை கோயிலின் மண்டபத்தில் கோயில் இணை ஆணையர் பிரகாஷ் தலைமையில் உதவி ஆணையர்கள் முன்னிலையில் தன்னார்வலர்கள் , கோயில் பணியாளர்கள், வங்கி பணியாளர்கள் உள்ளிட்டோர் எண்ணுவது வழக்கம்.

கோவில் உண்டியலில் வசூல்
அதேபோல் கடந்த 12 நாட்களில் கோவில் உண்டியலில் வசூல் செய்யப்பட்ட காணிக்கைகள் அனைத்தும் நேற்று எண்ணப்பட்டது. கோவில் இணை ஆணையர் முன்னிலையில் பலத்த பாதுகாப்புடன் கோவில் காணிக்கைகள் அனைத்தும் எண்ணப்பட்டது.

சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல் காணிக்கை 12 நாட்களில் இவ்வளவா?

சமயபுரம் மாரியம்மன் உண்டியல் காணிக்கை விபரம்..

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பக்தர்கள் செலுத்திய் காணிக்கைகள் கடந்த 12 நாட்களில் கோயில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகளை எண்ணியதில் 93 லட்சத்து, 57 ஆயிரத்து, 414 ரூபாய் ரொக்கமும், 1 கிலோ 990 கிராம் தங்கமும், 3 கிலோ 475 கிராம் வெள்ளியும், 217 அயல்நாட்டு நோட்டுகளும், 1011 அயல்நாட்டு நாணயங்களும் கிடைக்கப் பெற்றது.

அருள்மிகு ஆதி மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை
அதேபோல் சமயபுரம் மாரியம்மன் கோயிலின் உப கோயிலான அருள்மிகு ஆதி மாரியம்மன் கோயிலில் ரூ.7 லட்சத்து 3 ஆயிரத்து 521 ரூபாய் ரொக்கமும், உஜ்ஜயினி மாகாளியம்மன் கோயிலில் 12 ஆயிரத்து 805 ரூபாய் ரொக்கமும், போஜீஸ்வரர் கோயிலில் ரூ.5 ஆயிரத்து 772 ரொக்கமும் கிடைக்கப் பெற்றன என கோயிலின் இணை ஆணையர் பிரகாஷ் தகவல் தெரிவித்தார்.

குறிப்பாக கடந்த 12 நாட்களில் மட்டும் 93 லட்சம் வரை பக்தர்கள் உண்டியல் காணிக்கைகளை செலுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

HMPV Virus China | மீண்டும் LOCKDOWN? சீனாவிலிருந்து அடுத்த பயங்கரம் அச்சுறுத்தும் HMPV வைரஸ்! INDIASU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிTamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
சீமான்  நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு - அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்
சீமான் நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு - அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்
Embed widget